வியாழன், 17 ஜூலை, 2008

விரும்பிய பாடப்பிரிவுகள் கொடுக்காததால் பள்ளி மாணவர்கள் தவிப்பு

பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல் நிலைப் பள்ளியில்
படிக்கும் மாணவர்களுக்கு பிளஸ் 1 சேர்க்கையில் விரும்பும் பாடப்பிரிவுகள் கிடைக்காததால் மாணவர்கள் அதிருப்தியடைந்துள்ளனர். பரங்கிப்பேட்டை அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். எஸ்.எஸ்.எல்.சி., தேர்ச்சி பெற்று பிளஸ் 1-ல் சேருபவர்களுக்கு விரும்பிய பாடப் பிரிவுகள் கொடுக்காமல் சில பிரிவுகளை மட்டும் முடிவு செய்து அதில் சேர கட்டாயப்படுத்தி சேர்த்து விடுகின்றனர். இதனால் மாணவர்கள் விரும்பிய பாடப் பிரிவுகள் கிடைக்காமல் அதிருப்தியில் உள்ளனர். மதிப்பெண்களுக்கு ஏற்ப மாணவர்கள் விரும்பும் பாடப் பிரிவுகள் கொடுக்க வேண்டும் என அரசு விதிமுறை இருந்தும் சில பிரிவுகளில் மட்டும் வற்புறுத்தி சேர்ப்பது மாணவர்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது.

இதுகுறித்து மாணவர்கள் பெற்றோர் ஆசிரிய கழக பொருளாளர் ஜெகநாதனிடம் புகார் செய்துள்ளனர். கடந்த ஆண்டு பிளஸ் 2 பொதுத் தேர்வில் குறைந்தளவு சதவீதமே பெற்ற நிலையில் மாணவர்கள் விரும்பும் பாடப்பிரிவுகளை கொடுக்காமல் இருந்தால் தேர்ச்சி சதவீதம் மேலும் குறைய வாய்ப்புள்ளதாக பாதிக்கப்பட்ட மாணவர்களின் பெற்றோர்கள் புகார் கூறுகின்றனர்.

நன்றி - தின மலர்

1 கருத்து:

  1. முக்கியமாக முஸ்லிம் மாணவர்கள் ப்ளஸ் ஒண்ணில் சேர மேற்படி ஆசிரியர்களிடம் ஆலோசணை கேட்டால் அவர்கள் வேண்டுமென்று சி குரூப் அல்லது டி1, டி2 என்கிற மதிப்பற்ற Vocational குரூப்பில் சேருவதற்கு தவறான ஆலோசணை வழங்குவதாக ஒரு கேள்வி (குற்றச்சாட்டு). இதனால் ப்ளஸ் 2 விற்கு பிறகு இம்மாணவர்கள் முக்கிய பயனுள்ள மேற்படிப்பில் சேர முடியாமல்B.Com B.Sc என்று சேர்ந்துவிடுகின்றனர். இதனால் மற்ற உயர்கல்வி இவர்களுக்கு சாத்தியமில்லாமல் போய்விடுகிறது.

    பதிலளிநீக்கு