செவ்வாய், 15 பிப்ரவரி, 2011

தெரு வலம்...

சில பத்து வருடத்திற்கு முன்னெல்லாம் பரங்கிபேட்டையில் பொதி மணல் தெருக்கள் தான். மழை காலங்களில் தெருக்களில் சாக்லேட் குளங்கள் நிறைய காணப்படும். நாம் எப்படியெல்லாம் ஜாக்கிரதையாக சென்றாலும் கரை நல்லது என்று நம்மேல் சேறு தெளித்து அழகு பார்க்கும்.

இப்போது எங்கு பார்த்தாலும் சிமென்ட் தெருக்கள்தான். அரை மாடி உயரம் உள்ளது, இரு பக்கங்களிலும் மணல் அடிக்கப்படவில்லை, போன்ற சில குறைகள் சொல்லப்பட்டாலும், நமதூர் பைக் பிள்ளைகள் அதில் வீலிங்கும் ரேசிங்கும் நன்றாகவே பழகினார்கள். (ஒரு தெருவுக்கு 428 ஸ்பீட் ப்ரேக் இருப்பது வேறு தனிக்கதை).

பல சிமென்ட் தெருக்கள் நன்றாக இருந்தாலும் கோட்டாத்தாங்கரை தெரு, நகுதா மரைக்காயர் தெரு உள்ளிட்ட பல தெரு சாலைகள் தங்களுக்காக வழங்கப்பட்ட கமிஷன்களுக்கு விசுவாசமாக நன்றாக பல்லிளித்து காட்டிக்கொண்டுள்ளன.

இந்நிலையில் சமீபத்திய மழை வந்து சிதைத்து விட்டு போன பல (சின்னத்தெரு, உள்ளிட்ட) தெருக்களில் சாலைகள் சீர் செய்யும் பணி கிட்டத்தட்ட முடிந்து விட்டது. அவை போட்டோக்களாய்...





மேலும், நெடுநாள் கழித்து ராயல் தெரு ( கிதர்சா மரைக்காயர் தெரு) புதிய சிமின்ட் சாலை போடப்பட்டு வருகிறது. இத்ரிஸ் நகர் மற்றும் அதை சார்ந்த தெருக்கள் புதிய தரமான சாலைகள் போடப்பட்டு மின்னுகின்றன.

காஜியார் தெருவில் மிச்சமிருக்கும் பகுதியில் சாலையின் மேல் படிந்துள்ள மணலை பொக்லைன் இயந்திரம் கொண்டு கோரி எடுக்கும் பணி நடைபெற்று வருகிறது. என்ன செய்து என்ன? உலகிலேயே மிகவும் பிசியான, ஆனால் பொறுமைசாலியான மக்கள் நம் மக்கள்.

தெருக்களில் சிமண்ட் தரை போட்டு இன்னும் ஈரம் காயாத நிலையில் தங்கள் வாகன டயர்களின் அச்சுக்களை வரலாற்றின் பொன்னேடுகளில் பதித்து விடும் மும்முரத்தோடு புதிய சாலைகளில் ஓட்டி பழகப்போய் சாலைகளில் நெளிவும் சுளிவுமாய் கோடுகள் வாகன ஓட்டிகளை கீழ் சாய்க்கப்பார்க்கின்றன.

ஆக்கம்: L. ஹமீது மரைக்காயர்

1 கருத்து:

  1. தலீவா!
    'சாக்லேட் குளங்கள்' சொற்பிரயோகம் இரசித்தேன்.

    இருந்தாலும் ஒண்ணு சொல்லிக்கீறேன்:

    "ஆடையில் படுவது கறை
    ஆற்றின் ஓரம் கரை"

    சரி செய்ங்க!
    உங்கள் சேவகன்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...