தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக மாணவர்கள் வரும் 20ம் தேதிக்குள் தேர்வெழுத விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக தேர்வுக் கட்டுப்பாட்டு அதிகாரி ரீட்டா கொரைற்றி லூர்தஸ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக இளநிலை, முதுநிலை, எம்.பில்., எம்.பி.ஏ., பி.ஜி.டி.ஐ.எம்., டி.ஜி.எம்., சான்றிதழ், டிப்ளமா படிப்புகளுக்கான தேர்வுகள் ஜூன் 13ம் தேதி துவங்கவுள்ளன.
இத்தேர்வு சனி, ஞாயிறுகளில் மட்டும் நடக்கும்.
தேர்வு விண்ணப்பம் மற்றும் கால அட்டவணை மாணவர்களின் வீட்டு முகவரிக்கு அனுப்பப்பட்டுள்ளது.
தேர்வு விண்ணப்பம் பெற்றவுடன் மாணவர்கள் விண்ணப்பத்தைப் பூர்த்தி செய்து, அதற்கான தேர்வுத் தொகையை வங்கி 'டிடி'யாக, "தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழகம், சென்னை" என்ற பெயருக்கு எடுத்து தேர்வாணையருக்கு வரும் 20ம் தேதிக்குள் அனுப்ப வேண்டும்.
இந்தத் தேதிக்குள் விண்ணப்பிக்கத் தவறும் மாணவர்கள், வரும் 25ம் தேதிக்குள் தேர்வுக் கட்டணத்துடன் 50 ரூபாய் அபராதக் கட்டணம் சேர்த்து செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
தேர்வு விண்ணப்பம் கிடைக்காத மாணவர்கள், தமிழ்நாடு திறந்த நிலைப் பல்கலைக் கழக இணையதளத்தில் (www.tnou.ac.in) விண்ணப்பத்தைப் பெற்று விண்ணப்பிக்கலாம்.
இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக