பரங்கிப்பேட்டை பகுதியில் வாக்கு சேகரிப்பதற்காக தி.மு.கழக கூட்டணியில் அங்கம் வகிக்கும் மூவேந்தர் முன்னேற்றக் கழகத்தின் சிதம்பரம் தொகுதி வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் நேற்று மாலை பரங்கிப்பேட்டைக்கு வருகை தந்தார். பரங்கிப்பேட்டை வெள்ளாற்று பாலம், வழியாக வந்த அவருக்கு, பாலத்தின் முகப்பில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் பொன்னாடை அணிவித்து வரவேற்றார்., பின்னர் ஸ்ரீதர் வாண்டையார், கடலூர் நாடாளுமன்ற உறுப்பினர் K.S.அழகிரி, பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் , நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் செழியன், காண்டீபன், ஆகியோர் திறந்த ஜீப்பில் நின்றவாறு பரங்கிப்பேட்டையில் உள்ள பல தெருக்களுக்கு சென்று வாக்கு சேகரித்தனர்.
நகுதா மரைக்காயர் தெருவில் அமைந்திருக்கும் T.N.T.J. நகர அலுவலகத்திற்கு K.S.அழகிரி M.P., பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், காண்டீபன், ஆகியோருடன் வந்த வேட்பாளர் ஸ்ரீதர் வாண்டையார் அங்கிருந்த நகர T.N.T.J. நிர்வாகிகள் ஃபாஜுல் ஹுஸைன், முத்துராஜா, ஹபீப் ரஹ்மான் ஆகியோர்களுடன் கலந்துரையாடி தனக்காக தேர்தல் பணியாற்றும்படி கேட்டு கொண்டார்.
வாக்கு சேகரிக்கும் பணியில் ஏராளமான தொண்டர்கள் இரு சக்கர வாகனங்களில் தொடர் அணிவகுப்பாக சென்றதால் நேற்று மாலை பரங்கிப்பேட்டை பகுதி பரப்பரப்பாக காணப்பட்டது. இந்நிகழ்ச்சியில் தி.மு.க, காங்கிரஸ், பாட்டாளி மக்கள் கட்சி, விடுதலை சிறுத்தைகள், இந்திய யூனியன் முஸ்லீம் லீக், மூவேந்தர் முன்னேற்றக் கழகம் மற்றும் தோழமை இயக்கங்கள் சேர்ந்த நிர்வாகிகள் - தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
அப்ப எலாருக்கும் பொட்டி ஒதுங்கிடுசு
பதிலளிநீக்குஇப்ப பெட்டி,
பதிலளிநீக்குஎலெக்ஷன் முடிஞ்சதும் கட்டி போட்டு வட்டியும் முதலுமா வாங்கிடுவார் வாண்டை.