மாணவர்கள் பிளஸ் 2வில் தேர்ச்சி பெற்ற சில வாரங்களிலேயே அடுத்து எந்த படிப்பில் சேர்வது என்ற முக்கிய முடிவை எடுக்க வேண்டியுள்ளது.
உடனடியாக வேலை வழங்கும் படிப்பில் சேர்வதே பெரும்பாலான மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் விருப்பமாக உள்ளது.
கடுமையான போட்டிகள் நிலவும் மருத்துவம், இன்ஜினியரிங், ஆர்க்கிடெக்சர் போன்ற உயர் படிப்பில் சேரவே பெரும்பாலானோர் ஆர்வம் காட்டுகின்றனர்.
ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் பொதுவாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
ஒரு படிப்பை தேர்ந்தெடுக்கும் முன் பொதுவாக சில விஷயங்களை கவனத்தில் கொள்ள வேண்டும்.
- 1. மாணவர்களின் விருப்பம்
- 2. அவர்களின் கற்கும் திறன்
- 3. குடும்பத்தின் பொருளாதார சூழ்நிலை
- 4. பாலினம் (ஆண் / பெண்)
- 5. இருப்பிடத்துக்கும், கல்வி நிறுவனத்துக்கும் இடையே உள்ள தூரம்
- 6. உயர்கல்வியில் வாய்ப்பு
- 7. படிப்பின் காலம்
- 8. உடனடியாக வேலை வழங்கக்கூடிய படிப்பு
- 1. கல்வி நிறுவனத்தின் வரலாறு மற்றும் அதன் தனிச்சிறப்பு
- 2. உள்கட்டமைப்பு வசதிகள் (நூலகம், ஹாஸ்டல், கம்ப்யூட்டர் மையம்)
- 3. கல்வி நிறுவனத்தின் அங்கீகாரம் / பாடத்திட்டங்கள்
- 4. அக்கல்லூரியில் பயின்ற பழைய மாணவர்கள் தற்போதைய நிலை
- 5. கேம்பஸ் தேர்வுக்கான சாத்தியக்கூறுகள்
- 6. கல்விக் கட்டணம் மற்றும் பிற கட்டணங்கள்
- 7. கல்வி உதவித் தொகை மற்றும் பிற உதவிகள்
- 8. தேர்வு செய்யும் துறையின் வளர்ச்சி
- 9. மேற்படிப்புக்குரிய சாத்தியக்கூறுகள்
- 10. ஹாஸ்டல் வசதி
இன்ஜினியரிங் மற்றும் தொழில் நுட்பத் துறைகள் இன்ஜினியரிங் மற்றும் தொழில்நுட்பம் படிக்க 4 ஆண்டுகள் ஆகும். ஆனால் ஆர்க்கிடெக்சர் படிப்பிற்கு 5 ஆண்டுகள் ஆகும். இன்ஜினியரிங், தொழில்நுட்பம், ஆர்க்கிடெக்சர் பட்டதாரிகள் உயர்கல்வி படிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன. கிராஜூவேட் அப்டிடியூட் டெஸ்ட் இன் இன்ஜினியரிங் எனப்படும் ‘கேட்’ தேர்வில் வெற்றி பெறும் மாணவர்கள் அரசின் ஸ்காலர்ஷிப் உதவியுடன் மேற்படிப்பை தொடரலாம்.
1. ஏரோ நாட்டிக்கல் / ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங்:
ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங் என்பது விமானத்தின் வடிவமைப்பு, கட்டுமானம், சோதனை, செயல்பாடுகள், பராமரித்தல் போன்றவற்றுடன் தொடர்புடையது. விண்வெளிக்கு செல்லும் ராக்கெட்கள் பற்றியும் இதில் கற்றுத்தரப்படுகிறது. இவை இரண்டும் சேர்ந்த படிப்பு ஏரோ ஸ்பேஸ் இன்ஜினியரிங். ஏரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங்கும், அஸ்ட்ரோ நாட்டிக்கல் இன்ஜினியரிங்கும் ஒருங்கிணைக்கப்பட்ட படிப்பு என்றும் கூறலாம். வணிக மற்றும் ராணுவ விமானங்கள் பற்றியும், ஏவுகணைகள் மற்றும் செயற்கைக் கோள்கள் ஆகியவற்றைப் பற்றியும் இதில் கற்றுத் தரப்படுகிறது.
சிறந்த வல்லுனர்களை உருவாக்கும் இது ஒரு சவால் மிக்க துறை.
விமானம் ஓட்டுதல், விண்வெளி ஆய்வுகளில் ஈடுபடுதல் மற்றும் பாதுகாப்பு போன்றவற்றை இந்த படிப்பு உள்ளடக்கியுள்ளது. வடிவமைப்பு, கட்டுமானம், சோதனை, வணிக மற்றும் ராணுவ விமானங்களைப் பராமரித்தல், ராக்கெட்டுகள் மற்றும் அதன் பாகங்கள், செயற்கைக் கோள்கள், ஏவுகணைகள் போன்றவற்றைப் பற்றிய சிறப்பு பயிற்சிகளை இந்த படிப்பு வழங்குகிறது.
ஏரோ டைனாமிக், ஏரோ எலாஸ்டிசிட்டி, ஏரோ ஸ்பேஸ் புரப்பல்சன், விண்கலங்களைச் செலுத்துதல், விண்கலங்களின் அமைப்பு, விண்கலங்கள், விமானங்களின் வடிவமைப்பு, ஏர்கிராப்ட் பிளைட் டைனாமிக்ஸ், விமானங்களை முன்னோக்கிச் செலுத்துதல், விமானத்தின் வேகத்தை கணக்கிடுதல், விமானக் கட்டுப்பாட்டு தொழில்நுட்பம், விமானத் தொழில் நுட்பம், புளூயிட் மெக்கானிக்ஸ், கேஸ் டைனாமிக்ஸ், வெப்பம் கடத்துதல், ஹைபர் சோனிக் புளோ தியரி, இன்ஸ்ட்ரூமென்டேஷன், விமானத்தை தரையிறக்குவது மற்றும் மேட்ரிக்ஸ் கம்ப்யூட்டேஷன், மெஷர்மென்ட் அண்டு இன்ஸ்ட்ரூமென்டேஷன், ஸ்பேஸ் பிளைட் டைனாமிக்ஸ் ஆகிய பாடங்கள் இந்த படிப்பில் உள்ளன.
வேலை வாய்ப்புகள்: அர்ப்பணிப்பு உணர்வும், திறமையும், அறிவும் உள்ள மாணவர்களுக்கு இத்துறையில் சிறந்த எதிர்காலம் உள்ளது. விமான நிலையங்கள் (உள்நாடு மற்றும் வெளிநாடுகளில் செயல்படும் தனியார் மற்றும் அரசு நிறுவனங்கள்), விமான தயாரிப்பு நிறுவனங்கள், பாதுகாப்புப் படைகள், இஸ்ரோ, டி.ஆர்.டி.ஓ., சிவில் விமான போக்குவரத்து அமைச்சகத்தின் விமானம் ஓட்டும் பயிற்சி மையங்கள் போன்ற அரசுத் துறைகளிலும் வேலை வாய்ப்புகள் உள்ளன.
2. விவசாய இன்ஜினியரிங்:
விவசாயத்துறையில் இயந்திரமயமாதல் அதிகரித்து வருகிறது. நவீன தொழில் நுட்பங்கள் விவசாயத்தை மேம்படுத்துவது, செலவுகளை குறைப்பது போன்ற நன்மைகளை வழங்குகின்றன.
இயந்திரங்கள், டிராக்டர்கள், மோட்டார் பம்புகள், தாவர உற்பத்தி உபகரணங்கள், களை நீக்கும் கருவி மற்றும் அறுவடை செய்யும் கருவிகள் போன்ற நவீன இயந்திரங்களும், தொழில்நுட்பமும் விவசாயத்தை திறம்பட மேம்படுத்த உதவுகின்றன. தானிய சேமிப்புக் கூடங்கள், களஞ்சியங்கள், பண்டகசாலைகள் ஆகியவற்றின் வடிவமைப்பு மற்றும் கட்டுமானம் போன்றவற்றைக் கொண்டுள்ளது. சாயில் அண்டு வாட்டர் இன்ஜினியரிங், சாயில் கான்சர்வேஷன், அக்ரிகல்சுரல் பிராசசிங், சானிட்டேஷன், ரினிவேபில் எனர்ஜி, லே அவுட் அண்டு மெயின்டெனஸ் ஆப் டைரி பிளான்ட்ஸ், பயோ வேஸ்ட் யுட்டிலிசேஷன், வேல்யூ அடிஷன் ஆப் சீரியல்ஸ், பல்சஸ், பிளான்டேஷன் கிராப்ஸ் போன்ற பாடத்திட்டங்கள் இந்த அக்ரிகல்சுரல் இன்ஜினியரிங் படிப்பில் இடம்பெற்றுள்ளன.
நிலத்தடி நீர் மற்றும் விவசாயகருவிகள் தயாரித்தல் தொடர்பான அரசுத்துறைகள், மாநகராட்சிகளுக்கு விவசாய தொழில் நுட்ப வல்லுனர்கள் தேவைப்படுகின்றனர். விவசாய வளர்ச்சி வாரியங்கள், மிகப் பெரிய பண்ணைகள் போன்றவற்றில் இத்துறையில் சிறந்து விளங்குபவர்களுக்கு வேலைவாய்ப்புகள் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக