சிதம்பரம் அடுத்த வண்டிகேட்டில் முட்லூர் வரை சாலை அகலபடுத்தும் பணியால் செம்மண் புழுதி பறந்து பொதுமக்கள் பாதிப்படைந்து வருகின்றனர். கடலூர் மாவட்டம், சிதம்பரம் அடுத்த வண்டிகேட்டில் இருந்து குருமாந்திட்டு, அழிஞ்சிமேடு, ஆசிரமம், மண்டபம், சி.முட்லூர் அரசு கல்லூரி வழியாக பி.முட்லூர் வரை என்.எச். 45எ,. சாலை அகலப்படுத்தும் பணியும், வெள்ளாற்றில் மேம் பாலம் கட்டும் பணியும் துரிதமாக நடக்கிறது.
இதனால் வண்டி கேட்டில் இருந்து சி.முட்லூர் அரசு கல்லூரி வரை எட்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு டி.ஆர்.எஸ்.பி,. திட்டத்தின் மூலம் சாலை அகலப்படுத்தும் பணி நடக்கிறது.
சாலையின் இருபுறமும் அகலப்படுத்தி, மணல் மற்றும் கிராவல் கொட்டி சாலை போடும் பணி நடந்து வருகிறது.
செம்மண் கொட்டியுள்ள மேடுகளில் வாகனங்கள் செல்வதால் அரசு அலுவலகத்திற்கு செல்பவர்கள் மற்றும் பள்ளிகள் துவங்கிய நிலையில் சீருடையில் செல்லும் மாணவர்கள் புழுதி படிந்து செம்மண் நிறத்தில் மாணவர்கள் பள்ளிக்கு செல்லும் அவல நிலை தொடர்கிறது.
முக்கிய அலுவலகங்களுக்கு செல்லும் அரசு ஊழியர்களும் தினசரி பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
இதனால் பகல் வேளையிலும் வாகனங்களில் முகப்பு விளக்கை எரிய வைத்து செல்லும் நிலையில் உள்ளனர்.
இப்பகுதியில் லோடு கணக்கில் மணல் அடிக்க கூலி நிர்ணயிக்கப்படுவதால் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ள லாரிகள் அளவுக்கு அதிகமான வேகத்தில் செல்வதால் மிகுந்த பாதிப்பு ஏற்படுகிறது.
எனவே பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க முறையாக மணல் மற்றும் கிராவல் கொட்டியதுடன் இல்லாமல் தண்ணீர் ஊற்றி சாலையை தரமாகவும், போக்குவரத்திற்கு பாதகமில்லாமல் அமைக்க சம்மந்தப்பட்டவர்கள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

Source: தினமலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக