வெள்ளி, 9 மே, 2008

12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு


12 ம் வகுப்பு அரசு தேர்வு முடிவு தற்போது 2 மணி நேரம் முன்பு வெளியானது. தற்போது வெளியான முடிவுகளின் படி கலிமா மேல்நிலைப்பள்ளி 87 சதவிகிதம் தேர்ச்சி (23க்கு 20 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளது. அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி 47 சதவிகிதம் தேர்ச்சியும் (102 க்கு 47 பேர் தேர்ச்சி), அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 55 சதவிகிதம் தேர்ச்சியும் (122க்கு 67 பேர் தேர்ச்சி) பெற்றுள்ளன. 1200க்கு 1123 மதிப்பெண்கள் பெற்று கலிமா மேல்நிலைபள்ளியை சேர்ந்த சுல்தானி என்கிற மாணவி (10ம் வகுப்பிலும் இவரே முதல் மதிப்பெண்) ஊரின் முதல் மதிப்பெண் எடுத்துள்ளார். முஹம்மது அக்ரம் (கலிமா நகர்) 1200 க்கு 991 மதிப்பெண் பெற்று அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் முதல் மதிப்பெண் பெற்றுள்ளார். அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியின் சுபஸ்ரீ என்கிற மாணவி 1200க்கு 989 மதிப்பெண் பெற்று பள்ளி முதல் நிலை பெற்றுள்ளார்..

முதல் நிலை அடைந்து சாதித்த மாணவ மாணவியருக்கும், வெற்றி பெற்ற அனைவருக்கும், அவர்தம் பெற்றோர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் மைபிஎன்ஓ வலைப்பூ சார்பில் வாழ்த்துக்கள தெரிவித்துக்கொள்கிறோம்.

தேர்வு முடிவுகள் குறித்த தகவல்கள உடனடியாக வழங்கி உதவிய பரங்கிப்பேட்டை கல்விக்குழுவிற்கு வலைப்பூ சார்பில் நன்றி

இன்ஷா அல்லாஹ் மிக விரைவில் முதல் நிலை சாதித்த மாணவ மாணவியரின் பேட்டிகள் வலைப்பூவில் வெளியாகும்.

புதன், 7 மே, 2008

சாலைப் பணிகள் மும்முரம்



தெத்துக்கடை-காந்தி சிலையிலிருந்து ரேவு மெயின் ரோடு கடைசி வரையில் சுமார் 19 லட்சம் மதிப்பில் 3 கி.மீ. தூரத்திற்கு சாலை போடும் பணி நடைபெற்று வருகிறது. இதற்காக ஏற்கனவே பெரிய கடைத் தெரு பகுதியில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டு தற்போது சாலை பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இந்த பகுதியில் புதிய சாலை அமைக்கும் பணி நடைபெற்று வருவதால் வாகனங்கள் சென்று வர சிரமம் ஏற்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் மாற்று வழியில் சென்று கொண்டிருக்கிறது.

செவ்வாய், 6 மே, 2008

கடைகளை உடைத்துக் கொள்ளை.


பரங்கிப்பேட்டை சஞ்சிவிராயர் அருகே அமைந்துள்ள ஜெய்லானி காம்பிளக்ஸ் வளாகதில் அமைந்துள்ள சவுதியா டைம் சென்டர் மற்றும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் ஆகிய இரு கடைகளிலும் இன்று அதிகாலை சுமார் 1 லட்சம் மதிப்புள்ள பொருட்கள் களவாடபட்டுள்ளது.

இக்கொள்ளை சம்பவத்தில் சவுதியா டைம் சென்டர் கடையில் சுமார் 40,000 மதிப்புள்ள மொபைல் போன்கள், கைகடிகாராங்கள் மற்றும் ரொக்கமாக 2500 ரூபாயும் அதன் அருகே உள்ள பேமலி கார்னர் கடையில் சுமார் 20,000 மதிப்புள்ள துணிமணிகள், ஆபரன மற்றும் வாசனை திரவிய பொருட்கள் திருடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் தொடர்பாக பரங்கிப்பேட்டை காவல் நிலையத்தில் புகார் செய்யபட்டுள்ளது.

மேலும் இச்சம்பவம் தொடர்பாக ஆட்டோ டிரைவர் கூறும் போது, அதிகாலை சுமார் 4 மணியளவில் ஒரு அறியாத நபர் தன்னுடன் புவனகிரி வரை பயணித்ததாகவும், அந்நபரிடம் இருந்த இருபைகளில் நிறைய பொருட்கள் வைத்திருந்தகவும் போலிஸ் விசாரனையில் தெரிவித்தார்.

புகாரை அடுத்து, இத்திருட்டு சம்பவதில் தொடர்புடைய நபர், அவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில் போலிஸார் விசாரனை நடத்தி வருக்கிறார்கள்.

இத்தகைய திருட்டு பரங்கிப்பேட்டையில் அரிதான ஒன்று என்றாலும் பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.