திங்கள், 28 பிப்ரவரி, 2011

இறப்புச் செய்தி

ஆத்தாங்கரை தெருவை சேர்ந்த, மர்ஹும் செய்யது நூர் அவர்களின் மகளாரும்,மர்ஹும் S.சேக் முஹம்மது அவர்களின் மனைவியும், S.M.ஜலீல் அவர்களின் தாயாருமாகிய ஹாஜியா.செய்யது நிஷா பீவி அவர்கள் மர்ஹும் ஆகிவிட்டார்கள் இன்ஷா அல்லாஹ் இன்று மாலை 5 மணிக்கு நல்லடக்கம் சிங்கப்பூரில்.


இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

ஞாயிறு, 27 பிப்ரவரி, 2011

போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது

தமிழகம் முழுவதும் இன்று இரண்டாம் கட்ட போலியோ ‌சொட்டு மருந்து வழங்கப்படுகிறது. சுமார் 70 லட்சம் குழந்தைகளுக்கு சொட்டு மருந்து வழங்கப்பட உள்ளது. ஆரம்ப சுகாதார நிலையம், அரசு மருத்துவமனைகள், தனியார் மருத்துவமனைகள், பள்ளிகள், சத்துணவு மையங்கள் உள்ளிட்ட அனைத்து முக்கிய இடங்களிலும் செட்டு மருந்து வழங்கப்படுகிறது

சனி, 26 பிப்ரவரி, 2011

விருப்ப மனு தாக்கல்

தமிழகத்தின் 14-வது சட்டமன்ற தேர்தலுக்காக பல்வேறு அரசியல் கட்சிகளும், கூட்டணி தொடர்பாக முனைப்பாக பணியாற்றி வருகின்றன.இந்நிலையில் ஆளும் திராவிட முன்னேற்றக் கழகம் தேர்தலில் போட்டியிடும் தனது கட்சியினரிடமிருந்து விருப்ப மனுவினை நேற்று முதல் மார்ச் 7-வரை பெற திட்டமிட்டுள்ளது.


முதல் நாளான நேற்று சிதம்பரம் சட்டமன்ற தொகுதிக்காக பரங்கிப்பேட்டையிலிருந்து கடலூர் மாவட்ட தி.மு,க பிரதிநிதியும், பரங்கிப்பேட்டை நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹுசேன், பரங்கிப்பேட்டை ஒன்றிய பிரதிநிதியும், 10-வது வார்டு செயலாளருமான M.K. பைசல் யூசுப் அலி ஆகியோர் விருப்ப மனுவினை தி.மு.க தலைமைக்கழகமான அண்ணா அறிவாலயத்தில், மாநில இளைஞரணி துணைச்செயலாளர் ஹஸன் முஹம்மது ஜின்னா உள்ளிட்ட தலைமைக்கழக நிர்வாகிகளிடம் சமர்ப்பித்தனர்.  A.R.முனவர் ஹுசேன் கடந்த முறை புவனகிரி தொகுதிக்காக விண்ணப்பித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிகழ்ச்சியின் போது நகர தி.மு.க செயலாளர் பாண்டியன், ஒன்றிய பிரதிநிதி கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், சேக் அப்துல் ரஹ்மான், ஹாஜா, நெய்னா, யாசீன், சலீம், அப்துல் காதர், ஆரிப், பக்ருதின், சாஹுல் ஹமீது உட்பட ஏராளமானோர் உடனிருந்தனர். 


--
அண்ணா அறிவாலய வளாகத்திலிருந்து mypno.com செய்திக்காக ஹம்துன் அப்பாஸ்.