ஓட்டு போட தூண்டும் வகையில் மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் போஸ்டர் அச்சடித்துள்ளது.
தேர்தலில் மக்கள் ஓட்டு போடுவது குறைந்து வருகிறது. வாக்காளர்கள் அனைவரையும் ஓட்டு போட தூண்டும் வகையில், மக்களிடம் விழிப்புணர்வை ஏற்படுத்த தேர்தல் கமிஷன் முடிவு செய்துள்ளது.
'வாக்காளர்களே' என்ற தலைப்பில் பெண் ஒருவர் ஓட்டு போட்டு விட்டு மகிழ்ச்சியுடன் விரலில் மை வைக்கப்பட்டுள்ளதை காட்டுவது போன்ற படத்துடன் கூடிய பெரிய போஸ்டரை தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது.
'வாக்காளர்களே' என்ற தலைப்பில் பெண் ஒருவர் ஓட்டு போட்டு விட்டு மகிழ்ச்சியுடன் விரலில் மை வைக்கப்பட்டுள்ளதை காட்டுவது போன்ற படத்துடன் கூடிய பெரிய போஸ்டரை தேர்தல் கமிஷன் தயாரித்துள்ளது.
இவை அனைத்து மாவட்ட கலெக்டர் அலுவலகங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் ஒட்டப்படவுள்ள போஸ்டரில் கூறியுள்ளதாவது:
- வாக்காளர்களே வாக்களிப்பது ஒரு புனிதமான உரிமை.
- நம் தாய்நாட்டிற்கு செலுத்த வேண்டிய ஒரு கடமை.
- உங்கள் வாக்கு ரகசியமாக இருக்கும்.
- எந்தவித இடையூறும் இன்றி நியாயமாகவும், சுதந்திரமாகவும் தேர்தல் நடப்பதை மத்திய பார்வையாளர்கள் கண்காணிக்கின்றனர்,
- எனவே தயக்கமின்றி வாக்களியுங்கள்.
- ஓட்டுச்சாவடியில் நுழைந்த பின் ஓட்டு போட விரும்பாவிட்டால், 1961ம் ஆண்டு தேர்தல் நடத்தும் விதி 49 Oவின் படி படிவம் 17(A)ல் பதிவு செய்ய வேண்டும்.
- ஓட்டுச்சாவடியில் உள்ள இந்த படிவத்தை கேட்டு பெற்று பதிவு செய்ய வேண்டும்.
இவ்வாறு போஸ்டரில் கூறப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக