அரசு கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்பங்கள் இம்மாதம் 15-ம் தேதி முதல் வழங்கப்படும் என தெரிகிறது.
தமிழகத்தில் உள்ள பல்வேறு மாவட்டங்களில் 69 அரசு கலை, அறிவியல் கல்லூரிகள் உள்ளன. இவற்றில் 2009-10 கல்வி ஆண்டு மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது.
இந்த கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் தொடங்கும் என்று ஏற்கெனவே தெரிவிக்கப்பட்டு இருந்தது.
இந்த நிலையில் பிளஸ் 2 தேர்வு முடிவுகள் வியாழக்கிழமை (14-ம் தேதி) வெளியிடப்பட உள்ளது.
கலை, அறிவியல் கல்லூரிகளில் சேருவதற்கான விண்ணப்ப விநியோகம் குறித்து கல்லூரி கல்வி இயக்குநரகம் கூறியுள்ளதாவது: "அனைத்து கல்லூரிகளிலும் மாணவர் சேர்க்கைக்கான விண்ணப்பங்கள் அச்சடிக்கப்பட்டு தயார் நிலையில் உள்ளன.

பிளஸ் 2 தேர்வு முடிவு வெளியான மறுநாள் விண்ணப்ப விநியோகத்தைத் தொடங்க திட்டமிட்டுள்ளோம்.
அதன்படி, விண்ணப்ப விநியோகம் குறித்து வியாழக்கிழமை முடிவு செய்து, அனைத்து கல்லூரிகளுக்கும் தகவல் அளிக்கப்படும்'.
எனவே, வரும் 15-ம் தேதி முதல் விண்ணப்பம் வழங்கப்படும் என தெரிகிறது.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக