தேர்தல் தேதி அறிவிக்கபடுவதற்கு முன்பே கூட்டணி கட்சிகளுக்கு தொகுதியை ஒதுக்கீடு செய்து தடாலடியாக தேர்தலை எதிர்கொள்ள களமிறங்கிய ஜெயலலிதா அதே வேகத்தில் கூட்டணி கட்சிகள், அவர்களுக்கு வேண்டிய தொகுதிகள் குறித்து ஒரு பக்கம் பேச்சு வார்த்தை நடத்திக் கொண்டிருக்கும் போதே இன்னொரு பக்கம் அ.தி.மு.க போட்டியிடும் தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியலை வெளியிட்டு கூட்டணி கட்சிகளுக்கு “அல்வா” கொடுத்திருக்கிறார்.
ஜெயலலிதா வெளியிட்ட இப்பட்டியலில் சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதிகள் இடம் பெறவில்லை. ஆதலால் சிதம்பரம் மற்றும் புவனகிரி தொகுதிகளை கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகிறது. இதனால் தற்போதைய புவனகிரி தொகுதி எம்.எல்.ஏ செல்வி ராமஜெயத்துக்கு இந்த தேர்தலில் போட்டியிட “நோ சான்ஸ்” என்றாகி விட்டது.
மேலும் இரு பெரும் திராவிடக் கட்சிகளான அ.தி.மு.க மற்றும் தி.மு.க சிதம்பரம் தொகுதியில் போட்டியிடாமல், கூட்டணி கட்சிகளுக்கு ஒதுக்கி விட்டதால் இரு கட்சி தொண்டர்களும் சோர்ந்து போய் உள்ளனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக