திங்கள், 13 பிப்ரவரி, 2012

பதவியேற்பு விழா துளிகள் (படங்களுடன்)


:::: 10.20-க்கு தொடங்கிய விழா 11.55-க்கு நிறைவுபெற்றது.

:::: 10.40-க்கு பதவி பிரமாணம் செய்து வைக்கப்பட்டது

:::: மவ்லவி கபீர் அஹமது மதனி, வழக்கறிஞர் செய்யது அன்சாரி, சிதம்பரம் மூசா, கேப்டன் ஹமீது ஆகியோர் தலா 10 நிமிடங்கள் உரையாற்றினார்கள்.

:::: சிதம்பரம் தொகுதி சட்டமன்ற உறுப்பினர் K.பாலகிருஷ்ணன் 10.45க்கு வருகை தந்தார்.
:::: சால்வை அணிவிக்க வந்தவர்களை தன் கையில் கொடுக்கும்படி தலைவர் நூர் முஹம்மது கேட்டு கொண்டார். அதனால் யாரும் சால்வைகள் போர்த்தவும் இல்லை – யாருக்கும் போர்த்தப்படவும் இல்லை.
:::: கேப்டன் ஹமீது ஜமாஅத் நிதிக்கு காசோலை மூலம் ரூ12,000 வழங்கினார்.

:::: விழாவில் கலந்துக்கொண்ட சிறப்பு விருந்தினர்களுக்கு நினைவுப்பரிசுகள் வழங்கப்பட்டது.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் உள்ளிட்ட முன்னாள் ஜமாஅத் நிர்வாகிகள் யாரும் கலந்துக்கொள்ளவில்லை.

:::: முன்னாள் அமைச்சரும், புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான செல்வி இராமஜெயம் வருகை தரவில்லை.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற 8-வது வார்டு உறுப்பினர் அருள்முருகன் கலந்துக்கொண்டார்.

:::: இந்தியன் ஓவர்சீஸ் வங்கி முதுநிலை மேலாளர் பாண்டியத்துரை கலந்துக்கொண்டார்.

:::: நகர தி.மு.க.அவைத்தலைவர் வழக்கறிஞர் தங்கவேல் கலந்துக்கொண்டார்.

::::தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் (TNTJ) சார்பில் யாரும் கலந்துக் கொள்ளவில்லை.

:::: மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி பிலால், இந்திய தவ்ஹீத் ஜமாஅத் (INTJ) நிர்வாகி ஹாஜா ஆகியோர் கலந்துக் கொண்டனர்.

:::: பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற முன்னாள் துணைத்தலைவர் செழியன் மற்றும் ஆரியநாட்டு சலங்குகாரத்தெரு பஞ்சாயத்தார்கள் கலந்து கொண்டனர்.

:::: மாதக்கோயில் தெரு பஞ்சாயத்தார்கள் கலந்துக்கொண்டனர்

:::: பரங்கிப்பேட்டை காவல்நிலைய ஆய்வாளர் சுப்ரமணியன் கலந்துக்கொண்டார்.

:::: சிதம்பரம் தாலுகா காவல்துறை ஆய்வாளர் புகழேந்தி பற்கேற்கவில்லை

:::: அழைப்பிதழ் வழங்குவதற்கு பொறுப்பேற்றவர்கள் செய்த குளறுபடியால் சில முக்கியஸ்தர்களுக்கு அழைப்பிதழ் விடுப்பட்டதாக பரவலாக பேசப்பட்டது

:::: கா.மு.கவுஸ் நன்றியுரையாற்றுவார் என்று குறிப்பிடப்பட்டு இறுதியில் மாற்றம் செய்யப்பட்டதால் ஆவேசமுற்ற கா.மு.கவுஸ் நிகழ்ச்சி முடிந்த பின்னர் அதுப்பற்றி குரலெழுப்பிய போது தலைவர் டாக்டர் நூர் முஹம்மது அவரை சமாதானப்படுத்தினார்.
:::: பதவி ஏற்பு விழா முடிவடைந்து சற்று தாமதமாக வந்த பான்மல், டாக்டரை சந்தித்து வாழ்த்து கூறினார்.

:::: இரு திருமண நிகழ்ச்சிகள் நடைபெற வேண்டி இருந்ததால் நிகழ்ச்சி சற்று விரைவாக முடிக்கப்பட்டது.
:::: 11.38-க்கு தொடங்கிய தனது ஏற்புரையை டாக்டர் 11.50-க்கு நிறைவு செய்தார்.

:::: நன்றியுரைக்கு பின்னர் வந்திருந்தோர் டாக்டரை கட்டித் தழுவி தங்களது ஸலாத்தினையும் – வாழ்த்துக்களையும் தெரிவித்தனர்.

:::: தாயகம் வந்திருக்கும் பஷீர் அஹமது (தம்மாம்), குலாம் ஜெய்லானி மியான் (குவைத்), ஹுஸைன் (ரியாத்) உள்ளிட்ட வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை சகோதரர்களின் அமைப்பு பிரதிநிதிகளும் இந்த நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.

:::: விழா முடிவில் அனைவர்களுக்கும் இனிப்பு வழங்கப்பட்டது.


:::: மாலை 6 மணிக்கு ஜமாஅத்தின் முன்னாள் நிர்வாகிகள் ஜமாஅத் அலுவலகத்தை திறந்து, புதிய நிர்வாகத்திடம் ஒப்படைத்தனர்.


களத்தொகுப்பு: ஹம்துன் அப்பாஸ் / MGF

6 கருத்துகள்:

  1. ஜமாஅத் நிர்வாகிகள் மற்றும் பைத்துல்மால் நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள் !

    Nazir Ubaidullah
    Dammam.

    பதிலளிநீக்கு
  2. முஹம்மது ரபி - சென்னை13 பிப்ரவரி, 2012 அன்று 2:27 PM

    இந்த செய்திகளின் மூலம்
    நேரில் கண்டது போல் உணர்ந்தோம்.

    செய்தி வழங்கிய mypnoக்கு நன்றி

    முஹம்மது ரபி, பாரூக், ஹாஜா, சர்தார், சபீக், சுல்தான், பாஷா, அஹமது மற்றும் நண்பர்கள் சார்பாக டாக்டருக்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. புதிய நிர்வாகத்திற்க்கு வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  4. புதிய ஜமாத்திற்கு வாழ்த்துக்கள் ..


    நமதூர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும்,அனைவருடைய ,ஆதரவையும்,ஆலோசனைகளையும் பெற்று,

    குழப்பங்களை தவிர்த்து பாரபட்சமின்றி செயல்பட வாழ்த்துகிறேன்.


    நௌஷாத் அலி..

    அல் கோபார்

    பதிலளிநீக்கு
  5. நமதூர் அனைத்து தரப்பு மக்களும் பயன்பெறும் வகையிலும்,அனைவருடைய ,ஆதரவையும்,ஆலோசனைகளையும் பெற்று,

    குழப்பங்களை தவிர்த்து பாரபட்சமின்றி செயல்பட வாழ்த்துகிறேன்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...