பரங்கிப்பேட்டை தகவல் களஞ்சியம்

புதன், 13 மே, 2009

ஏழு லட்சம் மாணவ-மாணவிகள் ஆவலுடன் எதிர்பார்த்த +2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) வெளியிடப்படுகிறது. இந்த தகவலை பள்ளிக் கல்வி இயக்குனர் பி. பெருமாள்சாமி அறிவித்துள்ளார்.

+2 தேர்வு

தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் பிளஸ்-2 தேர்வு கடந்த மார்ச் மாதம் 2-ந் தேதி தொடங்கியது.

மாணவர்களின் வாழ்க்கையில் திருப்பு முனையாக விளங்குவது +2 தேர்வு. இந்த தேர்வில் எடுக்கும் மதிப்பெண்களை கொண்டுதான் அவர்கள் டாக்டர்களாகவோ, என்ஜினீயர்களாகவோ, அறிவியல் மற்றும் கலை பட்டதாரிகளாகவோ வரமுடியும்.

அத்தகைய முக்கியத்துவம் வாய்ந்த +2 தேர்வை 5 ஆயிரத்து 40 பள்ளிக்கூடங்களை சேர்ந்த 6 லட்சத்து 47 ஆயிரத்து 630 பேர் 1,738 மையங்களில் எழுதினார்கள். இவர்களில் 3 லட்சத்து 4 ஆயிரத்து 900 பேர் மாணவர்கள். 3 லட்சத்து 42 ஆயிரத்து 730 பேர் மாணவிகள்.

கடந்த ஆண்டைவிட 54 ஆயிரத்து 326 பேர் கூடுதலாக எழுதினார்கள்.

தீவிர பாதுகாப்பு

புதுச்சேரியில் 29 மையங்களில் 87 பள்ளிகளைச் சேர்ந்த 10 ஆயிரத்து 965 பேர் எழுதினார்கள். சென்னையில் 435 பள்ளிகளைச் சேர்ந்த 47 ஆயிரத்து 860 பேர் எழுதினார்கள். இவர்கள் தவிர தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் தனித்தேர்வர்கள் 41 ஆயிரம் பேர் தேர்வு எழுதினார்கள்.

இந்த வருடம் எந்த வருடமும் இல்லாத அளவுக்கு வினாத்தாள் இருப்பு மையங்களிலும், தேர்வு மையங்களிலும் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது. பறக்கும் படையினரும் மிகவும் தீவிரமாக ஈடுபட்டனர். தேர்வு மார்ச் 23-ந் தேதி முடிவடைந்தது.

நாளை வெளியாகிறது

இந்த நிலையில் 7 லட்சம் மாணவ-மாணவிகள் ஆர்வத்துடன் எதிர்பார்த்த +2 தேர்வு முடிவு நாளை (வியாழக்கிழமை) காலை வெளியிடப்படுகிறது.

இது குறித்து பள்ளிக்கல்வி இயக்குனர் பி.பெருமாள்சாமி நேற்று மாலை வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

மார்ச் 2009-ல் நடைபெற்ற மேல்நிலை பொதுத்தேர்விற்கான முடிவை, 14-ந் தேதி (நாளை) காலை 9 மணிக்கு சென்னை நுங்கம்பாக்கம் டி.பி.ஐ. வளாகத்தில் உள்ள அரசு தேர்வுத்துறை இயக்குனர் அலுவலகத்தில் இயக்குனர் வசந்தி ஜீவானந்தம் வெளியிடுகிறார்.

அதே நேரத்தில் பள்ளிக்கூட மாணவ-மாணவிகள் அவர்கள் படித்த பள்ளிக்கு சென்று தலைமை ஆசிரியர் மூலமாக மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம்.

இணையதளத்தில்

பின்வரும் இணையதளங்கள் மற்றும் செல்போன் எண்கள் மூலமாகவும் தெரிந்து கொள்ளலாம்.

மேலும், பி.எஸ்.என்.எல். லேண்ட்லைன் எண்ணிலும் (1250108), பி.எஸ்.என்.எல். மொபைல் எண்ணிலும் (1250108) தேர்வு முடிவை தெரிந்து கொள்ளலாம்.

மேற்கண்டவாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

மொபைல் போனில்...

தினத்தந்தி வாசகர்கள் +2 பரீட்சை மதிப்பெண்களை தெரிந்து கொள்ள உங்கள் மொபைல் போனில் DTHSC என டைப் செய்து ஒரு ஸ்பேஸ் விட்டு உங்கள் பரீட்சை எண்ணையும் டைப் செய்து 54545 என்ற எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். அனுப்பினால் உங்கள் மதிப்பெண் பட்டியல் சில வினாடிகளில் உங்கள் மொபைல் போனில் வரும்.

0 கருத்துரைகள்!:

கருத்துரையிடுக

 • காவல் - 243224
 • மருத்துவமனை(G.H.) - 253996
 • ஆம்புலன்ஸ் - 253800
 • தீ - 243303
 • மின் வாரியம் - 253786
 • துணை மின்நிலையம் - 247220
 • தொலைபேசி BSNL - 243298
 • பேரூராட்சி - 243249
 • பேரூராட்சி - 243249
 • பஞ்சாயத்து யூனியன் - 243227
 • கேஸ் சர்வீஸ் - 243387
 • ஜமாஅத் - 253800
 • அஞ்சல் நிலையம் - 243203
 • சின்னகடை P.O. - 243230
 • இரயில்வே - 243228

 • Dr அங்கயற்கண்ணி - 253922
 • Dr அமுதா (SMC) . - 243392
 • Dr நகுதா Maricar - 243673
 • Dr பார்த்தசாரதி - 243396
 • Dr பிரேம்குமார் - 253580
 • Dr ஷகீலா பேகம் - 243234