திங்கள், 19 அக்டோபர், 2009
சென்னைப் பல்கலைக்கழகம் வேலைவாய்ப்பு
கடலூர் மாவட்டத்தில் வேலைவாய்ப்பு முகாம்
ஞாயிறு, 27 செப்டம்பர், 2009
தமிழக அரசின் வேலைவாய்ப்பு முகாம்
சனி, 26 செப்டம்பர், 2009
அஞ்சலக உதவியாளர்கள் பணி - கடலூரில் விண்ணப்பம் வழங்கல்
திங்கள், 14 செப்டம்பர், 2009
வியாழன், 4 ஜூன், 2009
பி.வி.எஸ்சி., பட்டதாரிகளுக்கு வளாக வேலைவாய்ப்பு
சென்னை, தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில், இன்று முதல் நடக்கும் வேலைவாய்ப்பு முகாமில், பால் மற்றும் கோழிப்பண்ணைத் துறையில் பணிபுரிய 45 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.தமிழ்நாடு கால்நடை அறிவியல் பல்கலைக் கழகத்தில் உள்ள சென்னை கால்நடை கல்லூரியில் பல்கலைக்கழக மாணவர் கவுன்சிலிங் மற்றும் வேலைவாய்ப்பு மையம் செயல்பட்டு வருகிறது.
இம்மையத்தின் சார்பில், பல்கலைக்கழக வளாகத்தில் இன்று, நாளை மற்றும் 8ம் தேதி வேலைவாய்ப்பு முகாம் நடத்தப்படுகிறது.
கோலார் மில்க் யூனியன், கெவின்கேர், வி.கே.எஸ்., பார்ம்ஸ் ஆகிய மூன்று நிறுவனங்கள் சார்பாக, பால் பண்ணை மற்றும் கோழிப் பண்ணைத் துறையில் பணிபுரிய மொத்தம் 45 பேர் தேர்ந்தெடுக்கப்படுகின்றனர்.
வேப்பேரியில் உள்ள சென்னை கால்நடை கல்லூரிக் கருத்தரங்க அறையில் இன்று காலை 9 மணிக்கு வேலைவாய்ப்பு முகாம் துவங்கும்.
மேலும் விவரங்களுக்கு, சென்னை கால்நடை கல்லூரி உதவிப் பேராசிரியர் சந்தீப்குமாரை, 044 - 2538 1506 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.
திங்கள், 4 மே, 2009
டி.ஆர்.டி.ஓ., நிறுவனத்தில் இன்ஜினியரிங் பணிவாய்ப்புகள்
மத்திய அரசு நிறுவனமான பாதுகாப்பு ஆய்வு மற்றும் வளர்ச்சிக் கழகம் (டி.ஆர்.டி.ஓ / DRDO).டி.ஆர்.டி.ஒ., நமது பாதுகாப்பு குறித்த ஆய்வு மற்றும் மேம்பாட்டு நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ள சர்வதேச நிறுவனம். இதன் இதில்
இது பணியின் காலியிடங்கள் பிரிவு
- எலக்ட்ரானிக்ஸ் கம்யூனிகேசன்ஸ் - 80
- மெக்கானிக்கல் - 60
- கம்ப்யூட்டர் சயின்ஸ் - 40
- கெமிக்கல் - 20
- எலக்ட்ரிகல் - 20
தகுதிகள்:
குறைந்தது
60 சதவீதத்துடன் மேலே குறிப்பிட்டுள்ள பிரிவுகளில் ஒன்றில் பி.இ., பி.டெக்., தகுதியைப் பெற்றிருக்க வேண்டும்.- ஜூன் 5, 2009 அன்று 28 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு
- இப்பணிகளுக்காக 3 மணிநேர தேர்வு ஒன்று டி.ஆர்.டி.ஓ.,வினால் நடத்தப்படும்.
- இதில் அப்ஜக்டிவ் வகைக் கேள்விகள் இடம் பெறும்.
- இதில் உங்களது இன்ஜினியரிங் பிரிவிலிருந்து திறனைப் பரிசோதிக்கும் கேள்விகள் இடம் பெறும்.
- 2வது தாளில் அப்ளைட் ரிசர்ச் மற்றும் டெவலப்மெண்ட் தொடர்பான கேள்விகள் இடம் பெறும்.
- இதிலும் அப்ஜக்டிவ் வகைக் கேள்விகள் இடம் பெறும்.
- மொத்தம் 50 கேள்விகள்.
விண்ணப்பிக்கும்
- முழு விபரங்களடங்கிய ஏடு மற்றும் விண்ணப்பத்தை ரூ.300 பணமாகச் செலுத்தி ஸ்டேட் பாங்கின் குறிப்பிட்ட கிளைகளில் பெறலாம்.
- நிரப்பிய விண்ணப்பத்தை தேவைப்படும் இணைப்புகளோடு தபால் மூலமாக அனுப்ப வேண்டும்.
விண்ணப்பிக்கும்
- The Director,
- Recruitment & Assessment Centre,
- Lucknow Road,
- Timarpur,
- Delhi – 110054.
விண்ணப்பம்
போட்டித்
முழு
செவ்வாய், 14 ஏப்ரல், 2009
தமிழக அரசு தருகிறது இலவச வேலைவாய்ப்புப் பயிற்சிகள்
சமூகத்தில் பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு உதவும் வகையில் வேலைவாய்ப்பு அளிக்கும் பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசின் பல்வேறு துறைகள் மேற்கொண்டு வருகின்றன. இப்பயிற்சிகள் இலவசமாகவே அளிக்கப்படுகின்றன. எலெக்ட்ரிகல் டெக்னீஷியன், ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன், டி.டி.பி., டேட்டா என்ட்ரி ஆகிய பிரிவுகளில் பயிற்சிகள் தரப்படுகின்றன. யாரெல்லாம் எலக்ட்ரிகல்
- எலக்ட்ரிகல் டெக்னீஷியன் பயிற்சிக்கு 10-ம் வகுப்பு படித்திருந்தால் போதும்.
- 32 வயதுக்கு உள்பட்டவர்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- பயிற்சிக்கான கால அளவு ஓராண்டு ஆகும்.
ஃப்ரெண்ட் ஆபிஸ் ஆபரேஷன் பயிற்சி: 
- இப்பயிற்சிக்கு 12-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 25 வயதுக்கு உள்பட்டோர் விண்ணப்பிக்கலாம்.
- இப்பயிற்சியின் கால அளவு 6 மாதங்கள் ஆகும்.
டி.டி.பி. (டெஸ்க் டாப் பப்ளிஷிங்), டேட்டா என்ட்ரி பயிற்சிகள்:
- வயது வரம்பு 32.
- இது மூன்று மாதப் பயிற்சி ஆகும்.
விண்ணப்பிக்க என்ன நடைமுறை? விண்ணப்பதாரர்கள் தங்களது மதிப்பெண் பட்டியல்கள், மாற்றுச் சான்றிதழ், சாதிச் சான்றிதழ், வருமானச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றிதழ்கள், நகல்கள் ஆகியவற்றை ரூ.5 தபால் தலை ஒட்டிய சுய முகவரி இட்ட உறையையும் கொண்டு வரவேண்டும். தொடர்பு கொள்ள வேண்டிய இடம் எது? மேற்கண்ட பயிற்சிகளை நடத்தும் தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 42/25, ஜி.ஜி. காம்ப்ளெக்ஸ் இரண்டாவது தளம் (வி.ஜி.பி. அருகில்), அண்ணா சாலை, சென்னை -600 002. தொ.பே.: 044- 2852 7579, 2841 4736, 98401 16957.
சி.ரங்கநாதன், இயக்குநர், தமிழ்நாடு இண்டஸ்ட்ரியல் ட்ரெய்னிங் சென்டர், 93822 66724. ஆதி திராவிடர், பழங்குடியினருக்கு இலவச கம்ப்யூட்டர் பயிற்சி
தொடர்புக்கு: விமானப் பணிப்பெண் ஆவதற்குப் பயிற்சி விமானப் இத்தொழிலில் இப்போது லாபம் அதிகரித்து வருவதே இதற்குக் காரணம். இந்நிலையில், இத்தொழிலில் வேலைவாய்ப்பும் விரிவடைந்து கொண்டே வருகிறது. விமானப் பணிப் பெண் வேலையில் சேர்ந்தால், நல்ல ஊதியமும் உண்டு. இந்நிலையில், ஆதி திராவிட பெண்களுக்கு தமிழ்நாடு ஆதி திராவிடர் -வீட்டுவசதிக் கழகம் (தாட்கோ) மூலம் விமானப் பணிப்பெண் வேலைக்கான பயிற்சி தரப்படுகிறது.
ஆதி திராவிடர்கள், பழங்குடியினத்தவருக்காக இலவசமாக கம்ப்யூட்டர் பயிற்சியை மத்திய தொழிலாளர் நலத் துறை நடத்துகிறது. மேல்நிலைப் படிப்பை முடித்தவர்கள், 27 வயதுக்கு உள்பட்டோர் இதில் பங்கு பெறலாம்.
ஆதிதிராவிட, பழங்குடியின பயிற்சி வழிகாட்டு மையம், மாவட்ட வேலைவாய்ப்பக வளாகம், 56, சாந்தோம் நெடுஞ்சாலை, மூன்றாவது மாடி, சென்னை -600 004. தொலைபேசி: 2461 5112.
ட்டுக் கொண்டு விமான சேவைகளில் ஈடுபட்டு வருகின்றன. மேலும், நாளுக்கு நாள் விமானப் பயணிகளின் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது.
- ஓராண்டுக்கான இப்பயிற்சி இலவசமாக வழங்கப்படுகிறது.
- பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள், பட்டதாரிகள் இதில் சேரலாம்.
- 18 வயது முதல் 24 வயது வரையில் இருக்க வேண்டும்.
- 157 செ.மீ. உயரம் இருக்க வேண்டும். சரளமாகப் பேச வேண்டும்.
- அழகான தோற்றம் தேவை.
இது ஏர் ஹோஸ்டஸ் அகாதெமி (ஆஹா) என்ற கல்வி நிறுவனம் கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சார்பில் சர்வதேச அளவில் தேர்வுகளை நடத்தும் சி.ஐ.இ. நிறுவனத்துடன் இணைந்து 'ஆஹா' ஓராண்டு டிப்ளமோ படிப்பை நடத்துகிறது. இந்நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 9 நகரங்களில் மொத்தம் 18 கிளைகள் இதற்கு உண்டு. அவற்றில் படித்து ஆண்டுதோறும் 4 ஆயிரம் பேர் பயிற்சி பெறுகின்றனர். கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் சர்வதேச தேர்வு மையம் நடத்தும் படிப்புகளுக்கு உலக அளவில் நல்ல வரவேற்பு உள்ளது. 150 நாடுகளில் இப்படிப்பின் சான்றிதழ்களுக்கு வேலைவாய்ப்பு உறுதி. ஏவியேஷன், ஹாஸ்பிடாலிட்டி, டிராவல்ஸ் அண்ட் டூர் என்ற துறைகளில் பயிற்சி அளிக்கப்படுகிறது. பிற்பட்ட வகுப்பினருக்கு வேலைவாய்ப்பு பயிற்சி: பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு வேலை வாய்ப்புக்கான இலவச பயிற்சித் திட்டத்தைத் தமிழக அரசு அளிக்கிறது. வேலை தேடும் பிற்பட்ட இனத்தைச் சேர்ந்த இளைஞர்களுக்கு உடனடி வேலைவாய்ப்பை ஏற்படுத்தித் தரும் திறன்களை வளர்ப்பதற்கு இப்பயிற்சிகள் பெரிதும் உதவும். இதன்படி எலெக்டிரிகல் டெக்னீசியன், டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பிரிவுகளில் பயிற்சி தரப்படும். எலெக்ட்ரிகல் டெக்னீசியன் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்று 32 வயதுக்குள்பட்ட பிற்படுத்தப்பட்ட பிரிவைச்சேர்ந்தவர்கள் இப்பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். டிடிபி, டேட்டா என்ட்ரி உள்ளிட்ட பயிற்சிகளுக்கு பிளஸ் 2 தேர்ச்சி பெற்றவர்கள் விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர்கள் தங்கள் மதிப்பெண் பட்டியல், மாற்று சான்றிதழ், சாதிச் சான்றிதழ் ஆகியவற்றின் மூலச் சான்றுகளையும் அவற்றின் நகல்களையும் ரூ. 5 அஞ்சல் தலை ஒட்டிய சுய விலாசமிட்ட உறையையும் எடுத்து வர வேண்டும். முகவரி:
தமிழ்நாடு இன்டஸ்ட்ரியல் டிரெய்னிங் சென்டர், 42/25, ஜிஜி காம்ப்ளக்ஸ், 2-வது தளம் (விஜிபி அருகில்), அண்ணா சாலை, சென்னை-2. தொலைபேசி : 2852 7579, 2841 4736. செல்: 98401 16957.
ஞாயிறு, 12 ஏப்ரல், 2009
டி.என்.பி.எஸ்.சி., (TNPSC) பணிவாய்ப்பு
கடந்த சில ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி., (TAMILNADU PUBLIC SERVICE COMMISSION / தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) அறிவித்து வரும் ஆயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களில் எண்ணற்ற இளைஞர்கள் நுழைந்திருக்கின்றனர். - 1.7.2009 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வும் அதில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது.
- எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் வகைத் தேர்வாக நடத்தப்படும்.
- பார்மசி / பார்மாசூடிக்கல் சயின்ஸ் இவற்றில் 200 கேள்விகள் இடம் பெறும். பட்டப்படிப்பு தரத்திலான தேர்வு இது.
- கிளினிகல் பார்மகாலஜி பிரிவினருக்கு பட்டமேற்படிப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தேர்வானது ஜூலை 26 அன்று நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.155.
இதற்கு http://tnpsconline.tn.nic.in/ என்னும் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
பிரிண்டட் விண்ணப்பங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 6, 2009.
Source : கல்வி மலர்
தரைப்படையில் ஹவில்தார் பணிவாய்ப்பு
நமது ராணுவத்தின் தரைப்படையில் கல்விப் பிரிவில் ஹவில்தாராக பணிபுரிவதற்கான வாய்ப்பை தரைப்படை அறிவித்துள்ளது.இது பற்றிய விபரங்கள்...
மொத்த காலியிடங்கள் - 273
- இதில் அறிவியல் பிரிவினருக்கு 133 இடங்களும், கலைப் பிரிவினருக்கு 140 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.
தகுதிகள்:
- அக்டோபர் 5, 2009 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
- குரூப் எக்ஸ் பணிகளுக்கு பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகளில் ஒன்றுடன் பி.எட்., தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
- குரூப் ஒய் பணிகளுக்கு பி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகுதியைப் பெற்றிருந்தால் போதும். பி.எட்., அவசியமில்லை.
- பி.எஸ்சி., தகுதியை கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் குறைந்தது 2 பாடங்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
- பி.ஏ., தகுதியை ஆங்கில / இந்தி / உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதம் அல்லது சமூகவியல் பாடங்களில் இரண்டுடன் முடித்திருக்க வேண்டும்.
- பொதுவாக ராணுவப் பணிகளுக்குத் தேவைப்படும் உடற்தகுதியைப் பெற்றிருப்பது முக்கியம்.
- உடற்தகுதித் திறனறியும் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
- இத்தேர்வில் 2 பகுதிகள் இடம் பெறும்.
- ஒன்று அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கேள்விகளைக் கொண்டிருக்கும்.
- மற்றொரு பகுதியில் பி.எஸ்சி., / பி.ஏ., பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.
சில முக்கியக் குறிப்புகள்:
- திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
- 25 வயதுக்குக் குறைவாக இருந்தாலும் திருமணமானவர் என்றால் விண்ணப்பிக்க முடியாது.
விண்ணப்பிக்கும் முகவரி: HQ Rtg Zone, Fort Saint george, Chennai 600009.
விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : ஏப்ரல் 25, 2009.
Source: கல்வி மலர்
ஞாயிறு, 29 மார்ச், 2009
லட்சியத்தை முடிவு செய்து கல்வியை தொடருங்கள்
கோவையில் தினமலர் நாளிதழ், எஸ்.ஆர்.எம் பல்கலையும் இணைந்து நடத்திய ‘வழிகாட்டி’ கல்வி, வேலைவாய்ப்பு கண்காட்சி மார்ச் 27ம் தேதியுடன் நிறைவு பெற்றது.
பலர் பட்டப்படிப்பிற்கு பின், லட்சியத்தை முடிவு செய்கின்றனர். ஆனால், பட்டப்படிப்புக்கு முன் லட்சியத்தை தேர்வு செய்து, படிப்பை அதற்கு ஏற்றவாறு படிக்க வேண்டும்.
தலைமைப்பண்பு, நுண்ணறிவுத்திறன், அலசி ஆராயும் திறனை பெறுவது மிக அவசியம்.
பி.பி.ஏ., படித்து விட்டுத் தான் எம்.பி.ஏ., படிக்க வேண்டும் என்ற அவசியம் இல்லை. பி.பி.ஏ., முடித்த பிறகு, எம்.பி.ஏ., படிக்காமல் இருப்பது வீண். எந்த ஒரு அங்கீகாரம் பெற்ற இளநிலை பட்டப்படிப்பு படித்தாலும், எம்.பி.ஏ., படிக்க முடியும். பார்மசி முடித்தவர்களும் கூட, எம்.பி.ஏ., படிக்கலாம்.
மேலாண்மை துறை, தனியார் நிறுவனங்களில் படிப்பதற்கும், ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., போன்ற நிறுவனங்களில் படிப்பதற்கும் வேறுபாடு உண்டு. நுழைவுத் தேர்விலும் தரம் உண்டு. எனவே, தரமான கல்லூரியையோ, நிறுவனத்தையோ கவனித்து தேர்வு செய்ய வேண்டும்.
இவ்வாறு சென்னை பல்கலை பேராசிரியர் காஜா ஷெரீப் பேசினார்.
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...






