ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

விடுதலைப்புலிகள் ஊடுருவலா? பரங்கிப்பேட்டை, கடலூர் கடற்கரை கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீஸ் சோதனை

தமிழகத்தில் அகதிகள் பெயரில் விடுதலைப்புலிகள் ஊடுருவ இருப்பதாக மத்திய உள்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதனால் தமிழகத்தில் கடலோரத்தில் உள்ள 13 மாவட்டங்களில் தீவிர சோதனை நடத்தும்படி உத்தரவிடப்பட்டுள்ளது.

இதை தொடர்ந்து இந்த மாவட்டங்களில் கடலோர காவல் படையினர் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடலூர் மாவட்டத்தில் கடலோர சோதனை சாவடிகளான வல்லம்படுகை, பரங்கிப்பேட்டை, புதுச்சத்திரம், ரெட்டிச்சாவடி, ஆலப்பாக்கம் உள்ளிட்ட 8 இடங்களில் கடலோர காவல் படை தீவிர சோதனை நடத்தி வருகிறது.

இது தவிர கடற்கரையோர கிராமங்களில் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர சோதனையில் ஈடுபட்டுள்ளனர்.

கடலூர் மாவட்ட கடற்கரை கிராமங்களான தேவனாம்பட்டினம், சிங்காரதோப்பு, அக்கரை கோரி, ராசாப்பேட்டை, சித்திரைப்பேட்டை, பரங்கிப்பேட்டை, கிள்ளை, எம்.ஜி.ஆர். திட்டு, முழுக்கு துறை, புதுக்குப்பம், புதுப்பேட்டை, தைக்கால் தோணித்துறை ஆகிய இடங்களில் இந்த சோதனை நடந்தது.

மேலும் விருத்தாசலம் குள்ளஞ்சாவடி, அம்பலவாணன் பேட்டை, குறிஞ்சிப்பாடி, காட்டுமன்னார் கோவில் ஆகிய இடங்களில் உள்ள அகதிகள் முகாம்களிலும் கியூ பிராஞ்ச் போலீசார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டுள்ளனர்.

Source : மாலை மலர்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...