புதன், 2 மார்ச், 2011

+ 2 தேர்வுகள் தொடங்கியது.

தமிழகத்தில் மேல்நிலை இரண்டாம் ஆண்டு (+2) தேர்வுகள் இன்று காலை 10.15 மணிக்கு தொடங்கியது. ஆண்டார்முள்ளிபள்ளம் (பெரியப்பட்டு), சாமியார்பேட்டை, முட்லூர், சேவாமந்திர்,பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி, பெண்கள் மேல்நிலைப்பள்ளி, கலிமா, மூனா ஆஸ்திரேலியன் ஆகிய எட்டு பள்ளிக்கூடங்களில் கல்வி பயிலும் மாணவ-மாணவியர் இன்று காலை முதல் பரங்கிப்பேட்டை சேவாமந்திர் கல்வி நிறுவனத்தில் தேர்வு எழுதி வருகின்றனர். 

தேர்வு எழுதும் மாணவ-மாணவியர்களை www.mypno.com சார்பில் வாழ்த்துகிறோம்.



ஸ்டாலின் பிறந்த நாள் விழா..

தமிழக துணை முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நகர தி.மு.கழகத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 9 மணி அளவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் அருகில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், தி.மு.கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பால், வழங்கப்பட்டது, மேலும் பரங்கிப்பேட்டை 17-வது வார்டு செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் 100 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும்-நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹூசேன்,  மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கோ.செழியன், நகர அவைத்தலைவர் S.தங்கவேல்,ஒன்றிய பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி,கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், கவுன்சிலர் M.G.M.ஹாஜா கமால், கவுன்சிலர் M.E.அஷ்ரப் அலி, ராஜு, K.H.ஆரிபுல்லாஹ், ரசூல் கான்,  ஜாபர், பொற்செல்வி உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.  

பரங்கிப்பேட்டையில் CMN சலீம் பங்குபெற்ற கல்விக் கருத்தரங்கம்

பரங்கிப்பேட்டை: அப்பாபள்ளி சமுதாயநலக்கூடம் சார்பில் கல்வி விழிப்புணர்வு கருத்தரங்கம் நடைபெற்றது. இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் முஹமது யூனுஸ் தலைமை தாங்கினார். ஜெய்னுல்லாபுதீன் மாலிமார், லியாக்கத் அலி முன்னிலை வகித்தனர். ஹமீது மரைக்காயர் வரவேற்றுப்பேசினார்.

இக்கல்வி கருத்தரங்கில் சி.எம்.என். சலீம் சிறப்புரையாற்றினார். இன்னும் இருபது வருடங்களில் பரங்கிப்பேட்டை முஸ்லிம்களிடையே மூன்று விஷயங்களில் மாற்றம் ஏற்படவில்லையென்றால் மிகப்பெரும் விளைவுகளை சந்திக்க வேண்டியிருக்கும் என்று தனது உரையினை ஆரம்பித்தார் சி.எம். என். சலீம். தற்போதைய கல்வி முறை, பொருளாதாரம், வாழ்கைமுறையில் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்த வேண்டும் என்று வலியுறுத்தினார்.
முன்னதாக காரைக்கால் இக்ரா பள்ளிக்கூடத்தின் து. தலைமையாசியர் செய்தா பானு முஸ்லிம் பெண்களின் சமுதாய முன்னேற்றம் குறித்து உரை நிகழ்த்தினார். நிகழ்சியின் இறுதியில் மாணவ-மாணவிகளின் கேள்விகளுக்கு சலீம் பதிலளித்தார். இந்நிகழ்ச்சிக்கு ஆண்கள், பெண்கள் பலர் திரளாக வருகை புரிந்தனர்.