செவ்வாய், 10 பிப்ரவரி, 2009

மாவட்ட இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் ஒருங்கிணைப்பு





முஸ்லிமகளின் ஒற்றுமைக்காக பாடுபட வேண்டிய நமது சமுதாய இயக்கங்கள் அவ்வப்போது பிரிந்து நின்று சமுக ஒற்றுமையை பல்லிளிக்க வைத்து கொண்டிருக்கும் வேளையில் முஸ்லிம் சமுதாயத்திற்கு ஆறுதல் அளிக்கும் நிகழ்வாக சிறு மற்றும் பெரு ஊர்களின் முஸ்லிம் ஜமா-அத்களை ஒருங்கிணைத்து மாவட்ட அளவில் முஸ்லிம் ஐக்கிய ஜமா-அத் உருவாக்கப்பட்டுள்ளது.

இதன் ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாகிகள் தேர்தலுக்கான கூட்டம் இன்று (10/பிப்ர/2009)ஷாதி மஹாலில் நடைபெற்றது. கடலூர் மாவட்டத்தில் உள்ள 230 மஹல்லாக்களில் இருந்து இருநூற்றுக்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.அரசின் சலுகைகளை முஸ்லிம் சமுதாய மக்களுக்கு பெற்று தருவதை மையமாக கொண்டு உருவாக்கப் பட்டுள்ள இந்த ஜமா-அத்தின் தலைவராக பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமா-அத்தின் தலைவர் முஹம்மது யூனூஸ் செயலாளராக கடலூர் ஓ.டியை சேர்ந்த கமலூதீன் பொருளாளராக விருதாச்சலத்தை சேர்ந்த ஓய்வு பெற்ற தாசில்தார் சிக்கந்தர் ஹயாத் கான் ஆகியோர் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.பிற விவரங்கள் விரைவில்...

ஞாயிறு, 8 பிப்ரவரி, 2009

நமது தேர்தல் அதிகாரிகள்


பரங்கிபேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருக்கான தேர்தலில் யார் அல்லது எது எப்படி போனாலும், தேர்தல் தான் என்று முடிவான ஆறாம் தேதி மாலை முதல் தங்கள் தூக்கத்தை தொலைத்து விட்டவர்கள் வேறு யாருமல்ல.... நமது தேர்தல் அதிகாரிகள் தான். 
வாக்காளர் பட்டியல் தயார் செய்வது, சுமூகமான தேர்தல் நடைமுறைக்கு திட்டமிட்டு செயல்களை முன்னெடுத்து செல்லுதல் என்று முதுகு வலி வராத குறைதான். சும்மாவே கருப்பு அல்லது வெள்ளை மனோபாவம் (ஒன்னு இப்படி இரு அல்லது அப்படி இரு நடுவுல இருக்காதே இருக்க விடவே மாட்டோம் ) கொடி கட்டி பறக்கும் நம் தாய் திரு நகரில் (இந்த வார்த்தை நல்ல இருக்கே ... copyright owned ) நடுநிலைமை பேணுவது என்பது எத்தனை கஷ்டம் என்பது இவர்கள் படும் பாட்டை பார்த்தாலே தெரிகிறது. 

தேர்தல் அதிகாரிகளில் நால்வர் பல அரசு தேர்தல்களை நடத்தி முடித்த அனுபவம் உள்ளவர்கள். மெத்த படித்த இவர்களிடம் வாய் புளித்ததோ மாங்காய் புளித்ததோ என்று தானும் ரூல்ஸ் பேசவேண்டும் என்று சில தகுதி அற்ற மக்கள் வந்து குரல் உயர்த்தி பேசும் போது அதை காணும் நாமும் மனதளவில் நொந்து போகிறோம்.

சனி, 7 பிப்ரவரி, 2009

மனித நேய மக்கள் கட்சி துவக்க விழா




தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் அரசியல் பிரிவாக இன்று மாலை சென்னை தாம்பரத்தில் துவக்கப்படும் மனித நேய மக்கள் கட்சி யின் துவக்க விழாவுக்கு பரங்கிபேட்டையில் இருந்து இன்று பலர் புறப்பட்டு சென்றனர். 

இது குறித்து பரங்கிபேட்டை தமிழ்நாடு முஸ்லீம் முன்னேற்ற கழகத்தின் நகர தலைவர் ஜனாப் சையத் ஆரிப் அவர்களிடம் பேசியதில் இன்று காலை சுமார் பதினொரு மணிக்கு மீராபள்ளியிலிருந்தும், ஹக்க சாஹிப் தெருவிலிருந்தும் சுமார் பத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் கிளம்பி கொண்டிருப்பதாக கூறினார். 

முஸ்லிம்களின் இந்த புதிய அரசியல் முன்னெடுப்பு குறித்த இறைவனின் நாட்டம் என்ன என்பதை காலம் சொல்லும்.