செவ்வாய், 20 அக்டோபர், 2009
ஊனமுற்றோரை பணியிலமர்த்தினால் ஊக்கமளிக்கும் திட்டம் அறிமுகம்
ஞாயிறு, 31 மே, 2009
பெண்கள், ஊனமுற்றோருக்கு தொழிற்பயிற்சி: ஜூன் 2-ல் தேர்வு
தாழ்த்தப்பட்டவர்கள், பெண்கள் மற்றும் ஊனமுற்றோருக்கு 6 வார கால தொழில் திறன் பயிற்சி ஜூன் 3-ம் தேதி தொடங்குகிறது.இதற்கான
ஆட்கள் தேர்வு ஜூன் 2-ம் தேதி கடலூரில் நடக்கிறது.மத்திய அரசின் சிறு, குறு தொழில் மற்றும் நடுத்தரத் தொழில்கள் வளர்ச்சி நிலைய உதவி இயக்குநர் வெள்ளிக்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு:
எஸ்.சி., எஸ்.டி. பிரிவினர் பெண்கள், ஊனமுற்றோர் சுயதொழில் புரியும் வகையில் தொழில் திறன் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கடலூர் செம்மண்டலம் பாரத் கணினி மையத்தில் இந்த பயிற்சி ஜூன் 3-ம் தேதி முதல் ஜூலை 13-ம் தேதி வரை நடைபெறும்.
பயிற்சியில் தொழில் தொடங்கத் தேவையான ஆலோசனைகள் வழங்கப்படும்.
குறைந்த முதலீட்டில் நடத்தப்படும் சில பொருள்களின் தயாரிப்பு குறித்துச் செய்முறை பயிற்சியும் அளிக்கப்படும்.
கிளீனிங் பெளடர், சொட்டு நீலம், மெழுகுவர்த்தி, காகிதப் பொருள்கள், உணவு தயாரித்தல் போன்றவை செய்முறை விளக்கம் அளிக்கப்படும்.
வங்கிகளில் கடன் பெறுவதற்குத் திட்ட அறிக்கை தயாரித்தல், தொழிலை நிர்வகிக்கவும் தேவையான திறமையை மேம்படுத்துதல், அரசின் சலுகைகள், கடன்கள் குறித்தும் விளக்கம் அளிக்கப்படும்.
பயிற்சியில் சேர குறைந்தபட்சக் கல்வித் தகுதி 10-ம் வகுப்பு தேர்ச்சி.
18 முதல் 45 வயது வரை.
சேர விரும்புவோர் ஜூன் 2-ம் தேதி கடலூர் செம்மண்டலம் பாரத் கணினி மையத்தில் காலை 10 மணிக்கு தங்கள் பெயரைப் பதிவு செய்து கொள்ள வேண்டும்.
அவரிகளில் தேர்ந்து எடுக்கப்படும் 45 பேருக்கு 6 வார காலம் பயிற்சி அளிக்கப்படும் என்றும் செய்திக் குறிப்பு தெரிவிக்கிறது.
செவ்வாய், 12 மே, 2009
ஊனமுற்றோர், பார்வையற்றோர் ஓட்டளிக்க வசதிகள் தயார்
லோக்சபா தேர்தலில் பார்வையற்றவர்கள் ஓட்டளிக்க வசதியாக, ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் முதன் முறையாக, 'பிரைல் ஸ்டிக்கர்' ஒட்டப்படுகிறது. ஓட்டுப்பதிவு இயந்திரத்தில் உள்ள சின்னங்களின் வரிசையை பார்வையற்றவர்கள் அறிந்துகொள்ள, 'பிரைல்' முறையில் தயாரிக்கப்பட்ட புத்தகமும் ஓட்டுச்சாவடியில் இருக்கும்.
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
இலங்கையில் தமிழர்கள் படுகொலை செய்யப்படுவதை கண்டித்து மனித உரிமைகள் கழகத்தினர் பரங்கிப்பேட்டையில் கடந்த 09.11.2008 ஞாயிறு அன்று மெளன ஊர்வலம்...