சனி, 26 பிப்ரவரி, 2011

பரங்கிப்பேட்டை அ.தி.மு.க.வினர் கொண்டாடிய ஜெயலலிதா பிறந்தநாள்

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை நகர அ.தி.மு.க.சார்பில் ஜெய லலிதா பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவுக்கு நகர செயலாளர் மாரிமுத்து தலைமை தாங்கினார்.
விழாவில் புவனகிரி தொகுதி சட்டமன்ற உறுப்பினர் செல்வி ராமஜெயம் கலந்து கொண்டு அன்னதானம் வழங்கினார். விழாவில் நகர தலைவர் மலைமோகன், நகர இளைஞரணி செயலாளர் சங்கர், வார்டு செயலாளர்கள் சம்பந்தம், மாரியப்பன், மாவட்ட பிரதிநிதிகள் ஷாஜகான், குமார், இளைஞரணியை சேர்ந்த பிரபு, மணி, முகமது இக்பால், சக்ரவர்த்தி, அருள் ராஜன், மாலிமார், மாரியப்பன், குணசேகரன், ராமச்சந்திரன், முகமது காமில் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

அரசு ஆண்கள் பள்ளியின் முப்பெரும் விழா

பரங்கிப்பேட்டை: பரங்கிப்பேட்டை அரசினர் ஆண்கள் மேல்நிலைப் பள்ளியின் 94- வது ஆண்டு விழா, இலக்கிய மன்ற விழா மற்றும் விளையாட்டு போட்டி விழா நேற்று நடைபெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவரும் பேரூராட்சி மன்ற தலைவருமான முஹமது யூனுஸ் தலைமையில் தொடங்கிய இந்த ஆண்டுவிழாவில், பள்ளியின் தலைமையாசிரியர், பேரூராட்சி மன்ற துணைத்தலைவர் செழியன் முன்னிலை வகித்தனர்.
பள்ளியின் 94-வதுஆண்டு விழா உடன் இலக்கிய மன்ற மற்றும் விளையாட்டுப் போட்டி விழாவினை உள்ளடக்கி முப்பெரும் விழாவாக நடைபெற்றது. விளையாட்டுப் போட்டிகளில் வென்ற மாணவர்களுக்கும் இலக்கிய மன்ற போட்டிகளில் பங்குபெற்ற மாணவர்களுக்கும் விழாவில் பரிசுகள் வழங்கப்பட்டது.

இவ்விழாவில் பான்மல், த.மு.மு.க. நிர்வாகி ஆரிப், மலைமோகன், பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள், ஜமாஅத் நிர்வாகிகள் உட்பட பள்ளி மாணவர்கள் பெரும்பாலோனோர் மற்றும் பெற்றோர்கள் கலந்துக் கொண்டனர்.


புகைப்படம்: நன்றி PNO.NEWS

ஜமாஅத்துடன் லயன்ஸ் கிளப் இணைந்து நடத்திய இலவச இரத்ததான முகாம்

பரங்கிப்பேட்டை: இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத்துடன் இணைந்து பரங்கிப்பேட்டை லயன்ஸ் சங்கம் சார்பில் இரத்ததான முகாம் ஹபீபுல்லாஹ் மரைக்காயர் நினைவு ஷாதி மஹாலில் நேற்று நடைபெற்றது. லயன்ஸ் சங்க நிர்வாகி இராதாகிருஷ்ணன் தலைமையில் நடந்த இம்முகாமை பேரூராட்ச்சி மன்ற தலைவரும் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் துவக்கிவைத்தhர் கலிமா. சேக் அப்துல் காதர் மரைக்காயர், மரு. சரவணகுமார், காதர் அலி மரைக்காயர், வெங்கடேசன், புருஷோத்த்மன், மற்றும் பலர் இந்த இரத்ததான முகாம் துவக்க நிகழ்ச்சியில் கலந்துக்கொண்டனர்.


புகைப்படம்: C.W.O.