திங்கள், 13 பிப்ரவரி, 2012

வாழ்வுரிமைப் போராட்டம் ஏன்? பரங்கிப்பேட்டை த.த.ஜ. பிரச்சாரம்!

பரங்கிப்பேட்டை: எதிர்வரும் பிப்ரவரி 14-ந்தேதியன்று மாவட்டத் தலைநகர் கடலூரில் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சார்பில் நடைபெற உள்ள வாழ்வுரிமை மாநாடு குறித்து தெருமுனைப் பிரச்சாரம் கடந்த சில நாட்களாக பரங்கிப்பேட்டையில் நடைபெற்றது.

சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் நேற்று மாலை நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பங்கு பெற்ற தெருமுனைப் பிரச்சாரம் நடைபெற்றது. இதில் போராட்டத்திற்கு அழைப்பு விடுத்ததுடன், போராட்டம் குறித்த விழிப்புணர்வு பிரச்சாரமும் செய்யப்பட்டது.

அப்துல் மஜீத் உமரி உரை நிகழ்த்திய, இப்பிரச்சாரக் கூட்டத்தில் நகர தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நிர்வாகிகள் பாஜல் உசேன், முத்துராஜா, ஹசன் அலி, முஜீப் சாஹுல் ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

4 கருத்துகள்:

  1. முஹம்மது இஸ்மாயில்13 பிப்ரவரி, 2012 அன்று 10:19 PM

    இன்ஷா அல்லாஹ் போராட்டம் வெற்றிபெற துஆ செய்கிறேன்.

    பதிலளிநீக்கு
  2. சகோதேர்களே இந்த வாழ்வுரிமை போராட்டம் , இட ஓதிகிடு போராட்டமெல்லாம் இந்த உலகம் அழியும் வரை ஓயாது.... அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நமக்கு அழகிய முறையில் வழிகாட்டிருக்க , அதை விட்டு விட்டு ஜனநாயக முறையில் போராட்டமா ? குரான் சுன்னா பேச கூடிய இந்த கூட்டம் இந்த வழிகேட்டிலிருந்து , இந்த ஜனநாயகம் என்ற ஷிர்க்லிருந்து எப்போதுதான் மீள போகிறதோ....

    பதிலளிநீக்கு
  3. போராட்டம் வெற்றிப்பெற்று நமக்கு இடஓதுக்கீடு கிடைத்திட துஆ செய்வோம்

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...