பரங்கிப்பேட்டையின் மிக முக்கிய அடையாளங்களில் ஒன்றான பூப்பந்தாட்டத்திற்கான பயிற்சி களங்களில் முதன்மை இடம் வகிக்கும் BMD-கிளப்பிற்கு அடுத்தபடியாக சற்றேறக்குறைய 25 ஆண்டுகளுக்கு முன்பு பரவலாக உச்சரிக்கப்பட்ட பெயர் RRC (Royal Recreation Club), ராயல் தெரு,வல்லதம்பி மரைக்காயர் தெரு, பெரிய ஆசராகாணத்தெருக்களை சேர்ந்த மர்ஹும் அப்துல் ஹமீது அவர்களின் தலைமையில் மர்ஹும் சலாஹுத்தின், பிரோஜ் முஹம்மது, ஹஸன் அலி, ஹாஜா மெய்தின், பஷீர் அஹமது, கஜ்ஜாலி, இஸ்மாயில் இப்படி பல நபர்கள் பூப்பந்தாட்டத்தின் மீதுள்ள அக்கறையின் காரணமாக தாங்களாகவே முன்வந்து நல்கிய ஒத்துழைப்பின் மூலம் கூட்டு முயற்சியில் உருவான இந்த பயிற்சி களம் காலப்போக்கில் இடம் இல்லாத காரணத்தாலும் (அப்பகுதியில் வீடு கட்டப்பட்டதால்) இன்னபிற காரணத்தாலும் அப்படியே செயலிழந்து போனது, இப்போது ஆர்வமுள்ள சிலரின் ஒத்துழைப்பின் மூலம் கலிமா நகர் செல்லும் வழியில் (அம்மாஸ் தைக்கால் இறுதியில்) மீண்டும் மைதானம் அமைக்கப்பட்டு, நாள்தோறும் பலரும் விளையாடி வருகின்றனர்.
படம்: நமது நிருபர் - சுஹைல்
மர்ஹூம் MAN (அ.அப்துல் ஹமீது) நானாவின் தலைமையில் RRC,பரங்கிப்பேட்டையின் தேசிய விளையாட்டான பூப்பந்தாட்டத்தை வளர்த்தெடுக்க சிறப்பாகச் செயல்பட்ட நாள்கள் இன்னிக்கும் மனதில் பசுமையாகவும்,இனிமையாகவும்.
பதிலளிநீக்கு