திங்கள், 12 மே, 2008

கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல்

"நமது முக்கியமான பிரச்சனை நமது அடையாளத்தை நாம் உணராததில் துவங்குகிறது. இத்தனை ஆண்டு கால இருப்பில் பரங்கிப்பேட்டைக்கு என்று கூட தனி வரலாறு தொகுக்கப்படவில்லை. 1000 ஆண்டு ஆண்ட பரம்பரையான நமது அடையாளத்தை நம்மை வென்று ஆளவந்த வெள்ளயன் தொகுத்தான். அந்த திரிபுகளத்தான் இன்றும் அனைவரும் படிக்கிறோம். இந்த அடையாள தொலைத்தலின் காரணம்கூட கல்வியின்மைதான்...." இப்படியான போக்குடன் துவங்கி, மிக ஆழமான சிந்தனைகள தூண்டி வந்திருந்த மாணவமணிகள் மற்றும் பெற்றோர்களுக்கு ஒரு தனி சிந்தனை பரிமாணத்தை பரிசளித்தது சி.எம்.என். சலீம் அவர்களின் உரை.
நிச்சயமாக இந்த கல்வி மாநாடு மற்றும் வழிகாட்டுதல் பரங்கிப்பேட்டைக்கு புதிது.
பிற சமுதாயங்கள் கல்விக்கு கொடுத்த முக்கியத்துவத்தினால் அந்த சமுதாயம் கண்ட பலன்கள சி.எம்.என். சலீம் அவர்கள் விரிவாக அலசினார். சுதந்திர இந்தியாவில் முதன் முதலாக முஸ்லிம்களின் நிலை பற்றி ஆராய்ந்த ராஜேந்திர சச்சாரின் கமிட்டியின் அறிக்கையில் படம்பிடித்துக்காட்டப் பட்ட முஸ்லிம்களின் அவல வாழ்நிலையை பிற சமுதாய முன்னேற்றத்துடன் ஒப்பு நோக்கி பேசினார். கல்வியின் முக்கியத்துவம் பற்றி மிகவும் அழுத்தமான பதிவுகள வைத்த அவர், தொடர்ந்து கல்வி வழிகாட்டுதல் தொடர்பான விஷயங்கள கோர்வையாக விளக்கினார்.
ஐ.ஐ.டி., ஐ.ஐ.எம்., என்.ஐ.டி. போன்ற சாமானியர்கள் நெருங்க தயங்கும் கல்வியில் நுழைவது எப்படி என்றும்,
மருத்துவம், பொறியியல், மேலாண்மை மற்றும் பல்வேறு தரப்பட்ட கல்விப்பிரிவுகளயும் அதற்கான தயார்படுத்தல்கள் பற்றியும்,
இந்திய ஆட்சிப்பணி, (ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ்) போன்றவைகள படித்து சாதிப்பதில் எத்தனை எளிதான முறைகள் உள்ளன என்றும்,
டி.என்.பி.சி., யூ.பி.எஸ்.சி போன்ற போட்டித்தேர்வுகள எப்படி எதிர்கொள்வது என்பது பற்றியும், சட்டம் படித்தவர்கள் வழக்குரைஞர்களாகப்போய்தான் சம்பாதிக்க வேண்டியதில்லை, சட்ட கண்ஸல்டண்டகளாக மிக அதிகளவில் பொருளீட்ட முடியும் நிலையைபற்றியும், அதுவும் உள்நாட்டு சட்டம் பற்றியல்லாமல் சர்வதேச மற்றும் மிடில் ஈஸ்ட் சட்டம் பயிலலாம் என்பது பற்றியும், பயன்தரத்தக்க கருத்துக்கள மிகவும் எளிமையான முறையில் பகிர்ந்து கொண்டார்.

தேநீர் இடைவேளக்கு பின்னர் தொடர்ந்த உரையில், பரங்கிப்பேட்டை மட்டுமல்ல சுற்றுவட்டார 3 மாவட்டங்களுக்கு ஒரே ஒரு பெண்கள் கல்லூரிகூட இல்லை என்ற ஆதங்கத்தை பகிர்ந்து கொண்டார். பெண் கல்விக்கு பாதுகாப்பான சூழல்கள நாம் ஏற்படுத்தி தரவேண்டும் என்றும் உணர்த்தினார். (பிற்பாடு கல்விக்குழு தலைவர் பேசுகையில் இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் அவர்கள் பேரூராட்சி மன்றத்தின் தலைவராகவும் இருப்பதால், நமதூரில் பெண்கள் கல்லூரி ஒன்றினை துவங்குமாறு கோரிக்கை வைத்தார்.) இஸ்லாமிய ஐக்கிய ஜமாஅத் தலைவர் எம்.எஸ. முஹம்மது யூனூஸ் அவர்கள் தனது தலைமை உரையில் பரங்கிப்பேட்டை கல்வி வளர்ச்சிக்கு ஜமாஅத் பாடுபட்டு வரும் முறைமைகள விவரித்தார். கடந்த காலங்களில் பள்ளி முதல் நிலை பெற்ற மாணவர்களான நூர் முஹம்மது நைனா, ஹபீபா ஜுலைகா போன்றோர் தங்களது கருத்துக்கள மேடையில் பகிர்ந்து கொண்டது இனிமை.
இந்த கல்வி மாநாட்டிற்கு நிறைவாக வந்திருந்த கூட்டம், இது பரங்கிப்பேட்டைதானா என்ற மெல்லிய வியப்பை ஏற்படுத்தியது. மண்டபத்தின் பக்கவாட்டுச்சுவர்களில் குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் கொண்ட டிஜிட்டல் பேனர்கள் கட்டப்பட்டிருந்தன. மிகவும் எளிமையான முறையில் துவங்கி அழகிய முறையில் ஆர்பாட்டங்கள் ஏதுமில்லாமல் அறிவார்ந்த அடையாளங்களாடு கல்விக்குழு தலைவரின் நன்றியுரையுடன் மாநாடு இனிதே நிறைவுற்றது.

6 கருத்துகள்:

  1. Salam,
    It is highly commendable to conduct such community awareness often to enlighten the general public. Abu princess reports that this gathering is first of its kind in our native, I hope more such educational awareness programs will come up in the offing. Persistent motivation is the key factor for a community to be successful. Personally I believe that such time has come up. Also I request our Honourable Jamath to take the educational issues more seriously towards our youngsters.
    May Allah the Almighty guide us righteously at all time. Aameen

    Jawad H

    பதிலளிநீக்கு
  2. சிறப்பாகத் தொகுத்தளிக்கப்பட்டிருக்கிறது.
    பாராட்டுகள்.

    இந்த வழிகாட்டு அவையில் குறிப்பிடப்பட்ட குறைகளை (குறிப்பாக, மகளிர் கல்லூரி இல்லாத குறை) களைவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் தொடர்ந்த முழுமுயற்சியை மேற்கொள்ள வேண்டும்.

    "நமது முக்கியமான பிரச்சனை நமது அடையாளத்தை நாம் உணராததில் துவங்குகிறது."

    இந்த ஒரு கருத்தினை அனைவரும் சரிவர உணர்ந்துவிட்டாலே போதும்.

    பதிலளிநீக்கு
  3. பெயரில்லா13 மே, 2008 அன்று 4:28 PM

    Assalamu alaikum

    Our identity is that we are the ummah of rasulullah sallallahu alayhi wasallam..

    பதிலளிநீக்கு
  4. அல்ஹம்துலில்லாஹ்....

    இன்னும் பணிகள் செம்மையாக பாராட்டுகள், பரங்கிபேட்டைதாணா? என்ற வியப்பை / ஆச்சிரியத்தை அருமையாக எடுத்து சொல்லியுள்ளிர்கள். நமது விடாமுயற்சியால் இன்னும் வியப்படைய செய்யலாம் இன்ஷா அல்லாஹ்.

    சகோதரர் இப்னு ஹம்துன் கருத்து " மகளிர் கல்லூரி இல்லாத குறை) களைவதற்கு சம்பந்தப்பட்ட அனைவரும் தொடர்ந்த முழுமுயற்சியை மேற்கொள்ள வேண்டும்." முயற்சிப்போமாக இன்ஷா அல்லாஹ்.

    அன்புடன்

    ஹ. முஸ்தபா.
    ரியாத்

    பதிலளிநீக்கு
  5. கல்விக்கான ஒரு உயர்ந்த சிந்தனையுடன் செயலாற்றி வரும் கல்விக் குழுவின் எண்ணங்களையும் - செயல்பாடுகளையும் ஊக்கப்படுத்துவது நமது கடமையாகும்.

    படித்தப்பட்டதாரிகள், பட்டதாரிகளில் வேலை - பொருளாதார நிலையில் உயர்ந்திருப்பவர்கள், பட்டதாரிகளில் வேலையில்லாமல் இருப்பவர்கள் இவர்கள் பற்றிய ஒரு புள்ளி விபரத்தை கல்விக் குழு முயற்சித்து தொகுக்கலாம்.

    நமதூரில் கல்வியாளர்கள், பட்டதாரிகள் பரவலாக இருந்தாலும் அவர்களுக்கு மத்தியிலுள்ள தொடர்பின்மை - அவர்கள் யார்,யார் என்ற விபரம் படிக்கும் மாணவர்களுக்கு தெரியாமை போன்ற இடைவெளிகள் கல்வி சிந்தனையின் தேக்கத்திற்கு ஒரு காரணமாக அமைந்து விட்டது, நீடித்தும் கொண்டிருக்கின்றது இதை மாற்றும் வழி முறைகள் ஏதும் உண்டா?

    பதிலளிநீக்கு
  6. Hello GN,

    It is realy a good thinking as you expressed here. Perhaps some avialble educated upscale thinking personnel can visualize such forum for a society and pool a group of talented personnels for such purpose. As the saying goes, Rome is not built overnight, a small step forward could become a giant leap for our community.
    Can we compile such profile to help our youngsters.

    Jawad H

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...