சனி, 26 பிப்ரவரி, 2011

அரசு ஆண்கள் பள்ளியின் முப்பெரும் விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 94- வது ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு போட்டி விழா நேற்று நடைபெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரும் பேரூராட்சி மன்ற தலைவருமான முஹமது யூனுஸ் தலைமையில் தொடங்கிய இந்த ஆண்டுவிழாவில், பள்ளியின் தலைமையாசிரியர், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் 94-வதுஆண்டு விழா உடன் இலக்கிய மன்ற மற்றும் விளையாட்டுப் போட்டி விழாவினை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் இலக்கிய மன்ற போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பான்மல், த.மு.மு.க. நிர்வாகி ஆரிப், மலைமோகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.


புகைப்படம்: நன்றி PNO.NEWS

2 கருத்துகள்:

  1. ஜமாஅத்துடன் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய இலவச இரத்ததான முகாம். இதற்க்கு மட்டும் புகைப்படம்: C.W.O.என்று எழுததொரிந்தது அரசு ஆண்கள் பள்ளியின் முப்பெரும் விழா புகைப்படம் pno.newsயில் எடுத்தது என்று எழுதவில்லையே...?

    பதிலளிநீக்கு
  2. தங்களின் ஆதங்கம் புரிகிறது. எதேச்சையாக விடுப்பட்டுவிட்டது. நன்றி தற்போது குறிப்பிடப்பட்டுள்ளது. சுட்டிகாட்டியமைக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...