அண்ணாமலை பல்கலைகழகத்தின் கடல்வாழ் உயிரின ஆராய்சி நிலையம் (Marine Biologocal Station) பரங்கிப்பேட்டையில் இயங்கி வருகிறது. இந்த ஆராய்சி நிறுவனம் பரங்கிப்பேட்டையின் ஒரு முத்திரை பதித்த அடையாளமாக விளங்கி வருகிறது.
முதுகலை மற்றும் ஆராய்சி படிப்புகளை மேற்கொள்வதற்கு மாணவ-மாணவியர்கள் பல்வேறு மாநிலங்களிலிருந்தும் வந்து கல்வி கற்றாலும், பரங்கிப்பேட்டை மாணவர்கள் (மண்ணின் மைந்தர்கள்) இந்த கல்வி கற்பதோ ஆராய்சி மேற்கொள்வதோ என்பதோ என்பது மிக மிக குறைவு.
கடந்த ஒரு சில வருடங்களாகத்தான் சுமார் 8 பரங்கிப்பேட்டை மாணவர்கள் இதில் முதுகலை படிப்பு மேற்படிப்பு மேற்கொண்டு வருகிறார்கள். மதிப்பு வாய்ந்த இந்த ஆராய்சி கல்வி குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் கல்விகுழு சார்பாக இங்கு பயிலும் பரங்கிப்பேட்டை மாணவர் அக்பர் ஜான் என்பவர் ஆராய்சி கட்டுரையை (Thesis Report) மிகவும் திறம்பட தயாரித்து அண்ணாமலைப் பல்கலைகழக துணைவேந்தரிடம் சமர்பித்துள்ளார்.
இதற்காக சிறப்பு நினைவு பரிசும், பாராட்டுச் சான்றிதழும் துணைவேந்தரிடமிருந்து பெற்றுள்ளார்.
இது குறித்து மாணவர் அக்பர் ஜானிடம் கேட்டபோது, கல்விகுழு சார்பாக நான் தயாரித்த இந்த ஆராய்சி கட்டுரை மூலம் இக்கல்வி குறித்து நல்ல விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இவ்வாராய்சி நிலையத்திற்கு பரங்கிப்பேட்டையின் பங்களிப்பை விளக்கவும் செய்துள்ளேன். இதற்காக கல்விக்குழுவிற்கு நன்றி கூறுகிறேன். எனக் கூறினார்.
வாழ்த்துகள் அக்பர்.
பதிலளிநீக்குCongratulation Akbar john
பதிலளிநீக்குAnd say Masha Allah to kalvi kulu
மாணவர் அக்பரின் இம்மாதிரியான முயற்சிகள் தொடர்ந்திட வாழ்த்துக்கள்.
பதிலளிநீக்குCongratulation Akbar, keep up your good works and educate our people about this field. Good luck to you. May Allah bless you.
பதிலளிநீக்குஅஸ்ஸலாமு அழைக்கும்.
பதிலளிநீக்குவாழ்த்துக்கள், தம்பி அக்பர்
இம் மாதிரியான முயற்சிகள் தான் கல்விக்கு விளக்காக அமையும். கண்ணில் தெரிகிறது நமது சமுதாயத்தின் கல்வி வளர்ச்சி வெற்றி அடைவோம் இன்ஷா அல்லாஹ்.
God bless you
பதிலளிநீக்கு