கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் மாணவர்களுக்கு மத்திய கல்வி உதவித் தொகை திட்டத்தின் கீழ் நிதியுதவி அளிப்பதற்காக மத்திய மேல்நிலை கல்வி வாரியத்திடம் (சி.பி.எஸ்.சி.,) விண்ணப்பிக்கலாம் என்று மத்திய அரசு அறிவித்துள்ளது.
மத்திய மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தின் மேல்நிலை கல்வித் துறை, கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் படிக்கும் ஏழை மாணவர்களுக்கு நிதியுதவி வழங்கும் திட்டத்தை சி.பி.எஸ்.இ., செயல்படுத்தி வருகிறது.
தற்போது, கடந்த ஆண்டிற்கான விடுபட்ட நிதியுதவியை வழங்குவதற்காக மீண்டும் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
இதற்கான விவரங்கள் மற்றும் விண்ணப்பபடிவம் இணைய தளத்தில் உள்ளது.
இதற்கான அறிவிப்பை சி.பி.எஸ்.சி., 2008 டிசம்பர் மாதமே வெளியிட்டுள்ளது.
சி.பி.எஸ்.இ., 2008ல் நடத்திய "ஏஐஎஸ்எஸ்சி' தேர்வில் 80 சதவீத மதிப்பெண் பெற்று, 2008-2009ம் ஆண்டிற்கான பட்டப்படிப்புக்கு அனுமதி கிடைத்துள்ள மாணவர்கள் இந்த நிதியுதவி வேண்டி விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
மேலும், சில அடிப்படை நிபந்தனைகளையும் மாணவர்கள் பூர்த்தி செய்ய வேண்டும். இதற்கான விண்ணப்பங்கள் இணைய தளத்தில் உள்ளது.
சி.பி.எஸ்.இ., உதவித் தொகை வேண்டி ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை.
மாநில கல்வி முறையில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் நிதியுதவி கேட்டு சி.பி.எஸ்.இ.,க்கு விண்ணப்பிக்க முடியாது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக