ஞாயிறு, 12 ஏப்ரல், 2009

டி.என்.பி.எஸ்.சி., (TNPSC) பணிவாய்ப்பு

கடந்த சில ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி., (TAMILNADU PUBLIC SERVICE COMMISSION / தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) அறிவித்து வரும் ஆயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களில் எண்ணற்ற இளைஞர்கள் நுழைந்திருக்கின்றனர்.

மாநிலமெங்கும் வேலையில்லாத இளைஞர்கள் பலருக்கும் எதிர்காலத்தைத் தரும் கற்பக விருட்சமாக அரசு வேலைகள் தான் இருக்கின்றன.

டி.என்.பி.எஸ்.சி., தற்போது டிரக் இன்ஸ்பெக்டர் (Drug Inspector) பணிக்கான 24 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான விளம்பரம் கடந்த வாரம் பல செய்தித்தாள்களில் வெளியானது. இப்பணிகளுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.

தகுதிகள் :

  • 1.7.2009 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • பார்மசி, கிளினிகல் பார்மகாலஜி, பார்மாசூடிக்கல் சயின்ஸ் இவற்றில் ஒன்றில் பட்டப்படிப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.

தேர்வு செய்யப்படும் முறை:

  • இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வும் அதில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது.
  • எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் வகைத் தேர்வாக நடத்தப்படும்.
  • பார்மசி / பார்மாசூடிக்கல் சயின்ஸ் இவற்றில் 200 கேள்விகள் இடம் பெறும். பட்டப்படிப்பு தரத்திலான தேர்வு இது.
  • கிளினிகல் பார்மகாலஜி பிரிவினருக்கு பட்டமேற்படிப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.

இந்தத் தேர்வானது ஜூலை 26 அன்று நடத்தப்படும்.

விண்ணப்பிக்கும் முறை

இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.155.

இதற்கு http://tnpsconline.tn.nic.in/ என்னும் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.

பிரிண்டட் விண்ணப்பங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 6, 2009.

Source : கல்வி மலர்

தரைப்படையில் ஹவில்தார் பணிவாய்ப்பு

நமது ராணுவத்தின் தரைப்படையில் கல்விப் பிரிவில் ஹவில்தாராக பணிபுரிவதற்கான வாய்ப்பை தரைப்படை அறிவித்துள்ளது.

இது பற்றிய விபரங்கள்...

மொத்த காலியிடங்கள் - 273

  • இதில் அறிவியல் பிரிவினருக்கு 133 இடங்களும், கலைப் பிரிவினருக்கு 140 இடங்களும் ஒதுக்கப்பட்டுள்ளன.

தகுதிகள்:

  • அக்டோபர் 5, 2009 அன்று 20 முதல் 25 வயதுக்குள் இருக்க வேண்டும்.
  • குரூப் எக்ஸ் பணிகளுக்கு பி.ஏ., பி.எஸ்சி., படிப்புகளில் ஒன்றுடன் பி.எட்., தகுதியையும் பெற்றிருக்க வேண்டும்.
  • குரூப் ஒய் பணிகளுக்கு பி.ஏ., அல்லது பி.எஸ்சி., தகுதியைப் பெற்றிருந்தால் போதும். பி.எட்., அவசியமில்லை.
  • பி.எஸ்சி., தகுதியை கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல், விலங்கியல், எலக்ட்ரானிக்ஸ், கம்ப்யூட்டர் சயின்ஸ் இவற்றில் குறைந்தது 2 பாடங்களுடன் பெற்றிருக்க வேண்டும்.
  • பி.ஏ., தகுதியை ஆங்கில / இந்தி / உருது இலக்கியம், வரலாறு, புவியியல், அரசியல் அறிவியல், பொருளாதாரம், உளவியல், கணிதம் அல்லது சமூகவியல் பாடங்களில் இரண்டுடன் முடித்திருக்க வேண்டும்.
  • பொதுவாக ராணுவப் பணிகளுக்குத் தேவைப்படும் உடற்தகுதியைப் பெற்றிருப்பது முக்கியம்.

தேர்வு செய்யப்படும் முறை :

  • உடற்தகுதித் திறனறியும் தேர்வு, மருத்துவத் தகுதித் தேர்வு, எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வு ஆகியவை நடத்தப்படும்.
  • இத்தேர்வில் 2 பகுதிகள் இடம் பெறும்.
  • ஒன்று அனைத்துப் பிரிவினருக்கும் பொதுவான கேள்விகளைக் கொண்டிருக்கும்.
  • மற்றொரு பகுதியில் பி.எஸ்சி., / பி.ஏ., பாடங்களிலிருந்து கேள்விகள் அமையும்.

விண்ணப்பிக்கும் முறை மற்றும் அனைத்து விபரங்களையும் http://indianarmy.nic.in/ என்னும் இணைய தளத்தில் பார்த்துக் கொள்ளலாம்.

சில முக்கியக் குறிப்புகள்:

  • திருமணமாகாத ஆண்கள் மட்டுமே இதற்கு விண்ணப்பிக்கலாம்.
  • 25 வயதுக்குக் குறைவாக இருந்தாலும் திருமணமானவர் என்றால் விண்ணப்பிக்க முடியாது.

விண்ணப்பிக்கும் முகவரி: HQ Rtg Zone, Fort Saint george, Chennai 600009.

விண்ணப்பம் சென்றடைய கடைசி நாள் : ஏப்ரல் 25, 2009.

Source: கல்வி மலர்

வெள்ளி, 10 ஏப்ரல், 2009

பேட்டையில் பெய்தது மாமழை



மரித்துப்போன மனங்களை தனது அருளால் உயிர்ப்பிக்கும் மகத்தான கொடையாளனாகிய அல்லாஹ், வறண்டு போய் இறந்து விட்ட பூமியை செழிப்படைய செய்ய தனது கருணை மழையை இறக்குகிறான். வெக்கையான இரவுகளையும், வெளியே தலை காட்ட முடியாத வெயில் பகல்களையும் அனுபவித்து கொண்டிருந்த பரங்கிபேட்டை மாமக்களுக்கு ஒரு இனிய நற்செய்தியாக இன்று காலை சுமார் அரை மணி நேரம் பொழிந்து தள்ளிய மாமழை மிகப்பெரும் ஆறுதலாக அமைந்தது.

நேற்று கூட லேசாக இங்கும் அங்குமாக தூறல்கள் விழுந்தது. ஆனால், இரவில் அது புழுக்கத்தை ஏற்படுத்தியது. தற்போது பெய்த மழையினால் பொங்கிய நீர் பெய்து முடித்த சில மணித்துளிகளிலேயே காய்ந்து போய் தெருக்கள் மீண்டும் வறட்சியாக காணப்பட்டது இந்த கோடையின் கொடுமையை உணர வைத்தது.