தமிழக சட்டமன்ற தேர்தலில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில் சிதம்பரம் சட்டமன்ற தொகுதியில் போட்டியிட விருப்பம் தெரிவித்து, பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் - இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், கடந்த 03-03-2011 அன்று விருப்ப மனுவினை கட்சி தலைமையகமான அண்ணா அறிவாலயத்தில் தலைமைக்கழக நிர்வாகிளான துறைமுகம் ஹாஜா, மாசிலாமணி, ஹஸன் முஹம்மது ஜின்னா, ஆகியோர்களிடம் சமர்ப்பித்தார், பின்னர் தொலைக்காட்சி செய்தியாளர்களிடம் பேசிய M.S.முஹம்மது யூனுஸ், கடந்த ஐந்து ஆண்டு கால தி.மு.கழக அரசில் நிறைவேற்றப்பட்டுள்ள பல்வேறு சாதனைகளின் காரணமாக சமூகத்தில் அனைத்து தரப்பு மக்களின் ஆதரவும் தி.மு.க-விற்கு இருப்பதால் தி.மு.க மீண்டும் ஆட்சியில் அமரும் என்று குறிப்பிட்டார்.
இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.முக.பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞ்ரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், நகர தி.மு.க செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் G.செழியன், கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜா கமால், M.E.அஷ்ரப் அலி, ஒன்றிய பிரதிநிதி M.K.பைசல் யூசுப் அலி, ஒன்றிய பிரதிநிதி கோமு, தவ்ஹீத், ஹனிபா, அப்துல் அஹத், ஹபீப் ரஹ்மான், மீராஹுசேன், வேலவன், கோவிந்தராஜ்,ஹமீது கவுஸ், பசீர், உதுமான் அலி, மாமுன் அலி மாலிமார், ஆரிப், நிஜாமுதீன், அன்சாரி, லெட்சுமணன், யாசின், சாஹுல், இஸ்மாயில் உள்ளிட்ட ஏராளமானோர் உடனிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக