விடுதலைப்புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
விடுதலைப்புலிகள் லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

திங்கள், 18 மே, 2009

இலங்கையில் விடுதலைப்புலிகள் சுற்றி வளைப்பு கடலூரில் தீவிர கண்காணிப்பு!

இலங்கையில் ராணுவத்துக்கும் விடுதலைப்புலிகளுக்கும் இடையே போர் உச்சகட்டத்தை அடைந்துள்ளது.

விடுதலைப்புலிகளின் முக்கிய தலைவர் இந்தப்போரில் கொல்லப்பட்டுள்ளனர்.

போர் தீவிரமடைந்துள்ளதால் கடல் வழியாக விடுதலைப்புலிகள் தமிழகத்துக்கு ஊடுருவும் வாய்ப்பு உள்ளது.

எனவே கடலோர பகுதிகளில் தீவிர கண்காணிப்பில் கடலோர காவல்படையினரும், கியூ பிராஞ்ச் போலீசாரும் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்டத்திலும், கடலோர பகுதிகள் தீவிரமாக கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கடற்கரை கிராமங்களையும் கண்காணித்து வருகிறார்கள்.

கடலூர் மாவட்டத்தில் குள்ளஞ்சாவடி, குறிஞ்சிப்பாடி, பரங்கிப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் இலங்கை அகதிகள் முகாம் உள்ளது.

அங்கு போலீசார் தீவிர சோதனை நடத்தினர்.

சோதனை சாவடிகளிலும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

விடுதலைப்புலிகள் ஊடுருவலா? பரங்கிப்பேட்டை, கடலூர் கடற்கரை கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீஸ் சோதனை

தமிழகத்தில் அகதிகள் பெயரில் விடுதலைப்புலிகள் ஊடுருவ இருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலோர சோதனை சாவடிகளான வல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ரெட்டிச்சாவடி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் கடலோர காவல் படை தீவிர சோதனை நடத்தி வருகிறது.

இது தவிர கடற்கரையோர கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களான தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு, அக்கரை கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்கு துறை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, தைக்கால் தோணித்துறை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

மேலும் விருத்தாசலம் குள்ளஞ்சாவடி, அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களிலும் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Source : மாலை மலர்