எந்த ஆட்சிக் காலத்திலும் சபிக்கப்பட்ட சாலையாக பரங்கிப்பேட்டையில் மிக மோசமாக விளங்குவது பெரியத் தெரு நெடுஞ்சாலையே. இதன் விடிவெள்ளியாக தற்போது ஆலப்பாக்கத்திலிருந்து மெயின் ரோடு வரை புதிய சாலைப் போடும் பணிகள் ஓரளவு துவங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் பெரியத் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் போடும் திட்டத்திற்காக சாலையின் இரு ஓரங்களிலும் பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், மோசமான நிலை காரணமாகவும் இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகள் நகுதா மரைக்காயர் தெரு வழியாக திருப்பப்படுகிறது.
ஆனால் ஒரு சில பேருந்துகள் (அதுவும் சில நேரங்களில்) மட்டுமே வாத்தியாப்பள்ளி, புதுகுப்பம் வரை நகுதா மரைக்காயர் தெரு வழியாக சென்று வருகிறது. பெரும்பாலான பேருந்துகள் பெரியத் தெரு முனையிலேயே திரும்பி விடுகின்றன. இதன் காரணத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ-மாணவிகள் குறிப்பாக வெளியூர் சென்று பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகுள்ளாகி நிற்கின்றனர். வாத்தியாப்பள்ளி பகுதி மற்றும் சலங்குகாரத்தெரு பகுதி மாணவர்கள் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.
இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு டவுன் பஸ் திருப்பப்பட்டு நகுதாமரைக்காயர் தெரு வழியாக சென்றபோது, ஹபீப் தோட்டம் அருகில் இருக்கும் புதரின் காரணமாக இப்பேருந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் மின்கம்பம் மிகவும் சேதமடைந்தது மட்டுமின்றி, மின்சாரமும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டது. இப்பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்திற்கு 18000 ரூபாய் கொடுத்து விசயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க கோரியுள்ளாராம். ஏனென்றால் இன்னும் சில மாதங்களில் பணிநிரந்தரம் பெற உள்ளதால் எங்கே விசயம் தெரிந்தால் தன்னுடைய வேலைக்கு வேட்டு ஏற்பட்டுவிடமோ என்கிற அச்சம்தான் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.
செவ்வாய், 8 ஜூலை, 2008
வெளிச்சமூட்டிய வெளக்குகள்
இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...
-
பரங்கிப்பேட்டையில் நேற்று முன்தினம் (18- ஜூன் -2024) மாலை சூறைக்காற்றும் , மழையும் பெய்திருந்த நிலையில் நேற்று (19- ஜூன் -2024) மாலை...
-
கடலூர் மாவட்டத்தில் உள்ள தேர்வு நிலை பேரூராட்சியான பரங்கிப்பேட்டை பரப்பளவிலும், மக்கள், தொகையிலும், வருவாயிலும் மற்ற பகுதிகளை விட சிறந்து வி...
-
தங்களின் தெருப் பெயர் நீக்கப்பட்டிருந்தால் என்ன செய்யப் போகிறீர்கள்? பரங்கிப்பேட்டை வாக்காளப் பெருங்குடி மக்களே... வார்டு உறுப்பினர்களே...!...