புதன், 2 மார்ச், 2011

ஸ்டாலின் பிறந்த நாள் விழா..

தமிழக துணை முதல்வரும், திராவிட முன்னேற்றக் கழகத்தின் பொருளாருமான மு.க.ஸ்டாலின் பிறந்த நாள் நகர தி.மு.கழகத்தின் சார்பில் நேற்று கொண்டாடப்பட்டது. காலை 9 மணி அளவில் பரங்கிப்பேட்டை பேரூராட்சி மன்றம் அருகில் பேரூராட்சி மன்ற தலைவர் M.S.முஹம்மது யூனுஸ், தி.மு.கழக கொடியினை ஏற்றி வைத்து இனிப்புகள் வழங்கினார். தொடர்ந்து பரங்கிப்பேட்டை அரசு மருத்துவமனையில் நோயாளிகளுக்கு பிரட், பால், வழங்கப்பட்டது, மேலும் பரங்கிப்பேட்டை 17-வது வார்டு செயலாளர் சரவணன் ஏற்பாட்டில் 100 ஏழைகளுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.



இந்நிகழ்ச்சியில் கடலூர் மாவட்ட தி.மு.க.பிரதிநிதியும்-நகர இளைஞரணி அமைப்பாளருமான A.R.முனவர் ஹூசேன்,  மாவட்ட பிரதிநிதி காண்டீபன், நகர செயலாளர் J.பாண்டியன், பேரூராட்சி மன்ற துணை தலைவர் கோ.செழியன், நகர அவைத்தலைவர் S.தங்கவேல்,ஒன்றிய பிரதிநிதிகள் M.K.பைசல் யூசுப் அலி,கோமு, நகர இளைஞரணி துணை அமைப்பாளர் வேலவன், கவுன்சிலர் M.G.M.ஹாஜா கமால், கவுன்சிலர் M.E.அஷ்ரப் அலி, ராஜு, K.H.ஆரிபுல்லாஹ், ரசூல் கான்,  ஜாபர், பொற்செல்வி உள்ளிட்ட தி.மு.கழக முன்னோடிகள் கலந்து கொண்டனர்.  

2 கருத்துகள்:

  1. அடடே கேட்ட உட்னேயே போட்டூடீங்க
    ரொம்ப தேங்ஸ்ங்கோ..ஆமா அதிமுக காரங்க ஒன்னா சேந்து அம்மாட பொரந்த்த நால கொண்ட்டடுனா மாதுரி திமுகாரங்க கொண்டாடுலயே முத்து பெருமாள்&கைருன்னிசா இந்த கூட்டதுல missing

    பதிலளிநீக்கு
  2. அண்ணாச்சி,

    நீங்க மேட்டர கேட்டுபுட்டிய, அவுங்க (mypno) போட்டுட்டாங்கோ, வெளிப்படையா நிகழ்ச்சி நடந்ததானே அவுங்களும் நியூஸ் போட முடியும்.

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...