கடந்த சில ஆண்டுகளாக டி.என்.பி.எஸ்.சி., (TAMILNADU PUBLIC SERVICE COMMISSION / தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம்) அறிவித்து வரும் ஆயிரக்கணக்கான அரசுப் பணியிடங்களில் எண்ணற்ற இளைஞர்கள் நுழைந்திருக்கின்றனர்.
மாநிலமெங்கும் வேலையில்லாத இளைஞர்கள் பலருக்கும் எதிர்காலத்தைத் தரும் கற்பக விருட்சமாக அரசு வேலைகள் தான் இருக்கின்றன.
டி.என்.பி.எஸ்.சி., தற்போது டிரக் இன்ஸ்பெக்டர் (Drug Inspector) பணிக்கான 24 காலியிடங்களை அறிவித்துள்ளது. இதற்கான விளம்பரம் கடந்த வாரம் பல செய்தித்தாள்களில் வெளியானது. இப்பணிகளுக்கு ஆன்லைனிலும் விண்ணப்பிக்கலாம்.
தகுதிகள் :
- 1.7.2009 அன்று 18 முதல் 30 வயதுக்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை:
- இப்பணிகளுக்கு எழுத்துத் தேர்வும் அதில் தகுதி பெறுபவருக்கு நேர்முகத் தேர்வும் நடத்தப்படவுள்ளது.
- எழுத்துத் தேர்வானது அப்ஜக்டிவ் வகைத் தேர்வாக நடத்தப்படும்.
- பார்மசி / பார்மாசூடிக்கல் சயின்ஸ் இவற்றில் 200 கேள்விகள் இடம் பெறும். பட்டப்படிப்பு தரத்திலான தேர்வு இது.
- கிளினிகல் பார்மகாலஜி பிரிவினருக்கு பட்டமேற்படிப்பு தரத்தில் கேள்விகள் கேட்கப்படும்.
இந்தத் தேர்வானது ஜூலை 26 அன்று நடத்தப்படும்.
விண்ணப்பிக்கும் முறை
இப்பணிக்கு விண்ணப்பக் கட்டணம் ரூ.155.
இதற்கு http://tnpsconline.tn.nic.in/ என்னும் தளத்திற்குச் சென்று விண்ணப்பிக்கலாம்.
பிரிண்டட் விண்ணப்பங்கள் தலைமை தபால் அலுவலகங்களில் கிடைக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கக் கடைசி நாள் மே 6, 2009.
Source : கல்வி மலர்
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக