உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
உதவித்தொகை லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 22 ஏப்ரல், 2009

வேலையற்றோர் உதவித்தொகை பெற விண்ணப்பம் வினியோகம்

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்குவதற்கான விண்ணப்பம் வழங்கப்படுகிறது.

இது குறித்து மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு:

கடலூர் மாவட்ட வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்துள்ள மனுதாரர்களுக்கு உதவித் தொகை வழங்கப்பட்டு வருகிறது.

  • இந்த தொகை பெறுவதற்கு எஸ்.எஸ்.எல்.சி., - பி.யூ.சி., பிளஸ் 2 மற்றும் பட்டப்படிப்பு படித்து வேலை வாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்து 31.3.2009 அன்று ஐந்து ஆண்டுகள் கடந்திருக்க வேண்டும்.

  • எஸ்.சி., எஸ்.டி., பிரிவினருக்கு 45 வயதும் மற்றவர்களுக்கு 40க்குள்ளும் இருக்க வேண்டும்.

  • தொடர்ந்து புதுப்பித்து வந்திருக்க வேண்டும்.

  • அரசு அல்லது தனியார் துறையில் வேலையில் இருப்பவராக இருத்தல் கூடாது.

  • ஏதாவது ஒரு கல்வி நிறுவனத்தில் படித்துக் கொண்டிருக்க கூடாது. அஞ்சல் வழிக் கல்வி அல்லது தொலைதூரக் கல்வி பயில்வோர் விண்ணப்பிக்கலாம்.

  • மனுதாரர் தனது கல்வியை தமிழ்நாட்டிலேயே பயின்றவராக இருத்தல் வேண்டும்.

  • மேலும் அவரது பெற்றோர், பாதுகாவலர் தொடர்ந்து 15 ஆண்டுகள் தமிழகத்தில் வசித்தவராக இருக்க வேண்டும்.

  • குடும்ப ஆண்டு வருமானம் 24 ஆயிரம் ரூபாய்க்குள் இருக்க வேண்டும்

போன்ற தகுதியுள்ளவராக இருக்கும் மனுதாரர்கள் அவர்களது கல்விச்சான்றுகளின் அசல் மற்றும் வேலைவாய்ப்பக அடையாள அட்டையுடன் அலுவலகத்திற்கு வந்து விண்ணப்பத்தை இலவசமாக பெற்றுக் கொள்ளலாம்.

  • ஏற்கனவே விண்ணப்பித்தவர்கள் விண்ணப்பிக்க தேவையில்லை.

  • பதிவு செய்து ஐந்து ஆண்டுகள் நிறைவு செய்தோர் மட்டும் புதிதாக விண்ணப்பிக்கலாம்.

  • விண்ணப்பம் 1.4.2009 முதல் தினமும் காலை 10 மணி முதல் மதியம் 1 மணி வரை வழங்கப்படுகிறது.

  • பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் தினமும் இதே நேரத்தில் திரும்ப பெற்றுக் கொள்ளப்படும்.

  • இந்த காலாண்டுக்குரிய விண்ணப்பத்தை மே 31ம் தேதிக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும்.

  • வேலைவாய்ப்பு அடையாள அட்டை புதுப்பித்தல், இதுவரை பயன் பெற்ற வங்கி புத்தகத்தில் பணம் அனுப்பிய விவரங்களின் நகலை விண்ணப்பத்துடன் இணைக்க வேண்டும்.

இவ்வாறு செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Source: தினமலர்

செவ்வாய், 7 ஏப்ரல், 2009

கடலூர் மாவட்டத்தில் 45 நாட்கள் ஆழ்கடலில் மீன்பிடிக்க தடை

கடலூர் மாவட்டத்தில் வருகிற 15-ந்தேதி முதல் 45 நாட்களுக்கு ஆழ்கடலில் மீன்பிடிக்க தடைவிதிக்கப்பட்டு உள்ளது.

இது பற்றிய விவரம் வருமாறு:-

மீன்வளம்

ஆழ்கடலில் மீன்கள் அதிக அளவில் பிடிக்கப்படுவதால், மீன்வளம் குறைந்து கொண்டே வருகிறது. எனவே ஆழ்கடலில் மீன்களின் இனப்பெருக்க காலத்தில் மீன் பிடிக்கப்படுவதை உலக நாடுகள் தடை செய்து உள்ளன.

அதன்படி தமிழக கடலில் மீன்களின் இனப்பெருக்கக் காலமான ஏப்ரல் 15ந்தேதி முதல் மே மாதம் 29-ந்தேதி முடிய உள்ள 45 நாட்கள் மீன்பிடிக்க தடை விதிக்கப்பட்டு உள்ளது.

45 நாட்கள் தடை

இந்த தடை உத்தரவு வருகிற 15-ந்தேதி முதல் அமலுக்கு வருகிறது. எனவே இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலத்தில் மீனவர்கள் மீன்பிடிக்க ஆழ்கடலுக்கு செல்லக்கூடாது என்று அறிவுறுத்தப்பட்டு உள்ளனர்.

எனவே இந்த தடை உத்தரவு காரணமாக கடலூர் மாவட்டத்தில் உள்ள 5 ஆயிரம் கட்டுமரங்களும், 1,100 விசைப்படகுகளும், ஆழ்கடலில் மீன்பிடிப்பதற்குரிய 600 எஸ்.டி.பி. படகுகளும் வருகிற 15-ந்தேதி முதல் மீன்பிடி தொழிலுக்கு செல்லாமல் கடற்கரையோரத்தில் நிறுத்தப்பட்டு இருக்கும்.

உதவித்தொகை

இந்த தடை உத்தரவு அமலில் இருக்கும் காலங்களில் மீனவர்கள் மீன்பிடி தொழில் செய்ய முடியாது என்பதால் கடந்த ஆண்டில் அவர்களுக்கு தமிழக அரசு உதவித்தொகை வழங்கியது.

ஆனால் இந்த ஆண்டில் தேர்தல் விதிமுறை அமலில் இருப்பதால் மீனவர்களுக்கு உதவித்தொகை வழங்குவது பற்றிய அறிவிப்பை தமிழக அரசால் வெளியிட முடியவில்லை. எனவே தேர்தலுக்கு பிறகே உதவித்தொகை வழங்குவது பற்றி தமிழக அரசு அறிவிப்பு வெளியிடும் என்று தெரிகிறது.

வெள்ளி, 6 ஜூன், 2008

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

கல்வி உதவித்தொகை அறிவிப்பு

(B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION )கல்வி உதவித்தொகை அறிவிப்பு
பி.எஸ். அப்துல் ரஹ்மான் ஜக்காத் ஃபண்ட் பவுண்டேஷன்

நோக்கம்: சிறந்த மதிப்பெண் பெற்று, ஜகாத் பெறக்கூடிய குடும்ப சூழலில் படிப்பைத் தொடர முடியாத மாணவர்களுக்கு கல்வி உதவித் தொகை வழங்குதல்.

தகுதி: நடந்து முடிந்துள்ள இறுதித் தேர்வில் குறைந்தது முதல் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருத்தல் வேண்டும். பெற்றோர்களின் குறைந்த வருமானம் காரணமாக கல்விக் கட்டணம் செலுத்த முடியாதவர்களாய் இருத்தல் வேண்டும்.

விதிமுறைகள்: ஜகாத் தொகை பெறுவதற்கு தகுதியுடைவர்களாக இருத்தல் படிப்பில் முழு கவனம் செலுத்த வேண்டும். தேர்வில் தவறினால் உதவித் தொகை நிறுத்தப்படும். படிப்பு முடியும் வரை ஒவ்வொரு வருடமும் மதிப்பெண் பட்டியலை சமர்பித்தல் வேண்டும். படிக்கின்ற போதும், படிப்பிற்கு பிறகும் ஒழுக்க நடைமுறைகளை / இஸ்லாமிய நடைமுறைகளை பின்பற்றுதல் வேண்டும்.

விண்ணப்பங்கள் பெற மதிப்பெண் விவரத்துடன் கோரிக்கை மனு அனுப்பவும்.அல்லது விண்ணப்பத்தினை கீழ்க்கண்ட இணையத்தளத்தில் இருந்தும் பெறலாம்
http://www.bsazakaat.org/

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் வந்து சேர கடைசி நாள் செப்டம்பர் 30, 2008
( முதலாம் ஆண்டு தொழில் நுட்ப படிப்புகள் ) ஜுலை 31,2008 ( முதலாம் ஆண்டு கலை மற்றும் அறிவியல் படிப்புகள் ) ஜூலை 15,2008 ( முதல் ஆண்டு தவிர )

B.S. ABDUR RAHMAN ZAKAAT FUND FOUNDATION
BUHARI BUILDING
NO 4 MOORES ROAD,
CHENNAI 600 006
PHONE : 044 4226 1100
FAX : 044 2823 1950
http://www.bsazakaat.ஒர்க்/
E mail : admin@bsazakaat.org,
bsazakaat@gmail.com
தகவல் மூலம் : சமரசம் உள்ளிட்ட சமுதாய பத்திரிக்கைகள்.

(நன்றாகப் படிக்கும் ஏழை மாணவர்களுக்குப் பயனுள்ள தகவல் என்பதாலும், பணம் வைத்துக்கொண்டு புண்ணியம் தேடிக்கொண்டிருக்கிற செல்வந்தர்களுக்கு வழிகாட்டும் என்பதாலும் இத்தகவல் வெளியிடப்படுகிறது. மேல் விபரங்களுக்கு நமதூர் கல்விக்குழுவை அணுகவும்)

புதன், 4 ஜூன், 2008

சிறுபான்மையினர் மாணவர்களுக்கான உதவி தொகை

1 முதல் 10ஆம் வகுப்பு வரை அரசு, தனியார் மற்றும் உறைவிடப் பள்ளி மாணவர்கள் 50% குறைவில்லாது மதிப்பெண் பெற்று இருக்க வேண்டும். பெற்றோரின் ஆண்டுவருமானம் 1லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

11 ஆம் வகுப்பு முதல் உயர் கல்வி வரை பயிலும் மாணவர்களுக்கு, பெற்றோரின் ஆண்டு வருமானம் 2 லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

இளங்கலை, முதுகலை, தொழில்நுட்பம் படிப்புகளுக்கு ஆண்டு வருமானம் 2.50லட்சம் மிகாமல் இருக்க வேண்டும்.

மேலும் விபரம் அறிய: http://www.minorityaffairs.gov.in/

தகவல்: M.E.S. அன்சாரி