அவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
அவதி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 24 ஜூன், 2009

நடை பாதையில் நடமாடும் வியாபாரிகள்


கடந்த ஆறு மாதங்களுக்கு முன்பு போக்கு வரத்து நெரிச்சலை சமாளிபதர்காகவும் மக்கள் இடையூர் இன்றி நடபதர்க்காகவும் பரங்கிபேட்டை சந்சிவீராயர் கோவில் தெருவில் நடைபாதை அமைக்கப்பட்டது.

தற்போது அங்கு பல கடை, சர்பத் கடை, பாணிபுரி கடை மற்றும் இது போன்ற அன்றாட கடைகள் அவிடத்தை ஆக்கிரமிச்சி விட்டனர்.


பள்ளிக்கு செல்லும் மாணவர்கள், மருத்துவமனைக்கு செல்லும் நோயாளிகள், வேளைக்கு செல்பவர்கள் மற்றும் பலர் நிற்பதற்கு கூட இடம் இல்லாமல் கடும் அவதிக்கு உள்ளாகிவருகின்றனர்.


பேரூராச்சி மன்றம் நடவடிக்கை எடுக்குமா என்று பொருத்து இருந்து பார்ப்போம்!

நன்றி: கிரசண்ட நல்வாழ்வு சங்கம்

வெள்ளி, 18 ஜூலை, 2008

தொடர் மின்வெட்டால் பொதுமக்கள் அவதி

பரங்கிப்பேட்டையில் ஏற்படும் அறிவிக்கப்படாத தொடர் மின் நிறுத்தத்தினால் பொதுமக்கள் மிகவும் அவதிபடுகின்றனர். நகரில் தினமும் சுமார் 2 மணிநேரத்திற்கு இரவிலும், பகலிலும் மின்வெட்டு ஏற்படுகின்றது. இதுமட்டுமின்றி இன்றும் (வெள்ளி) கடந்த செவ்வாய் அன்றும் 6 மணிநேரம் மின்சாரம் அறிவிப்பு இல்லாமல் நிறுத்தப்பட்டது. இது குறித்து மின்வாரியத்தை கேட்டபோது, "இனி பிரதி செவ்வாய் கிழமைகளில் பகல் 12 மணி முதல் மாலை 6 மணி வரையிலும், வெள்ளி கிழமைகளில் காலை 6 மணி முதல் பகல் 12 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படும்" என்று தெரிவிக்கப்பட்டது. இது தவிர தமிழ்நாடு முழுவதும் மின்உற்பத்தி தட்டுப்பாட்டினால் தினமும் 2 மணிநேரம் மின்னிறுத்தம் செய்யப்படும் என்று மின்வாரிய அமைச்சகம் இன்று செய்தி வெளியிட்டுள்'ளது.

செவ்வாய், 8 ஜூலை, 2008

சாலைப் பணி முடக்கம்: பள்ளி மாணவர்கள், பொதுமக்கள் அவதி.

எந்த ஆட்சிக் காலத்திலும் சபிக்கப்பட்ட சாலையாக பரங்கிப்பேட்டையில் மிக மோசமாக விளங்குவது பெரியத் தெரு நெடுஞ்சாலையே. இதன் விடிவெள்ளியாக தற்போது ஆலப்பாக்கத்திலிருந்து மெயின் ரோடு வரை புதிய சாலைப் போடும் பணிகள் ஓரளவு துவங்கியிருப்பது ஆறுதல் அளிக்கிறது. அதே வேளையில் பெரியத் தெருவில் நடைபெற்று வரும் மழைநீர் வடிகால் கால்வாய் போடும் திட்டத்திற்காக சாலையின் இரு ஓரங்களிலும் பள்ளம் வெட்டப்பட்டுள்ளது. இதன் காரணமாகவும், மோசமான நிலை காரணமாகவும் இந்த சாலை வழியாக செல்லும் பேருந்துகள் நகுதா மரைக்காயர் தெரு வழியாக திருப்பப்படுகிறது.

ஆனால் ஒரு சில பேருந்துகள் (அதுவும் சில நேரங்களில்) மட்டுமே வாத்தியாப்பள்ளி, புதுகுப்பம் வரை நகுதா மரைக்காயர் தெரு வழியாக சென்று வருகிறது. பெரும்பாலான பேருந்துகள் பெரியத் தெரு முனையிலேயே திரும்பி விடுகின்றன. இதன் காரணத்தால் பொதுமக்கள் மட்டுமின்றி மாணவ-மாணவிகள் குறிப்பாக வெளியூர் சென்று பயிலும் மாணவர்கள் பெரும் அவதிகுள்ளாகி நிற்கின்றனர். வாத்தியாப்பள்ளி பகுதி மற்றும் சலங்குகாரத்தெரு பகுதி மாணவர்கள் இதனால் மிகவும் சிரமப்படுகின்றனர்.

இரண்டு நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஒரு டவுன் பஸ் திருப்பப்பட்டு நகுதாமரைக்காயர் தெரு வழியாக சென்றபோது, ஹபீப் தோட்டம் அருகில் இருக்கும் புதரின் காரணமாக இப்பேருந்து அருகில் இருந்த மின்கம்பத்தில் மோதி நின்றது. இதனால் மின்கம்பம் மிகவும் சேதமடைந்தது மட்டுமின்றி, மின்சாரமும் அப்பகுதியில் துண்டிக்கப்பட்டது. இப்பேருந்து ஓட்டுநர் மின்வாரியத்திற்கு 18000 ரூபாய் கொடுத்து விசயத்தை பெரிதுபடுத்தாமல் இருக்க கோரியுள்ளாராம். ஏனென்றால் இன்னும் சில மாதங்களில் பணிநிரந்தரம் பெற உள்ளதால் எங்கே விசயம் தெரிந்தால் தன்னுடைய வேலைக்கு வேட்டு ஏற்பட்டுவிடமோ என்கிற அச்சம்தான் என்கிறது நம்பத்தகுந்த வட்டாரம்.