ஞாயிறு, 17 மே, 2009

இறப்பு செய்தி தந்திக்கு இனி ரூ.28

இறப்புச் செய்தியை தந்தி மூலம் கொடுப்பதற்கு இனி ரூ. 28 கட்டணம் செலுத்த வேண்டும்.

மத்திய தொலைத் தொடர்புத் துறை அமைச்சகத்தின் கீழ் இயங்கும் தந்தி பிரிவில் கட்டண உயர்வு சனிக்கிழமை அமலுக்கு வந்தது.


இதற்கான அறிவிப்பை பி.எஸ்.என்.எல். வெளியிட்டுள்ளது.

தந்திகள் இனி 'எக்ஸ்பிரஸ் தந்தி' என்ற பிரிவில் மட்டுமே ஏற்கப்படும்.

குறைந்தபட்ச கட்டணம் ரூ.25. இதில் அதிகபட்சம் 30 வார்த்தைகள் வரை வாசகங்கள் இருக்கலாம் என பி.எஸ்.என்.எல். தெரிவித்துள்ளது.

இதற்கு சேவை வரி ரூ.3 வரும். எனவே இனி ஒரு தந்தி கொடுப்பதற்கு ரூ.28 செலவிட வேண்டும்.

இதுவரை சாதாரண தந்திக்கு ரூ.3.50 மட்டுமே கட்டணமாக இருந்தது. 10 வார்த்தைகள் வரை அதில் தரலாம்.

இதுவே எக்ஸ்பிரஸ் தந்தியாக இருந்தால் இரண்டு மடங்கு கட்டணம். இதற்கு சேவை வரிகள் கூடுதலாக உண்டு.

இறப்புச் செய்திக்கான தந்தியாக இருந்தால் சாதாரண கட்டணத்திலேயே, எக்ஸ்பிரஸ் தந்திக்கான முன்னுரிமையில் அனுப்பப்படும்.

சனிக்கிழமையில் இருந்து அமலுக்கு வரும் புதிய திட்டத்தில் இறப்புச் செய்திகளுக்கும் எக்ஸ்பிரஸ் தந்திக்கான ரூ.25 (வரி சேர்த்து ரூ.28) செலுத்த வேண்டும்.

மத்தியில் தொலைத்தொடர்புத் துறை அமைச்சராக தயாநிதி மாறன் இருந்தபோது நாடு முழுக்க ரூ.1 கட்டணத்தில் தொலைபேசியில் பேசும் 'ஒன் இந்தியா' திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அத் துறையின் பொறுப்பை ஆ. ராசா ஏற்ற பிறகு பி.எஸ்.என்.எல். செல்போனில் 50 பைசாவுக்கு நாடு முழுக்க பேசும் திட்டத்தைக் கொண்டு வந்தார்.

அதே துறையின் கீழ் இயங்கும் தந்தி சேவையில், பல பகுதிகளில் தந்தி பிரிவே மூடப்பட்டுவிட்டது.

இப்போது சேவை இருக்கும் பகுதியிலும் கட்டணம் ஏறத்தாழ 7 மடங்கு உயர்த்தப்படுகிறது. 1983-ம் ஆண்டுக்குப் பிறகு தந்தி கட்டணம் உயர்த்தப்படவில்லை. ஏழைகளின் அவசர தகவல் பரிமாற்றத்துக்கு உதவுவதால் இந்தக் கட்டணத்தில் அரசு கை வைக்கவில்லை.

ஆட்சி முடியும் நேரத்தில், கட்டண உயர்வு அறிவிப்பை பி.எஸ்.என்.எல். அறிவித்துள்ளது.

தேர்தல் வாக்குப் பதிவுக்கு முன்பே இதுகுறித்து முடிவு எடுக்கப்பட்டுவிட்டது. அப்போதே அறிவித்திருந்தால் தேர்தலில் காங்கிரஸ் -திமுக கூட்டணிக்கு எதிரான பிரசாரத்தில் இதுவும் முக்கிய இடம் பெற்றிருக்கும்.

வாக்குப் பதிவு முடிந்து, தேர்தல் முடிவு வெளியாகும் நிலையில் எல்லோரின் கவனமும் முடிவை அறிவதில்தான் இருக்கும்.

எனவே, யாரும் கவனிக்காமல், அப்படியே கவனித்தாலும் பெரிய எதிர்ப்பு ஏதுமின்றி அமல்படுத்தும் வகையில் இப்போது இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது என பி.எஸ்.என்.எல். அதிகாரிகள் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...