பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:-
இந்த தேர்வில் மாணவிகளை விட மாணவர்களே அதிக அளவில் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
5 லட்சத்து 32 ஆயிரத்து 222 மாணவ- மாணவிகள் வெற்றி பெற்றுள்ளனர். இது 83 சதவீத தேர்ச்சியாகும்.
இது கடந்த ஆண்டை விட குறைவு.
இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி உள்ளார்கள்.
இந்த ஆண்டு அதிக அளவில் மாணவ- மாணவிகள் தேர்வு எழுதி உள்ளார்கள்.
தேர்ச்சி விகிதம் குறைந்ததற்கு இதுவும் ஒரு காரணமாகும்.
மாணவர்கள் பெற்ற மதிப்பெண்கள் அடங்கிய அட்டவணைப்படுத்தப்பட்ட மதிப்பெண் பட்டியல் அவரவர்கள் பயின்ற பள்ளியில் இன்றே ஒட்டப்படும்.
மதிப்பெண் சான்றிதழ்கள் 25-ந்தேதி (திங்கட்கிழமை) அந்தந்த பள்ளி தலைமை ஆசிரியர்கள் மூலம் வழங்கப்படும்.
தனித் தேர்வர்கள் தாங்கள் தேர்வு எழுதிய மையங்களில் இருந்து மதிப்பெண் சான்றிதழ்களை பெற்றுக் கொள்ளலாம்.
கணிதம், இயற்பியல், வேதியியல், உயிரியல், விலங்கியல், தாவரவியல் மற்றும் கணினி அறிவியல் பாடங்களுக்கு விடைத்தாள் நகல் கேட்டு விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பம் 18-ந்தேதி முதல் 21-ந்தேதி வரை முதன்மை கல்வி அலுவலகம், மாவட்ட கல்வி அலுவலர் அலுவலகம், அரசு தேர்வு மண்டல துணை இயக்குனர் அலுவலகங்களில் விற்பனை செய்யப்படும்.
விடைத்தாள் நகல் பெற ஒரு பாடத்திற்கு ரூ. 275 கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
விடைத்தாள் நகல் பெற்றவர்கள் மட்டுமே விடைத்தாள் மறு மதிப்பீடு செய்ய விண்ணப்பிக்க வேண்டும்.
மறு மதிப்பீடு கட்டணம் ஒரு பாடத்திற்கு ரூ. 505 ஆகும்.
மறு கூட்டலுக்கு கட்டணம் உயிரியல் பாடத்திற்கு ரூ. 305ம், மற்ற பாடங்களுக்கு ரூ. 205ம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
பிளஸ்-2 தேர்வு எழுதியவர்களில் 3 அல்லது அதற்கு குறைவான பாடங்களில் தோல்வியுற்று இருந்தால் ஜுன் / ஜுலையில் சிறப்பு துணைத் தேர்வு எழுதலாம்.
இதற்கான விண்ணப்பம் 18-ந்தேதி முதல் 22-ந்தேதி வரை வழங்கப்படுகிறது.
சிறப்பு துணை தேர்வு ஜுன் 22-ந்தேதி முதல் ஜுலை 2-ந்தேதி வரை நடைபெறுகிறது என்று கூறினார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக