திங்கள், 7 ஜூலை, 2008

இதுவும் கடந்து போகும்...! இன்னும் எத்துனை மாதங்களுக்கு?

இராஜஸ்தான் நிதியுதவிடன் கட்டி முடிக்கப்பட்டு கடந்த ஆண்டிலிருந்தே காத்துக் கிடக்கின்றன அரசு மருத்துவமனையும், அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியும். இதோ! இதோ வருகிறோம்!! இதோ வந்துட்டோம் என்று மாதம் மாதம் ஒரு தேதியை அறிவிக்கிறார்கள் சம்மந்தப்பட்ட அமைச்சர் பெருமக்கள்(?). இரண்டு கட்டிடங்களுமே அத்தியாவசிய பணிகளான மருத்துவம் மற்றும் கல்விக்கென தெரிந்திருந்தும் கூட இவர்கள் இத்தனை இழுத்தடிப்பு செய்கிறார்கள் என்று புரியாத புதிராக இருந்தாலும் இந்த ஏமாற்றங்கள் எல்லாம் வாடிக்கையான விசயமாய் ஆகிவிட்டது வெகுஜன மக்களுக்கு.

போதிய படுக்கைகள் மற்றும் மருத்துவ வசதிகள் இன்றி மிகவும் துன்பத்திற்கு ஆளாகி நிற்கும் நடுத்தர மற்றும் ஏழை மக்கள் வேதனைமிக்க ஆர்வத்தோடு பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்கள்.

தற்போது வண்டிகாரத் தெருவில் இயங்கி வரும் பெண்கள் பள்ளியில் சில வருடங்களாக தமிழைத் தொடர்ந்து ஆங்கிலவழிக் கல்வியும் நடைபெற்று வருகிறது. இதனால் ஆண்டுதோரும் மாணவிகளின் சேர்க்கை கூடி கொண்டு செல்கிறது. மிகுந்த நெருக்கடிக்கு மத்தியில் மாணவிகள் போதிய வகுப்பறைகளின்றி வராண்டாவில் (வெயிலில்) உட்கார வைக்கப்படுகிறார்கள். அதுமட்டுமின்றி மாணவிகளின் எண்ணிக்கை அதிகரித்துள்ளதால் போதிய கழிவறை வசதியில்லாமல் மிகவும் சிரமத்துக்குள்ளாகி உள்ளனர். சில மாணவிகள் வெட்கத்தை விட்டு பேரூராட்சித் தலைவருக்கு போன் செய்து இந்த சிரமத்தை சொல்லியிருக்கின்றனர். பேரூராட்சித் தலைவரும் பொறுமையிழந்து மீண்டும் மீண்டும் முயற்சிகள் எடுத்தாலும் அரசியல் கலந்த மர்மாகவே நீடிக்கின்றது இந்த திறப்பு விழாக்கள்.
இந்த பிரச்சினையை முன்னிறுத்தி கம்யூனிஸ்ட் போன்ற கட்சிகளும் அடிக்கடி ஆர்ப்பாட்டங்கள் செய்து வருகின்றனர். பரங்கிப்பேட்டை கூகிள் குழுமம் சார்பாக மாவட்ட ஆட்சித் தலைவருக்கு மின்னஞ்சல் மற்றும் ஃபாக்ஸ் செய்தி அனுப்பப்பட்டது. இதை மாவட்ட ஆட்சித் தலைவரும் உறுதிப்படுத்தியுள்ளார். மீண்டும் மீண்டும் இவருக்கு பல்வேறு தரப்பினரும் வேண்டுகோள் விடுத்து வருவதால் பொறுமையிழந்து, பேரூராட்சித் தலைவரை போனில் தொடர்பு கொண்டு, 'நீங்களே இதை திறந்து விடுங்களேன்' என சொன்னதாக தகவல்.
இதுகுறித்து ஜமாஅத்தின் முக்கிய நிர்வாகி ஒருவரை தொடர்பு கொண்டு கேட்டபோது, எத்தனை கோரிக்கைகள் வைத்தாலும் இவர்கள் இப்படித்தான் இழுத்தடிப்பார்கள். பொதுமக்கள் நேரடியாக களத்தில் இறங்கி போரடினால்தான் இது முதலமைச்சர் செல்லிற்கு போகும் என்று தன்னுடைய கருத்தை கூறினார்.

8 கருத்துகள்:

  1. ஹும்... இன்னும் எத்தனை காலங்களுக்குதான் இப்படியே ஆதங்கப்பட்டுக்கொண்டிருப்பது?????

    //பேரூராட்சித் தலைவரை போனில் தொடர்பு கொண்டு, 'நீங்களே இதை திறந்து விடுங்களேன்' என சொன்னதாக தகவல்.//

    இத்தகவல் உண்மையெனில் இதை நடைமுறைப்படுத்துவதில் உள்ள சிக்கல் என்ன என்பதை பேரூராட்சித் தலைவர் விளக்குவாரா????

    பதிலளிநீக்கு
  2. assalamu alaikum .....
    thirakamal iruka karanam enna ooril makkal illaya illai yarukum dhairiyam illaiya idhai eduthu ketpadharku......!
    school,hospital, rendume katta patta nilaiel readya irukumbodhu thalaivar enna pannitu irukar.
    collecter idam manu koduthadhuku enna palan.? TNTJ win poratathirku enna palan koaja sindhithu parkaum....? Allah is enough of whole things.

    பதிலளிநீக்கு
  3. may peace be upon you my beloved பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்களெ!
    ஏன் சாவி தொலைந்து விட்டதா? இல்லை ஊரில் மனிதர்கல் எவரும் இல்லையா?{male)
    Allah is enough of whole things

    பதிலளிநீக்கு
  4. எனக்கு தெரிஞ்சி ஒரு வழி தான் உண்டு. என்ன
    தெரியுமா????

    லெட்டர் டூ இண்டியன் எம்பஸி.

    மேட்டர் சிம்பிள்.

    பதிலளிநீக்கு
  5. அது எப்படீ பேரூராட்சி தலைவர் தொரப்பாரு ...தொரந்தா அமைச்சருங்க எல்லாம் கோச்சிபானுங்களே அமைச்சருங்க கோச்சிக்கிட்டா தலைவரு பதவி காலி ஆயிடுமே...

    பதிலளிநீக்கு
  6. May peace be upon you my beloved பூட்டியிருக்கும் புதிய மருத்துவமனை கட்டிடத்தை தரிசித்து மட்டுமே செல்கிறார்களெ!
    ஏன் சாவி தொலைந்து விட்டதா? இல்லை ஊரில் மனிதர்கல் எவரும் இல்லையா?{male)
    Allah is enough of whole things

    பதிலளிநீக்கு
  7. அஸ்ஸலாமஅலைக்கும்.நம்ஊர்மக்கலுக்காக கட்டப்பட்ட மருத்தவமனையும். கல்வியைவளர்கும்பள்ளியையும் திரந்துவைபதிதான் எத்தனைஅரசியல் பகடைகாய்கல் நகர்தப்படுகின்றன ஜனநாயகநட்டில் மக்கலுக்காக கட்டப்பட்டமருத்துவமனையையும் பள்ளிகுடத்தையும் நம்ஊர்மக்களைஒன்றுசேர்த்து திரந்துவைத்தால் ஒன்றும்நடந்துவிடபோவதில்லை இதுஅரசியல்வாதிகலுக்கு ஒருபாடமாகவும்.

    பதிலளிநீக்கு
  8. Where is that “ Bandha Bhawajan” gone; he is showing like good politician and helping to Parangipettai people he is most danger person and is living in others money and due to him all Parangipettai Muslim people going to get very bad name..........

    Regards

    Rafeek Babu
    Cuddalore

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...