
பரங்கிமா நகர் மக்களின் நீண்டநாள் கோரிக்கையை பரிசீலித்து பரங்கிப்பேட்டையிலிருந்து சென்னைக்கு எக்ஸ்பிரஸ் சேவையில் போக்குவரத்து பணியை தொடர்ந்தது அரசுப்போக்குவரத்து கழகம். இதன்படி இரவு 10 மணிக்கு பரங்கிப்பேட்டையிலிருந்து தினமும் சென்னைக்கு புறப்பட்டு செல்கிறது. நேற்று ஞாயிறு என்பதால் அதிகமான பயணிகள காண முடிந்தது.
இதுபற்றி இப்பேருந்தின் நடத்துனர் கூறியதாவது : "இப்புதிய பேருந்தின் சேவை சிறப்பாக அமைய இவ்வூர் மக்கள் ஆதரவளித்தால்தான் இதனை எக்ஸ்பிரஸ் சேவையாக தொடர முடியும்." இப்பேருந்து சேவையினால் பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளார்கள்.
"இது எங்களுக்கு மட்டுமின்றி பொதுமக்கள் அனைவருக்குமே மிகவும் பயனுள்ளதாக உள்ளது. இதனால் எங்களின் மிகப்பெரிய சிரமம் குறைந்துள்ளது." என்கின்றனர் சென்னை கல்லூரிகளில் படிக்கும் பரங்கிப்பேட்டை மாணவர்கள்.