ஐக்கிய அமீரக வாழ் பரங்கிப்பேட்டை மக்கள், தங்களின் பொதுச்சேவைக்கான பணிகளை ஒருங்கிணைக்க வேண்டி அமைப்பு ஒன்றினை துவக்கிட வேண்டி கலந்தாலேசிப்பதற்காக நடைபெற்ற சிறப்புக்கூட்டம் துபாய் கரமா பகுதியில் நடைபெற்றது.
கூட்டத்தினை ஜமால் மரைக்காயர் இறைவசனங்களை ஓதி தொடங்கி வைத்தார். பரங்கிப்பேட்டைக்கான அமீரகம் தழுவிய அமைப்பு உருவாக்குவது குறித்து விவாதிக்கப்பட்டு "அமீரக பரங்கிப் பேட்டை முஸ்லிம் அமைப்பு" (PMAUAE) என்கிற அமைப்பு தொடங்கப்பட்டது.
மேலும் இவ்வமைப்புக்கான நிர்வாகக்குழுவை தேர்ந்தெடுக்கும் விதமாக ஒரு தேர்வுக்குழு அமைக்கப்பட்டு கீழ் கண்ட சகோதரர்களை தேர்வுகுழு உறுபினர்களாக பொதுக்குழுவாக கூடிய அன்பர்களால் ஒருமனதாக தேர்வு செய்யப்பட்டது.
1. ஹுசைனுல்லாபுதீன்
2. செய்யது ஜியாவுதீன்
3. காதர் அலி
4. முஹம்மது உவைஸ்
5. அபுல் ஹசன்
6. ஜமால் மரைக்காயர்
7. ஷாகுல் ஹமீது (Aramax)
8. கவிமதி
9. தாஹா மரைக்காயர்
10. இபுராஹிம் ஷாகுல் ஹமீது (பாஷா)
11. முஹம்மது ஹாரூன்
மேலும் வரும் 24.05.2013 வெள்ளிக் கிழமை மேற்கண்ட தேர்வுக்குழுவினர் கூடி அமைப்பின் சட்ட திட்ட வரைவுகள் குறித்தும், நிவாகிகள் தேர்வு செய்வது குறித்தும் விவாதித்து அவற்றை வருகிற 07.06.2013 வெள்ளி கிழமை அன்று கூட இருக்கிற பொதுக்குழுவில் சமர்பிக்க முடிவு செய்யப்பட்டது.
பொதுக்குழுவில் கலந்துக்கொள்ளும் அனைத்து சகோதரர்களின் ஆலோசனைகள் படி இவற்றை விவாதித்து புதிய முறையில் அமைப்பின் தலைவர்,செயலளார்,பொருளாளர் மற்றும் இதர நிர்வாகிகளை தேர்வு செய்ய முடிவு செய்யப்பட்டது
தகவல் & படம்: எம்.கே.கவுஸ்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக