தமிழக சட்டசபை தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் நேற்று துவங்கியது. கடலூர் மாவட்டத்தில் கடலூர், சிதம்பரம், விருத்தாசலம் தொகுதிகளுக்கு அந்தந்த ஆர்.டி.ஓ., அலுவலகங்களிலும், நெய்வேலி தொகுதிக்கு நெய்வேலியில் உள்ள நில எடுப்பு துணை கலெக்டர் அலுவலகத்திலும், பண்ருட்டி, குறிஞ்சிப்பாடி, திட்டக்குடி (தனி), புவனகிரி, காட்டு மன்னார் கோவில் (தனி) தொகுதிகளுக்கு கடலூரில் உள்ள கலெக்டர் அலுவலக வளாகத்தில் வேட்பு மனு தாக்கல் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். வேட்பு மனுத் தாக்கலுக்கான ஏற்பாடுகளை கலெக்டர் சீத்தாராமன் ஆய்வு செய்தார். கலெக்டர் அலுவலகத்தினுள் எந்த வாகனத்தையும் அனுமதிக்கக் கூடாது. வேட்பாளரை சேர்த்து ஐந்து பேர் மட்டுமே அனுமதிக்க போலீசாருக்கு உத்தரவிட்டார்.
முதல் நாளான நேற்று மதியம் 2 மணி வரை வேட்பாளர் எவரும் வரவில்லை. பகல் 2.30 மணிக்கு சிதம்பரம் தொகுதியில் லோக் ஜனசக்தி கட்சி சார்பில் வேட்பாளர் பன்னீர் தனது கட்சியினருடன் தொகுதி தேர்தல் அலுவலரான சிதம்பரம் ஆர்.டி.ஓ., இந்துமதியிடம் மனு தாக்கல் செய்தார். மற்ற தொகுதிகளில் எவரும் மனு தாக்கல் செய்யவில்லை. Source: Dinamalar - Photo: Dinakaran
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக