வியாழன், 17 மார்ச், 2011

சிதம்பரம் உள்பட 3 சட்டமன்ற தொகுதிகளில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க 9 ஆயிரம் பேர் விண்ணப்பம்

சிதம்பரம், புவனகிரி உள்பட 3 சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 9 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்தனர்.

தமிழக சட்டசபை தேர்தல் அடுத்த மாதம் 13-ந் தேதி நடைபெறுகிறது. இந்நிலையில் வாக்காளர் பட்டியலில் விடுபட்டவர்களின் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அடையாள அட்டை வாங்க மனுசெய்ய உத்தரவிடப்பட்டு இருந்தது.

அதன்படி சிதம்பரம், புவனகிரி ஆகிய சட்டமன்ற தொகுதிகளை சேர்ந்த வாக்காளர்கள் கடந்த சில நாட்களாக தாசில்தார் அலுவலகத்திற்கு வந்து மனு கொடுத்து வந்தனர். நேற்று கடைசிநாள் என்பதால் ஏராளமான கூட்டம் வந்தது.

இதில் பெயர் சேர்த்தல், முகவரி மாற்றம், புதிய வாக்காளர் அட்டை கேட்டு விண்ணப்பம் செய்தனர். மாலை வரை புவனகிரி தொகுதியில் 1934 பேரும், சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் 3859 பேரும் மனு கொடுத்தனர். அதன் பிறகும் நீண்ட வரிசையில் நின்று பொதுமக்கள் வாக்காளர் பட்டியலில் தங்கள் பெயரை சேர்க்க விண்ணப்பம் கொடுத்தனர்.

இதேபோல் காட்டுமன்னார் கோவில் சட்டமன்ற தொகுதியில் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க சுமார் 3 ஆயிரம் பேர் விண்ணப்பம் செய்திருந்தனர்.

நேற்று கடைசி நாள் என்பதால் சிதம்பரம், காட்டுமன்னார் கோவில் தாசில்தார் அலுவலகத்தில் இரவு 9 மணி வரை பொதுமக்கள் ஆர்வமாக மனு கொடுத்தனர்.

Source: Daily Thanthi

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...