ஞாயிறு, 5 ஜூன், 2011

பரங்கிப்பேட்டையில் கலைஞர் பிறந்த நாள்

பரங்கிப்பேட்டையில் முன்னாள் முதல்வர் கலைஞர் பிறந்த நாள் தி.மு.க-வினரால் கொண்டாடப்பட்டது, இதனையொட்டி அன்று காலை 8.30 மணியளவில், பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறும் நோயாளிகளுக்கு பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ் தலைமையில்  பரங்கிப்பேட்டை ஒன்றிய தி.மு.க செயலாளர் - சேர்மன் முத்துபெருமாள் பழம், பிரட் வழங்கினார். இந்நிகழ்ச்சியில் நகர தி.மு.க. செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணைத் தலைவர் G.செழியன், மாவட்ட தி.மு.க பிரதிநிதியும் நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் உசேன், கவுன்சிலர்கள் M.G.M.ஹாஜா கமால், M.E.அஷ்ரப் அலி உட்பட பலர் பங்கேற்றனர்.அகரம் கொள்ளுமேடு பகுதியில் நடந்த கொடியேற்று நிகழ்ச்சிக்கு கிளைச் செயலர் சரவணன் தலைமை தாங்கினார்.

வெள்ளி, 3 ஜூன், 2011

இறப்புச் செய்தி

வல்லத்தம்பி மரைக்காயர் தெருவில் மர்ஹும் மஸ்தான் ஷா அவர்களின் மகனாரும், மர்ஹும் பிஸ்மில்லாஹ் சாபு அவர்களின் தம்பியும், அஹமது மரைக்காயர் அவர்களின் மாமாவுமாகிய ஷேக் யூசுப் அவர்கள் மர்ஹும் ஆகி விட்டார்கள். இன்ஷா அல்லாஹ் இன்று வெள்ளிக்கிழமை (03-06-2011) மாலை 7 மணிக்கு நல்லடக்கம் புதுப்பள்ளியில்.

இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிவூன்

வியாழன், 2 ஜூன், 2011

பரங்கிப்பேட்டையில் எளிமையுடன் துவங்கியது 20கி இலவச அரிசித் திட்டம்!

பரங்கிப்பேட்டை:  தமிழக அரசின் இலவச அரிசி வழங்கும் பணி பரங்கிப்பேட்டை நியாய விலை கடைகளில் எளிமையுடன் நேற்று துவங்கியது. முறைகேடுகளை தவிர்க்க அதிகாரிகள் குழுவினர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர். தமிழக முதல்வராக கடந்த 16ம் தேதி பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதாஇ ரேஷன் கார்டுகளுக்கு மாதம் 20 கிலோ அரிசி ஜூன் மாதம் 1ம் தேதி முதல் இலவசமாக வழங்கப்படும் என அறிவித்தார். அதனையொட்டி பரங்கிப்பேட்டை உள்ளிட்ட கடலூர் மாவட்டத்தில் உள்ள ஆறு லட்சத்து 38 ஆயிரத்து 525 ரேஷன் கார்டுகளுக்கு இலவச அரிசி வழங்கும் பணி, ஆயிரத்து 360 நியாய விலை கடைகளில் நேற்று காலை துவங்கியது.

இத்திட்ட துவக்க விழாவில் ஆடம்பரம் கூடாது; அரசியல் பிரமுகர்கள் எவரும் பங்கேற்கக்கூடாது எனவும், இலவச அரிசி வழங்கும் பணியில் முறைகேடுகள் நடந்தால் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவிக்க முதல்வர் அறிவுறுத்தியிருந்தார். இதன் காரணமாக பரங்கிப்பேட்டையில் இலவச அரிசி வழங்கும் பணி எந்தவித ஆடம்பரமும் இன்றி அமைதியாக துவங்கியது.