ஞாயிறு, 5 ஜூன், 2011

பரங்கிப்பேட்டையில் கலைஞர் பிறந்த நாள்

பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டது, இதனையொட்டி அன்று காலை 8.30 மணியளவில், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில்  பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் - சேர்மன் முத்துபெருமாள் பழம், பிரட் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் G.செழியன், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும் நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் உசேன், கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜா கமால், M.E.அஷ்ரப் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.அகரம் கொள்ளுமேடு பகுதியில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு கிளைச் செயலர் சரவணன் தலைமை தாங்கினார்.

2 கருத்துகள்:

  1. காலத்திற்கும் திருந்தாத ஜென்மங்கள்..................

    பதிலளிநீக்கு
  2. ஹ..ஹ..ஹ.. இதுல்லாம் அறிசியளுலே வரத்திற்கு தந்திரங்களாம்! கேவலமா இருக்கு, போய் உங்களக்கு தெரிந்த பொழப்ப பாருங்கையா..

    பதிலளிநீக்கு