திங்கள், 13 பிப்ரவரி, 2012

மீலாது மாநாடு!

பரங்கிப்பேட்டை: நகர ஜமாஅத்துல் உலமா ஏற்பாடு செய்திருந்த மீலாது நபி மாநாடு பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் நடைபெற்றது. அல்ஹாஸ் அறக்கட்டளை நிர்வாகி எஸ். ஓ. செய்யது ஆரிப் தலைமையில் நடைபெற்ற இந்த மீலாது மாநாட்டிற்கு பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹமது யூனுஸ், கே. பாவாசா மரைக்காயர், கே. ஷேக் அப்துல் காதர் மரைக்காயர், யூ. ஜமால் முஹமது, யூ. ஹபீபுர் ரஹ்மான் ஆகியோர் முன்னிலை வகித்தனர். எ. லியாகத் அலி மன்பஈ வரவேற்புரை வழங்கினார். எம். ஷேக் ஆதம் மழாஹிரி நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.

மூன்று அமர்வுகளாக நடைபெற்ற இந்த மாநாட்டில் பல்வேறு தலைப்புகளில் உரைகள் நிகழ்த்தப்பட்டது. இறுதியமர்வில் இந்திய யூனியன் முஸ்லீம் லீக் துணைத் தலைவர் இ. ஷாகுல் ஹமீத் ஜமாலி சிறப்புரையாற்றினார்.

மீராப்பள்ளி இமாம் அஹ்மத் கபீர் காஷிபி, புதுப்பள்ளி இமாம் காஜா முய்னுத்தீன் மிஸ்பாஹி, இஸ்மாயில் நாஜி காஸ்மி, தவ்லத்துன்னிசா கல்லூரி முதல்வர் அப்துல் காதிர் மரைக்காயர் உமரி, மஹ்முதிய்யா அரபுக் கல்லூரி முதல்வர் முஜிபுர் ரஹ்மான் ரஷாதி, காதிரியா பள்ளி இமாம் நூருல்லாஹ் பையாஜி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர்.

மாநாட்டில் கட்டுரைப் போட்டி மற்றும் வினா-விடைப் போட்டிகளில் வெற்றிப் பெற்றோருக்கு பரிசுகள் வழங்கப்பட்டது.

இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் புதிய தலைவராக பொறுப்பேற்றுள்ள டாக்டர் நூர் முஹம்மது மற்றும் நிர்வாகிகள் வருகை புரிந்தனர்.

இறுதியில் மாநாட்டு தீர்மானத்தை கவுஸ் பள்ளி இமாம் நிஜாமுத்தீன் காஷிபி வாசித்தார். மீலாது கமிட்டி செயலாளர் ஓ. முஹம்மது கவுஸ் நன்றியுரை வழங்கினார்.





4 கருத்துகள்:

  1. நன்மை என நினைத்து தீமை செய்பவர்களை அல்லாஹ் காப்பாற்ற
    மீலாத் கமிட்டியினர் துஆ செய்ய வேண்டும் ............ muthuraja

    பதிலளிநீக்கு
  2. மீலாத் விழாவில் கலந்துக்கொண்ட அனைவருக்கும் வாழ்த்துக்கள்



    ஆபிதீன் ,பரங்கிப்பேட்டை

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...