வியாழன், 29 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டையில் இந்தியன் வங்கி ஏ.டி.எம். அமைக்குமா..?!



பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளை மேற்கொள்ளும் ஐசிஐசிஐ வங்கி, இந்தியன் ஓவர்சீஸ் வங்கி, இந்தியன் வங்கி இவற்றில் இந்தியன் வங்கியினை தவிர்த்து ஏனைய இரு வங்கிகளும் ஏ.டி.எம் நிறுவி வாடிக்கையாளர்களுக்கு சேவை அளித்து வருகின்றன.

இந்நிலையில் பரங்கிப்பேட்டை நகரில் வங்கிப்பணிகளில் ஈடுபடாத ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி வங்கி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவையும் ஏ.டி.எம் நிறுவியுள்ளனர். இதில் ஆக்ஸிஸ் வங்கி ஏ.டி.எம். சமீப காலமாக செயல்படவில்லை என்று தெரிகிறது.

ஆனால் பரங்கிப்பேட்டையின் பிரதான வங்கிகளில் ஒன்றான இந்தியன் வங்கியில் ஏ.டி.எம் சேவை இதுவரை பொதுமக்களுக்கு வழங்கப்படாமல் இருப்பது வியப்பினையும் வருத்தத்தையும் அளிக்கிறது.

இது குறித்து வங்கியின் தலைமை அலுவலகத்தை தொடர்பு கொண்ட போது மண்டல அலுவலகத்தை தொடர்பு கொள்ளுங்கள் என்பதே பதிலாக கிடைத்தது. தன்னை அறிமுகப்படுத்தி கொள்ள விரும்பாமல் கருத்து தெரிவித்த  வங்கி ஊழியர் ஒருவர் இது குறித்து கூறுகையில்,"வங்கியுடன் இணைந்தவாறு (ON SITE) இயங்கும் வகையில் செயல்படக்கூடிய ஏ.டி.எம் தயாராக இருப்பதாகவும் ஆனால் அதை அமைப்பதற்கான இடப்பற்றாக்குறையின் காரணமாகவே இப்பணியில் தாமதம் ஏற்படுகிறது" என்றார்.  

ஆக்ஸிஸ் வங்கி, கரூர் வைஸ்யா வங்கி, ஹெச்.டி.எஃப்.ஸி, பாரத ஸ்டேட் வங்கி ஆகியவை வங்கி அலுவலகத்தோடு இணையாமல்  தனியாக (OFF SITE) ஏ.டி.எம்  அமைத்து முன்னோடியாக வழிகாட்டியுள்ள நிலையில் பரங்கிப்பேட்டை இந்தியன் வங்கி உடனடியாக ஏ.டி.எம் அமைக்க வேண்டும் என்பதே பரங்கிப்பேட்டை பகுதி மக்களின் எதிர்பார்ப்பு அதற்கேற்ப வெளிநாடு வாழ் பரங்கிப்பேட்டை மக்களும்  இந்தியன் வங்கி உயரதிகாரிகளை தொடர்பு கொண்டு வலியுறுத்த வேண்டும்.


MYPNO.COM  செய்திக்காக  ஹம்துன் அப்பாஸ்
படங்கள்: ஹஸன் அலி

புதன், 28 ஆகஸ்ட், 2013

பரங்கிப்பேட்டை நீதிமன்றத்தில் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் முன்னிலை..!

பரங்கிப்பேட்டை: கடந்த சட்டப்பேரவைத் தேர்தலின்போது புதுச்சத்திரம் அருகே பெத்தாங்குப்பம், கம்பளிமேடு, சிந்தாமணிக்குப்பம் ஆகிய கிராமங்களில் 17 நான்கு சக்கர வாகனங்கள், 45 மோட்டார் சைக்கிள்கள் ஆகிய வாகனங்களுடன்  தமிழக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டார். 

அப்போது தேர்தல் நன்னடத்தை நெறிமுறைகள் கண்காணிப்பு அலுவலர் கலையரசி, தேர்தல் விதிமுறைகளை மீறி கூடுதல் வாகனங்களுடன் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் பரப்புரையில் ஈடுபட்டதாக அளித்த புகாரின்பேரில் புதுச்சத்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்தனர்.

இதனையொட்டி இன்று காலை பரங்கிப்பேட்டை குற்றவியல் மற்றும் நடுவர் நீதிமன்றத்தில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  முன்னிலை ஆனார்.  பின்னர்  இவ்வழக்கு விசாரணையை 3-9-2013-க்கு ஒத்திவைத்து நீதிபதி பரமசிவம் உத்தரவிட்டார்.



முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர் செல்வம் நீதிமன்றத்தில் முன்னிலை ஆவதையொட்டி, பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க.செயலாளர் முத்து பெருமாள், பேரூராட்சி மன்ற தலைவர் முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ்,  நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், கடலூர் மாவட்ட தி.மு.க பிரதிநிதி ஏ.ஆர்.முனவர் உசேன், சிதம்பரம் நகர செயலாளர் செந்தில் குமார், புவனகிரி ஒன்றிய தி.மு.க.செயலாளர் , வி.என்.ஜெயராமன், கிள்ளை ரவிச்சந்திரன், பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் நடராஜன், முன்னாள் துணைத்தலைவர் செழியன், கோமு, வேலவன், ஆரிபுல்லாஹ்,ஜி.எம்.கவுஸ்,மாயகிருஷ்ணன் உள்ளிட்ட ஏராளமான தி.மு.க.வினர் திரண்டதால் பரங்கிப்பேட்டை நீதிமன்ற வளாகம் பரபரப்பாக காணப்பட்டது.

ஞாயிறு, 25 ஆகஸ்ட், 2013

ஓவியர் சரவண ராமலிங்கம் மறைவு!

ஓவியர் சரவண ராமலிங்கம் நேற்று மாலை இயற்கை எய்தினார். இவர் பரங்கிப்பேட்டையின் பிரபல ஓவியராக இருந்து சரவணா ஸ்டூடியோவை நடத்திவந்தர். மேலும் இவர் பரங்கிப்பேட்டை அரசு தொடக்கப் பள்ளியின் தலைமை ஆசிரியராகவும் இருந்தவர் ஆவார். அன்னாரது இறுதி ஊர்வலம் இன்று பகல் 12 மணிக்கு அவரது இல்லத்தில் இருந்து புறப்படும்.

தகவல்: மரு. லெ. பூபதி

வெள்ளி, 23 ஆகஸ்ட், 2013

கடந்த வார நிகழ்வு: போல் ஸ்டார் கருத்தரங்கம்..!









பரங்கிப்பேட்டை: கல்வி முன்னேற்றம் குறித்த கருத்தரங்கம் அண்மையில் பரங்கிப்பேட்டை பி.எம்.ஹபீபுல்லாஹ் மண்டபத்தில் நடைபெற்றது. பரங்கிப்பேட்டை "போல் ஸ்டார்" அமைப்பு சார்பாக நடைபெற்ற இந்நிகழ்வில் வெளிநாடு வாழ் பரங்கியர்கள் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். இசட்.. முஹம்மது முக்தார் இறைவசனம் ஓதி கருத்தரங்கத்தினை தொடங்கி வைத்தார்.

கடந்த 20 ஆண்டுக்கால பரங்கிப்பேட்டை கல்வி நிலை குறித்த தகவல்களை தெரிவித்த பொறியாளர் கவுஸ் ஹமீது, இந்திய ஆட்சிப்பணி உள்ளிட்ட உயர்கல்வி தொடர்பாக பல்வேறு வழிகாட்டுதல்களை இந்த அமைப்பின் சார்பாக துவக்க நிலையிலிருந்தே வழங்க இருப்பதாக தெரிவித்தார். முன்னதாக கல்விக்குழு ஆர்வலரும், mypno.com ஆசிரியர்களுல் ஒருவருமான எல்.ஹமீது மரைக்காயர் வரவேற்புரையாற்றினார்.

இந்நிகழ்ச்சியில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்ற தலைவரும், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் செயல் தலைவருமான முனைவர் எம்.எஸ்.முஹம்மது யூனுஸ், இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் நிர்வாக தலைவர் கேப்டன் எம்.ஹமீது அப்துல் காதர் மற்றும் நிர்வாகிகள் பார்வையாளர்களாக பங்கேற்றனர்.

கடந்த வார நிகழ்வு: கவுஸ் பள்ளியில் பெருநாள் சந்திப்பு..!





பரங்கிப்பேட்டை:  ஈகைத்திருநாள் உற்சாகத்தினை தொடர்ந்து கவுஸ் பள்ளி வட்டார இளைஞர்கள் பங்கேற்ற "பெருநாள் சந்திப்பு நிகழ்ச்சி அண்மையில் கவுஸ் பள்ளியில் இரவு தொழுகைக்கு பின்னர் நடைபெற்றது. 

 இந்நிகழ்ச்சியில், பெருநாளை முன்னிட்டு,  வெளிநாடுகளிலிருந்து  விடுப்பில் பரங்கிப்பேட்டைக்கு வருகை தந்திருக்கும் இளைஞர்கள் உள்ளிட்ட அப்பகுதி இளைஞர்கள் பங்கேற்றனர்.  

மவ்லவி  ஹெச்.அப்துஸ் ஸமத் ரஷாதி, இறைவசனம் ஓதி துவக்கி வைத்த இந்த அமர்வில் கவுஸ்பள்ளி வளாகத்தில் சமீபத்தில் நடைபெற்ற வளர்ச்சிப்பணிகள், மற்றும் எதிர்கால திட்டங்கள் பற்றி கலந்துரையாடப்பட்டது. இரவு உணவிற்கும் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

இந்நிகழ்ச்சியில் பங்கேற்றதை மிகுந்த மகிழ்ச்சியாக கருதுவதாகவும், தெரு/பகுதி மக்களிடம்  நெருக்கமான நல்லுறவிற்கு இதுப்போன்ற பெருநாள் சந்திப்புகள் வழிவகுப்பதாகவும், இது தொடர வேண்டும் என்று mypno.com-செய்தியாளரிடம் பேசிய வெளிநாடு வாழ் பரங்கியர் ஒருவர் கருத்து தெரிவித்தார்.  இந்நிகழ்ச்சிக்கான ஏற்பாடுகளை ஆர்.தவ்ஹீத், கே.அன்வர் ஹஸன் உள்ளிட்டோர் சிறப்பாக செய்திருந்தனர்

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...