செவ்வாய், 30 ஏப்ரல், 2013

காத்து வாங்கும் மீன் மார்க்கெட்..! (படங்கள்)




பரங்கிப்பேட்டை: தமிழக அரசு விதித்துள்ள மீன்பிடி தடைகாலம் அமலில் உள்ளதால் மீன்கள் விறபனை செய்யப்படும் பரங்கிப்பேட்டை மீனவர் அங்காடி வியாபாரம் இன்றி வெறிச்சோடி காணப்படுகிறது.

படங்கள்: ஹசன் அலி

அ..தி.மு.க.வின் தெருமுனை பிரச்சாரக் கூட்டம்!




பரங்கிப்பேட்டை:  பரங்கிப்பேட்டை நகர அ.இ.அ.தி.மு.க. சார்பில் தமிழக அரசின் நிதி நிலை அறிக்கை குறித்த தொடர் தெருமுனை பிரச்சாரக் கூட்டங்கள் நேற்று மாலை சின்னக்கடை மற்றும் சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் நடைப்பெற்றது.

நகர செயலாளர் கே. மாரிமுத்து தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்திற்கு மாவட்ட செயலாளர் அருண்மொழித்தேவன் மற்றும் கழக பேச்சாளர் முருகேசன் ஆகியோர் சிறப்புரையாற்றினர். மேலும் இதில் தொகுதி கழக செயலாளர் பி.எஸ. அருள், பரங்கிப்பேட்டை ஒன்றிய கழக செயலாளர், ஆர். சுப்பரமணியன், ஒன்றியக்குழு தலைவர் பி. அசோகன் ஆகியோரும் உரை நிகழ்தினர். நகர கழக செயலாளர்கள், உறுப்பினர்கள் மற்றும் அம்மா பேரவை நிர்வாகிகள் கலந்துக் கொண்ட இக்கூட்டத்தில் மாவட்ட பிரதிநிதி ஹெச். ஷாஜஹான் மற்றும் அம்மா பேரவை செயலாளர் முஹமது இக்பால் ஆகியோர் நன்றியுரை வழங்கினர்.

படங்கள்: ஹசன் அலி

திங்கள், 29 ஏப்ரல், 2013

யார் தலைவர்?

தலைவர்தாம் தலைவர்தாம் தக்கோர் சொல்ல
  தகுமான பண்புடனே 'தோழர்' வேண்டும்
நிலைமாறா நியதிகளைப் புரிய வேண்டும்
  ஞாயங்கள் நேர்த்திகளும் தெரிய வேண்டும்
விலைபோகா வித்தகராய் விளங்க வேண்டும்
  வேந்தராகச் சத்தியம்தான் இலங்க வேண்டும்
அலைமேவும் கடல்போன்ற ஆர்ப்பு மின்றி
  அமைதியிலே ஆழியாக ஆள வேண்டும்

தலைமையதன் சிறப்பென்றால் தகுதி காத்தல்
  தக்கபடி பணிசெய்ய தேரும் ஆட்கள்
நிலைமறந்து போகாத நல்ல புத்தி
  நிதானத்தை மறவாமல் கொள்ளும் உத்தி
வலையெதிலும் சிக்காமல் வாழ்க்கைப் போக்கில்
  'வலை'ஞானம் கொண்டாலும் வலிமை என்பேன்.
கலைந்திடுமே இப்பதவி ஒற்றை நாளில்
  கருத்தான பதில்கூற மறுநாள் உண்டே!



பணத்திற்குக் குனியாத உயரம் கேட்போம்
  பதவிக்கு வளையாத முதுகைக் கேட்போம்
இனங்காணும் உயர்வுக்காய் உழைக்க வந்து
   எப்படியும் நல்வழிக்கே அழைக்கக் கேட்போம்
சினமேற்றி தன்பணியை சாதிக் கின்ற
   சிறுமதியோர் துதிபாட்டுச் சேர்க்கைப் போக்கி
குணக்குன்றாய் எழுந்தபடி குழப்பம் நீக்கி
   கருத்தாலே ஈர்க்கின்ற கனிவு கொள்க!

பதவிகளை நாடாத பண்பு உள்ளம்
  படைத்தவனை மறவாத பான்மை கொண்டு
உதவிகளைச் செய்வதுவே உயர்த்தும் என்றே
   உரைக்கின்ற தோழமைகள் பேண வேண்டும்
எதுவரினும் தயங்காமல் எதிர்கொள் வீரம்
  எங்கேதான் தவறென்று ஆய்ந்தே ஏற்று
மதவெறியை இனவெறியை மாய்த்துக் காட்டி
  மடைமா(ற்)றும் சிறியோரை மீட்க வேண்டும்

கதியிங்கே தானேயென்ற கர்வம் இன்றி
  கடுகளவே நாமென்ற கல்வி பெற்று
சதிசெய்யும் சிறுமதியோர் சிந்தை வென்று
  சமுதாய நலம்பேணச் செய்தால் வெற்றி
புதிதாக குழப்பத்தைப் புனையும் தீயோர்
  பக்கத்தில் வாராமல் பார்த்துக் கொள்க
விதியாக வாய்ப்பதுவே பதவி யெல்லாம்
   விளையாட்டுப் பொருள்தானே இறையின் கையில்!

சனி, 27 ஏப்ரல், 2013

குடிநீர் குழாய் பழுது!


பரங்கிப்பேட்டை: பக்கீர் மாலிமார் தெரு மற்றும்  மெயின் ரோடு சந்திப்பில் குடிநீர் குழாய் பழுதடைந்துள்ளது. இதனல் குடிநீர் கசிச்து தெருவில் நீர் தேங்கியதுடன் சாலையும் பழுதானது.

தற்போது இதனை சரிசெய்யும் பணி பரங்கிப்பேட்டை பேரூராட்சி சார்பில் நடைப்பெற்று வருகிறது.

வியாழன், 25 ஏப்ரல், 2013

பளபளக்கும் சென்னை ஏர்போர்ட்!



சென்னை பன்னாட்டு முனையம் விரிவக்கத்துடன் நவீன மயமாக்கப்பட்டு பயணிகள் பயன்பாட்டுக்காக தயாராக உள்ளது.
சென்னை மீனம்பாக்கம் விமானநிலையத்தில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் பயணிகளின் எண்ணிக்கை மற்றும் எதிர்கால வளர்ச்சியின் தேவையை சமளிக்க கூடிய வகையில் 1,33,462 சதுர மீட்டர் கொண்ட புதிய உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்கள் கட்டப்பட்டு உள்ளன. 36 மாதங்களில் முடிக்கவேண்டிய இந்த பணிகள், நிலம் கையகப்படுத்தல் போன்ற பணிகளால் தாமதம் ஏற்பட்டது.

தமிழக அரசின் முழுமையான ஒத்துழைப்புடன் இந்த கட்டிடங்கள் கட்டி முடிக்கப்பட்டு உள்ளன. விமான நிலைய முனையங்கள் தற்போது தொடங்கி வைக்கப்பட்டாலும், அவற்றை ஒரு மாதத்திற்குள் முழுமையான செயல்பாட்டிற்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது... இந்த விமான நிலையத்தின் உள்நாட்டு மற்றும் பன்னாட்டு முனையங்களில் ஆண்டுக்கு 1 கோடியே 40 லட்சம் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது.

பயணிகள் எந்தவித தடையின்றி விரைவாக பயணம் செய்யும் வகையில் புதிய விமான நிலையம் அமைந்துள்ளது.. தற்போது கட்டுமானப் பணியில் இருக்கும் சென்னை மெட்ரே ரயில் போக்குவருத்து இரண்டு முனையங்களுடன் இணைக்கப்பட உள்ளது.

புதன், 24 ஏப்ரல், 2013

லயன்ஸ் கிளப் - மாவட்ட ஜமாஅத் இணைந்து நடத்திய மருத்துவ முகாம் (படங்கள்)










பரங்கிப்பேட்டை அரிமா சங்கமும் (லயன்ஸ்  கிளப்)  கடலூர் மாவட்ட ஐக்கிய  ஜமாஅத்தும் இணைந்து மாபெரும் மருத்துவ முகாம்  ஒன்றை இன்று மஹ்மூதிய்யா ஷாதி மஹாலில்  நடத்தின. (துண்டு பிரசுரத்தில் முஹம்மதியா ஷாதிமஹால் என்று குறிப்பிடப்பட்டிருந்தது).

பரங்கிப்பேட்டை நகர அரிமா சங்கத் தலைவரும் , மாவட்ட ஜமாஅத்தின் தலைவருமான பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் அரிமா M.S..முஹம்மது யூனுஸ் வரவேற்புரையாற்றினார். அரிமா  334-A3 மாவட்ட ஆளுநர் R.M.  சுவேதகுமார் முகாமைத் தொடங்கி வைத்தார்.

“என்னை-யும் கவனியுங்களேன்” – கும்மத்பள்ளி குளம்


பரங்கிப்பேட்டை: மாசற்ற காற்று,  நீர் வளம் இவைகளே, வருங்கால சமுதாயத்திற்கு நாம் இட்டும் செல்லும் சொத்துக்கள் என்று சுற்றுப்புற சூழலுக்காகவும், நீர் வளத்திற்காகவும் குரல்கள் வலுவாக ஒலிக்க தொடங்கி பக்கீர் மாலிமார் பள்ளி குளம் தூர் அகற்றல்  போன்ற நல்ல பல மாறுதல்கள் முன்னெடுத்து செல்லப்படும் வேளையில்,  கும்மத்பள்ளி குளம் தாமரை செடிகளால் சூழப்பட்டு பராமரிப்பின்றி காட்சியளிக்கிறது.

 புதிய பள்ளிவாசல் கட்டிடம் கட்டுவதற்காக அமைக்கப்பட்டுள்ள குழுவினர்,  குளத்தின் பரமாரிப்பு பணியிலும் தங்கள் கவனத்தை செலுத்த வேண்டும் என்பதே சுற்றுச்சூழல் ஆர்வலர்களின் எதிர்பார்ப்பு

மழை நீர் வடிகால் புதுப்பிக்கும் பணி!

பரங்கிப்பேட்டை: சின்னத்தெரு – காஜியார் தெரு – சாணார முடுக்குப் பகுதிகளிலிருந்து வெளியாகும் மழை நீர்  அல்குரைசி தர்கா சந்து வழியாக அமைக்கப்பட்ட வடிகால் மூலம் வெளியாகி வந்தது. ஆனால் முறையான பராமரிப்பு இல்லாததினால் கழிவு நீர் ஓடும் வடிகாலாக மாறிவி;டது. மேலும் இவ்வடிகால் அமைக்கப்பட்டு நீண்ட நாட்கள் ஆனதால் மோசமான நிலையில் காணப்பட்டது, இந்நிலையில் புதியதாக வடிகால் அமைக்கும் பணிகள் கடந்த சில நாட்களாக நடைபெற்று வருகின்றது.

செவ்வாய், 23 ஏப்ரல், 2013

ஜமாஅத் நிர்வாக் கூட்டம்: மீண்டும் பொறுப்பேற்றார் நூர் முஹம்மது!

பரங்கிப்பேட்டை: விடுப்பில் சென்ற பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மது மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்பு இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் டாக்டர் எஸ். நூர் முஹம்மது விடுப்பில் சென்றதால் பொறுப்பு தலைவராக எம்.எஸ் அலி அக்பர் செயல்பட்டு வந்தார். இந்நிலையில் கடந்த இரு தினங்களுக்கு முன்பு விடுப்பில் சென்ற தலைவர் மீண்டும் பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து நேற்று இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் அலுவலகத்தில் அதன் நிர்வாகக் கூட்டம் நடைப்பெற்றது. டாக்டர் எஸ் நூர் முஹம்மது தலைமையில் நடைப்பெற்ற இக்கூட்டத்தில் ஜமாஅத் நி;வாகிகள் மற்றும் பைத்துல் மால் கமிட்டி நிர்வாகிகள் கலந்துக் கொண்டனர்.

மீராப்பளியில் நடைப்பெற்ற ஷரிஅத் ஆலோசனைக் கூட்டம்!



பரங்கிப்பேட்டை: எதிர் வரும் மே மாதம் 5-ந்தேதி மாவட்டம் தழுவிய சிறப்பு ஷரிஅத் மாநாடு சிதம்பரத்தில் நடைபெற உள்ளது. இதற்கான ஆலோசனைக் கூட்டம் பரங்கிப்பேட்டையின் அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள் முன்னிலையில் நேற்று மாலை மீராப்பள்ளியில் நடைபெற்றது.

அடுத்த மாதம் 5-ந்தேதி சிதம்பரம் லால்கான் பள்ளிவாசலில் கடலூர் மாவட்டம் தழுவிய சிறப்பு ஷரிஅத் மாநாடு நடைபெற இருக்கிறது. இது குறித்த சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நேற்று மாலை மஃரிப் தொழுகைக்கு பிறகு ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியில் நடைப்பெற்றது. அனைத்து பள்ளிவாசல் நிர்வாகிகள், உலமாக்கள், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாகிகள் முன்னிலையில் நடைப்பெற்ற இந்த ஆலோசனை அமர்வில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றத் தலைவர் எம்.எஸ். முஹம்மது யூனுஸ் கலந்துக் கொண்டார்.

ஷாதி மஹாலில் நானை மருத்துவ முகாம் - இருதய மருத்துவதிற்கு முன்பதிவு!

பரங்கிப்பேட்டை: தமிழக முதலமைச்சரின் விரிவான மருத்துவக் காப்பீட்டுத்திட்டத்தின் கீழ் புதுவை  மகாத்மாகாந்தி மருத்துவமனை, ஃபோர்டிஸ் மலர் மருத்துவமனை, SR-ENT மருத்துவமனை இணைந்து கடலூர் மவாட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் மற்றும் பரங்கிப்பேட்டை லயன்ஸ் கிளப்  தலைமையில் இலவச மருத்துவ முகாம் பரங்கிப்பேட்டை ஷாதி மஹாலில் நானை நடைபெற உள்ளது..

இந்த மருத்துவ முகாமில் மகப்பேறு, குழந்தைகள் நலம், கண், எலும்பு, நரம்பியல், சிறுநீரகம் மற்றும் காது, மூக்கு, தொண்டை சம்மந்த நோய்களுக்கு மருத்துவ ஆலோசனை வழங்கப்பட உளள்து. குறிப்பாக 100 பேருக்கு இருதய மருத்துவ பாசோதனை இலவசமாக வழங்கப்பட உள்ளது. இதற்கு முன் பதிவு அவசியம் (காண்க: நோட்டீஸ்)

சனி, 20 ஏப்ரல், 2013

மீராப்பள்ளியில் மாணவர்கள் படையெடுப்பு: குளக்கரையில் பாதுகாப்பு ஏற்பாடு!


பரங்கிப்பேட்டை: ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் தற்போது மீராப்பள்ளியில் நடைப்பெற்று வரும் நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகளுக்கு மாணவர்கள் படையெடுத்துள்ளனர். கோடை விடுமுறையை பயனுள்ளதாக கழிக்க பெற்றோர்கள் காட்டிவரும் ஆர்வத்தினால் தற்போது இந்த வகுப்புகள் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

மாணவர்கள் அதிக அளவில் வருகை புரிவதால் குளக்கரை பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்து வருகிறது. இந்நிலையில் இதற்றகாக மீராப்பள்ளி நிர்வாகம் ஏற்கனவே இனை கருத்தில் கொண்டு குளக்கரையயில் தடுப்பு வேலி அமைத்ததுடன் எச்சரிக்கை பலகையும் வைத்துள்ளது.

ஜமாஅத்துல் உலமாவின் 9ம் ஆண்டு கோடைக்கால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகள்!





பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர ஜமாஅத்துல் உலமா பேரவை சார்பில் கோடைக்கால நல்லொழுக்க (தீனிய்யாத்) பயிற்சி வகுப்புகள் இன்று தொடங்கின. ஒன்பதாவது ஆண்டாக தொடர்ந்து நடைபெறும் இப்பயிற்சி பயிலரங்கத்தில் பள்ளி மாணவ-மாணவியர்கள் பலர் கலந்துக்கொண்டுள்ளனர்.

ஆண் பிள்ளைகளுக்கும், 9 வயதுக்குட்பட்ட பெண் பிள்ளைகளுக்கும் ஜாமிஆ மஸ்ஜித் மீராப்பள்ளியிலும், 9 வயதுக்கு மேற்பட்ட பெண் பிள்ளைகளுக்கு தவ்லத் நிஸா மகளிர் அரபுக் கல்லூரியிலும் வகுப்புகள் நடத்தப்படுவதாகவும், குறைந்த கட்டணத்தின் வாகன வசதி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும், திறமையான ஆலிம்கள் மற்றும் ஆலிமாக்கள் மூலம் வகுப்புகள் நடைபெறும் என்றும் ஜமாஅத்துல உலமா சபையினர் தெரிவித்தனர்.
 
இப்பயிற்சி வகுப்புகள் முடிவடைந்ததும் தேர்வுகளும், போட்டிகளும் நடைபெற இருக்கின்றன. வெற்றி பெறும் மற்றும் கலந்துக் கொள்ளும் மாணவ-மாணவிகளுக்கு பரிசுகளும், சான்றிதழ்களும் வழங்ப்பட உள்ளன. இப்பயிற்சி வகுப்பில் திருக்குர்ஆனை எப்படி முறைப்படி தஜ்வீதுடன் ஓதுவது, இஸ்லாமிய கொள்ளை விளக்கம், தொழுகை, ஹதீஸ் கலை, துஆக்கள் மனனம் போன்றவையுடன் உலமாக்களில் சொற்பொழிவுகளும் நடைபெற இருக்கின்றன.

இன்னும் மெனக்கெட்டு உழைப்பேன்: கஃபார் அலி கான்!

பரங்கிப்பேட்டை: நடந்து முடிந்த சவுதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்க தலைவர் தேர்தலில் வெற்றிப் பெற்ற கஃபார் அலி கான் தற்போது விடுமுறைக்காக பரங்கிப்பேட்டை வந்துள்ளார். இந்த வெற்றி குறித்து அவர் MYPNO-விடம் பேசியதாவது: "எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே! இந்த தேர்தலில் எனக்கு வாக்களித்த எல்லா சகோதரர்களுக்கும் எனது நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன். இந்த முறை தேர்தல் அறிவித்து தலைவரை தேர்ந் தெடுக்கும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. தேர்தல் என்று வந்துவிட்டாலே வெற்றி - தோல்வி என்பது சகஜம். ஆனால் என்மீது நம்பிக்கை வைத்து இந்த வெற்றியை பரங்கிப்பேட்டைவாசிகள் கொடுத்துள்ளார்கள். நான் எப்போதும் நமதூர் நலனுக்காக உழத்துக் கொண்டுதான் இருக்கிறேன். தற்போது கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வுச் சங்க தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளதால் இன்னும் மெனக்கெட்டு ஊர் நலனுக்காக உழைப்பேன்" என்றார். தற்போது விடுமுறைக்காக ஊர் வந்துள்ளதால் விடுமுறைக்கு பிறகு இந்த பொறுப்பை ஏற்று செயல்படுவேன் என்றும் கூறினார்.

தேர்தல் அவசரம்!!! தேர்தல் எங்கே?

தேர்தல் அவசரம்!!! தேர்தல் எங்கே? தற்செயலாக ஜீப் "செயலகம்" நோக்கி போகிறது. தமிழ்நாடு சட்டசபை கலைக்கப்பட்டது வருகிறது?

படம் & தகவல்: Jawad

தொ.மு.ச. செ.குப்புசாமி காலமானார்!

திமுக தொழிற்சங்கமான தொமுச பேரவை தலைவரும், முன்னாள் எம்.பியுமான செ.குப்புசாமி நேற்று இரவு மாரடைப்பால் காலமானார். அவருக்கு வயது 88. கடந்த சில நாட்களாக குப்புசாமி உடல் நலமின்றி இருந்தார். இதனால் மருத்துவமனையில் அவர் சிகிச்சை பெற்று வந்தார். இந்நிலையில், நேற்றிரவு வீட்டில் இருந்தபோது, அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டு உயிர் பிரிந்தது.

முன்னாள் எம்.பி.,யான அவரின் மறைவுக்கு, மூன்று நாள் துக்கம் அனுசரிக்கப்படும் என, தி.மு.க.,அறிவித்துள்ளது. சென்னையில், இன்று அவரின் இறுதிச்சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தி.மு.க. தலைவர் கருணாநிதி, பொருளாளர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்டோர் செ.குப்புசாமி மறைவுக்கு இரங்கல் தெரிவித்துள்ளனர்.

வியாழன், 18 ஏப்ரல், 2013

பரங்கிப்பேட்டையில் பள்ளி இடை நின்ற மாணவர்கள் கணக்கெடுப்பு!

பரங்கிப்பேட்டை பகுதியில் பள்ளி இடை நின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள் கண்டறிந்து கணக்கெடுப்புப் பணி நடக்கிறது.
பரங்கிப்பேட்டை ஒன்றியம் அனைவருக்கும் கல்வி இயக்கம் சார்பில் பள்ளி இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள்
கண்டறியும் பணி நடந்தது. இதில் பரங்கிப்பேட்டை பகுதியை
சேர்ந்த ஊராட்சி பள்ளி ஆசிரியர்கள் பங்கேற்று கணக்கெடுப்பு செய்து வருகின்றனர். ஆசிரியர்கள் பரங்கிப்பேட்டை பகுதியில் 210 குடியிருப்புகளில் வீடு, வீடாக சென்று இடைநின்ற மற்றும் புலம் பெயர்ந்த மாணவர்கள் குறித்து
விசாரணை செய்து கணக்கு எடுப்பு செய்தனர்.
இதில் வட்டார வள மைய மேற்பார்வையாளர் அம்பிகாகுமாரி, உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்
கல்வி அலுவலர்கள் தியாகராஜன், சரஸ்வதி லட்சுமி மற்றும் ஆசிரிய பயிற்றுநர்கள், கிராம கல்விக்குழு, மேலாண்மைக்குழு உறுப்பினர்கள்
பங்கேற்றனர்.

புதன், 17 ஏப்ரல், 2013

குமாஸ்தா கொலை: சஞ்சிவீராயர் கோயில் தெருவில் சாலை மறியலால் போக்குவரத்து பாதிப்பு!



பரங்கிபபேட்டை: பரங்கிப்பேட்டை வழக்குரைஞர் குமாஸ்தா கொலை செய்யப்பட்டு புதைக்கப்பட்ட விவகாரத்தில் புதைக்கப்பட்ட உடலை காவல் துறையினர் தோண்டி எடுத்து சம்பவ இடத்திலேயே பிரேத பரிசோதனை செய்தனர்.

பரங்கிபபேட்ங்கிடை அகரத்தைச் சேர்ந்த ராஜா (37). இவர் வழக்குரைஞர் குமாஸ்தாவாக இருந்தார். இந்நிலையில் இவர் கொலை செய்யப்பட்டு உடல் பரங்கிப்பேட்டை அருகே உள்ள சம்மந்தம் கிராமத்தில் உள்ள ஷேக்அப்துல்லா என்பவரது நிலத்தில் புதைக்கப்பட்டிருந்தது  தெரியவந்தது. தகவல் அறிந்த காவல் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை மேற்கொண்டனர்.
வட்டாட்சியர் மற்றும் காவல் துறையினர் முன்னிலையில் உடல் தோண்டி எடுக்கப்பட்டு அரசு மருத்துவமனை மருத்துவர்களை கொண்டு பிரேத பரிசோதனை செய்யப்பட்டது. கடலூரிலிருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

ராஜாவை கொலை செய்த குறறவாளிகளை உடனடியாக கைது செய்ய வேண்டும் என வலியுறுத்தி பரங்கிபபேட்டை அகரம் காலனி மக்கள் சாலைமறியலில் ஈடுபட்டனர். காவல் துறையினர் அவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி விரைவில் குற்றவாளிகளை கைது செய்வதாக உறுதியளித்ததை அடுத்து மறியலை திரும்ப பெற்றனர்.
இதனையடுத்து நேற்று மாலை பிரேத பரிசோதனை செய்யப்பட்ட உடலை வாங்க மாட்டோம், குற்றவாளிகளை கண்டுபிடிப்பதில் காவல் துறையினர் மெத்தனம் காட்டுகிறது எனக் கூறி விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் மற்றும் அகரம் காலனி மக்கள் நேற்று மாலை 7 மணியளவில் சஞ்சிவீராயர் கோயில் தெரு முனையில் திடீர் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணிநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
இதனையடுத்து விடுதலை சிறுத்தைகள் கட்சியின் மாவட்ட செயலாளருடன் காவல் துறையினர் நடத்திய பேச்சுவார்த்தையை அடுத்து சாலை மறியில் திரும்பப்பெறப்பட்டது.

திங்கள், 15 ஏப்ரல், 2013

கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை போல் ஸ்டார் அமைப்பு மற்றும் கல்விக்குழு (இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்) இனைந்து நடத்திய 10, 11, 12 ஆம் வகுப்பு படித்த மாணவர்களுக்கான மேற்கல்வி வழிகாட்டு நிகழ்ச்சி சனிக்கிழமை காலை 10 மணி முதல் 1 மணிவரை கலிமா மெட்ரிகுலேஷன் பள்ளியில் சிறப்பாக நடைபெற்றது.
 
இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்தின் தலைவர் (பொறுப்பு) அலி அக்பர் அவர்கள் தலைமை ஏற்றார். போல் ஸ்டார் அமைப்பின் தலைவர் ஹமீது அப்துல் காதர் அவர்கள் முன்னிலை வகித்தார். போல் ஸ்டார் அமைப்பின் செயலாளர் செய்யது அலி அவர்கள் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார். கல்விக்குழுவின் முஹம்மத் அலி (ஜமீல்) குர்ஆன் கிராஅத் (தமிழாக்கத்துடன்) ஓதினார்.    
   
சிறப்பு விருந்தினர் மற்றும் வழிகாட்டல் உரை நிகழ்த்திய இளையான்குடி ஜாகிர் ஹுசைன் கல்லூரியின் பேராசிரியர் டாக்டர் ஆபிதீன் அவர்கள் சொல்வன்மை மிக்க முறையில் தனது உரையினை துவங்கி கல்வியின் அவசியத்தை மாணவர்களும் பெற்றோர்களும் தெளிவாக புரிந்துக்கொள்ளும் வண்ணம் உரையாற்றினார். 

இத்தனை வகையான படிப்புக்கள் உள்ளனவா என்று வந்திருந்த மாணவர்கள் வியக்கும் வண்ணம் கிட்டத்தட்ட 100 வகையான படிப்புக்களை பற்றி விளக்கமாக கூறினார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பம்சம் பெரிய ஸ்லைட்டுடன் கூடிய பவர்பாயிண்ட் பிரசண்டேஷன் தான். மாணவர்கள் மற்றும் பெற்றோர்களுக்கு விஷயங்கள் எளிதில் புரியும் வண்ணம் ஒவ்வொரு படிப்பையும் படங்களாக ஸ்லைட் மூலம் ஓடவிட்டு காட்டி தொகுத்து வழங்கியது சொல்லவந்த விஷயத்தை பற்றி தெளிவை வழங்கியது. 

பிறகு சில மாணவர்கள் கேள்விகள் கேட்டனர். அவற்றிக்கு பதிலளிக்கப்படது. நிகழ்ச்சியின் முடிவில் நிகழ்ச்சி பற்றிய கருத்துக்கள் (FEEDBACK / SUGGESTIONS) கேட்டு வாங்கப்பட்டது. கலந்து கொண்ட அனைவருக்கும் குளிர்பானங்களும் பிஸ்கட்களும் வழங்கப்பட்டது.

-அபூ பிரின்சஸ்

சனி, 13 ஏப்ரல், 2013

கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை சங்க தலைவர் பதவிக்கு வரும் 19 அன்று தேர்தல்




தம்மாம்: சவூதி அரேபியா கிழக்கு மாகாண பரங்கிப்பேட்டை நல்வாழ்வு சங்கத்தின் தலைவர் பதவிக்கு எதிர்வரும் 19-ந்தேதியன்று தேர்தல் நடைபெற உள்ளது. இந்த தேர்தல் அறிவிப்பை அதன் தலைவர் எஸ். வஜ்ஹஹுத்தீன் ஏற்கனவே கடந்த மாதம் அறிவித்து விட்டாலும், தேர்தல் குறித்த சலசலப்புகள் நிலவி வந்தது. இந்நிலையில் நேற்று தம்மாமில் நடைபெற்ற  முக்கிய கூட்டத்தில் தேர்தல் குறித்து நிலவிவந்த பல்வேறு விசயங்களும் பேசித் தீர்க்கப்பட்டு சுமூக முடிவுகள் எடுக்கப்பட்டது.

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...