பரங்கிப்பேட்டை அருகே அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்கள் ஏற்றி சென்ற லாரியை போலீசார் பறி முதல் செய்து, டிரைவரை கைது செய்தனர்.
புதுவையில் இருந்து கடலூர் வழியாக சிதம்பரம் நோக்கி ஒரு லாரியில் கார்பைட் கல் செய்ய பயன்படுத்தக்கூடிய ஆற்று கிளிஞ்சல்கள் கடத்தப்பட்டு வருவதாக கடலூர் மாவட்ட கலெக்டர் சீத்தாராமனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி மாவட்ட கலெக்டர் சீத்தாராமன், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு தகவல் தெரிவித்து, அந்த லாரியை பிடிக்க உத்தரவிட்டார்.
அதைதொடர்ந்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அஸ்வின் கோட்னீஸ் உத்தரவின்பேரில் பரங்கிப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் புகழேந்தி, போலீஸ் ஏட்டுகள் ரவி, விஜய குமார் மற்றும் போலீசார் பி.முட்லூர் பகுதிக்கு விரைந்து வந்து அந்த வழியாக தார்பாய் போட்டு வந்த ஒரு லாரியை மடக்கி பிடித்து சோதனை செய்தனர்.
சோதனையில் அந்த லாரியில் எவ்வித ஆவணம் இல்லாமல், அரசு அனுமதியின்றி கிளிஞ்சல்களை காரைக்காலுக்கு ஏற்றிச் சென்றது தெரிய வந்தது. அதைதொடர்ந்து லாரி டிரைவர் புவனகிரி அருகே உள்ள மதுராந்தகநல்லூரை சேர்ந்த வேலாயுதம் மகன் காத்தவராயன் (வயது 40) என்பவரை போலீசார் கைது செய்தனர். அந்த லாரியும் பறிமுதல் செய்யப்பட்டது.
Source: Daily Thanthi - Photo: MYPNO
கிளிஞ்சல்கள் நாட்டில் தடைசெய்யப்பட்ட வகையை சார்ந்ததா?
பதிலளிநீக்குநம்ம நாட்டைபொருத்தவரை "தடைசெய்யப்பட்டவைகள் தாராளமாக கிடைக்கும். எ.கா "சாராயம்..லாட்டரி