பரங்கிப்பேட்டை கீரைக்காரத் தெருவைச் சேர்ந்த சங்கரின் மகன் ராம்குமார் (18). இவர் அப்பகுதியில் உள்ள நண்பர்களுடன் கிரிக்கெட் விளையாடிய போது கடந்த ஏப்ரல் 15-ம் தேதி கீழே விழுந்ததில் ராம்குமாருக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. உடனடியாக அவர் புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார். பின்னர் மேல் சிகிச்சைக்காக சென்னை தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த ராம்குமார் புதன்கிழமை இறந்தார். இதுகுறித்து பரங்கிப்பேட்டை போலீஸார் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர் என்று தினமணி நாளேடு செய்தி வெளியிட்டுள்ளது.
வெள்ளி, 22 ஏப்ரல், 2011
திங்கள், 18 ஏப்ரல், 2011
வாலிபால் கோப்பையை வென்றது புதுவை அணி; பரங்கிப்பேட்டைக்கு 2-வது இடம்!
பரங்கிப்பேட்டை: வாத்தியாப்பள்ளி கைப்பந்து அணி மற்றும் பெரியதெரு இளைஞர்கள் சேர்ந்து நடத்திய மாநில அளிவிளான கைப்பந்து போட்டிகள் கடந்த இரண்டு தினங்களாக பரங்கிப்பேட்டை ராலி தோட்டத்தில் நடைபெற்று வந்தது. பகல்-இரவு ஆட்டங்களாக நடைபெற்று வந்த இப்போட்டிகளில் தமிழ்நாடு மற்றும் புதுவையிலிருந்து பல்வேறு அணிகள் பங்கு பெற்றன. நேற்று இரவு நடந்த இறுதியாட்டத்தில் புதுவை பாரதி அணியும் பரங்கிகப்பேட்டை அணியும் மோதின. விறுவிறுப்பாக நடைபெற்ற இந்த இறுதியாட்டத்தில் புதுவை பாரதி அணி வெற்றி பெற்று முதல் பரிசை தட்டிச் சென்றது.
பரங்கிப்பேட்டை அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மூன்றாவது பரிசு திருச்சி அணிக்கு கிடைத்தது. ரூ. 10,000 ரூ. 8,000 ரூ 7,000 என்று முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவரும் ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் பங்குபெற்று விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
Photos: TNTJ-PNO
பரங்கிப்பேட்டை அணி இரண்டாவது இடத்தை பிடித்தது. மூன்றாவது பரிசு திருச்சி அணிக்கு கிடைத்தது. ரூ. 10,000 ரூ. 8,000 ரூ 7,000 என்று முறையே முதல், இரண்டாவது மற்றும் மூன்றாவது இடத்தை பெற்ற அணிகளுக்கு வழங்கப்பட்டது. பரிசளிப்பு நிகழ்ச்சியில் பேரூராட்சி மன்றத் தலைவரும் ஜமாஅத் தலைவருமான முஹமது யூனுஸ் பங்குபெற்று விளையாட்டு வீரர்களுக்கு பரிசுகளை வழங்கினார்.
Photos: TNTJ-PNO
ஞாயிறு, 17 ஏப்ரல், 2011
பரங்கிப்பேட்டையில் மாவட்ட அளவிலான வாலிபால் போட்டி...!
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)
-
பரங்கிப்பேட்டை தேர்தல் வரலாற்றில் முதல்முறையாக…! பரங்கிப்பேட்டை இஸ்லாமிய ஐக்கிய ஜமாத் தலைவர் பொறுப்பிற்கு நான்காவது முறையாக இன்று 04-01-20...
-
பரங்கிப்பேட்டை: மீராப்பள்ளி தெருவில் நீண்ட காலமாக செயல்பட்டு வந்த சின்னக்கடை அஞ்சல்நிலையம் மற்றும் முசாபர்கானா எனப்படும் சத்திரம் குறித்து ...
-
சற்று முன் வெளியிடப்பட்ட பத்தாம் வகுப்பு தேர்வு முடிவில் பரங்கிப்பேட்டை அளவில் பள்ளிகளின் தேர்ச்சி விவரம் சதவிகிதத்தில்: சேவாமந்திர் பள்ளி...





