அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துல்லாஹ்... என அஸர் தொழுகை முடிந்த சிறிது நேரத்திற்கு பின்னர் ஹலோ மைக் டெஸ்டிங்.. மைக் டெஸ்டிங் என்ற ஒலி நம் காதுகளில் விழ ஒலி வந்த திசையை நோக்கி நாம் சென்றால் அது நகர ஜமாஅத்துல் உலமா பேரவை மற்றும் பிரண்ட்ஸ் PNO இணைந்து சின்னக்கடை தெருவில் நடத்தும் 63-வது சுதந்திர தின விழா நிகழ்ச்சி.
நிகழ்ச்சிக்கு நகர ஜமாஅத்துல் உலமா பேரவை தலைவர் M.S.காஜா முயீனுத்தீன் மிஸ்பாஹி தலைமை தாங்க A.லியாகத் அலி மன்பஈ இறைவசனம் (கிராஅத்) ஓதி நிகழ்ச்சியினை துவக்கி வைத்தார். B.நூருல்லாஹ் பாஜில் பாகவி வரவேற்புரை நிகழ்த்த பரங்கிப்பேட்டை நண்பர்கள் அமைப்பின் (Friends PNO) தலைவர் M.K.நிசார் அஹ்மத் வாழ்த்துரை வழங்கினார்.
பரங்கிப்பேட்டை மஹ்மூதியா அரபிக் கல்லூரி முதல்வர் A.சித்திக் அலி பாகவி, மூனா பள்ளியின் முதல்வர் M.பாண்டியன், K.M.மீரான் முஹ்யித்தீன் ரஷாதி ஆகியோர் தங்களது உரையில் இந்திய விடுதலை போரில் இஸ்லாமியர்களின் பங்களிப்பினையும்-தியாகத்தையும் பற்றி விரிவாக பேசினார்கள் (மக்ரிப் தொழுகைக்காக நேரம் விடப்பட்டு-பின் கூட்டம் தொடர்ந்து நடந்தது) நிகழ்ச்சியினை M.முஹம்மத் ஷேக் ஆதம் தொகுத்து வழங்கினார். இறுதியாக A.லியாகத் அலி மன்பஈ நன்றியுரை ஆற்றினார். இஷா தொழுகைக்கு பாங்கு சொல்லவே நாம் விட்டோம் ஜூட்.....!
கட்டுரை & படம்: நமது நிருபர் - சுஹைல்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக