பரங்கிப்பேட்டை அடுத்த சி.புதுப்பேட்டையில் மீனவர்களுக்கு மீன்பிடி தடைக்கால நிதியுதவிக்கான காசோலை வழங்கும் விழா நேற்று நடந்தது. கலெக்டர் அமுதவல்லி தலைமை தாங்கினார். மீன்வளத்துறை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் வரவேற்றார். எம்.எல்.ஏ., க்கள் பாலகிருஷ்ணன், முருகுமாறன் முன்னிலை வகித்தனர். 30 மீனவர்களுக்கு உதவி தொகையை சமூக நலத்துறை அமைச்சர் செல்வி ராமஜெயம் வழங்கி பேசுகையில், "தேர்தலின்போது கொடுத்த வாக்குறுதிகளை முதல்வர் ஜெயலலிதா நிறைவேற்றி வருகிறார். சமூக நலத்துறை மூலம் கணவனால் கைவிடப்பட்டவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத் திறனாளிகள் உள்ளிட்டவர்களுக்கு உதவி தொகைகள் உயர்த்தி வழங்கப்படுகிறது. மாற்று திறனாளிகளுக்கு தேவையான உதவிகளை செய்ய அரசு தயாராக உள்ளது' என்றார். விழாவில் , அ.தி.மு.க மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன், டி.ஆர்.ஒ., ராஜேந்திரன், ஆர்.டி.ஓ., இந்துமதி, பரங்கிப்பேட்டை அ.தி.மு.க., நகர செயலாளர் மாரிமுத்து, இளைஞரணி செயலாளர் சங்கர் உட்பட பலர் பங்கேற்றனர். மீன்வளத்துறை ஆய்வாளர் ரவிராஜன் நன்றி கூறினார்.
ஞாயிறு, 5 ஜூன், 2011
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
-
2004-2024 சுனாமி (ஆழிப்பேரலை) என்றால் 26.12.2004 வரை நமக்கு என்னவென்று தெரிந்திருக்க வாய்ப்பில்லை. சில நூற்றாண்டுகளுக்கு முன்பு சென்னையைத் ...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
எப்போ உங்க வாப்பா வராஹோ முஹம்மது என்று முஹம்மதின் தோழன் அஹமது வினவினான். நாளைக்கு வராங்க,சாயங்காலம் எமிரேட்ஸ் பிளைட்டாம் அதனால் காலைலே சஹர் ...
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக