புதன், 30 ஜூலை, 2008

களைகட்டும் கச்சேரி தெரு - பரங்கிப்பேட்டையின் முதல் நடைமேடை.


லேட்டாக முடிந்தாலும் லேட்டஸ்டாக முடிந்துள்ளது கச்சேரி தெருவின் நடைமேடையின் கூடிய புதிய தார்சாலை. கடந்த ஜனவரி மாதம் திட்ட பணிகள் ஆரம்பித்து மழை மற்றும் இதர காரணஙகளால் இழுத்தடிக்கப்பட்ட இத்திட்டப் பணி தற்போது முழுமையடைந்துள்ளது. சாலையின் இரு ஓரங்களிலும் நடைமேடை போடப்பட்டு கச்சேரி தெரு களைகட்டுகிறது. இது பரங்கிப்பேட்டையில் அமைந்துள்ள முதல் நடைமேடை என்கிற பெருமையை பெறுகிறது.

5 கருத்துகள்:

  1. அழகு படங்களை போட்டு அசத்தியுள்ளீர்கள். அடுத்தமாதம் ஒரு போட்டோ (அதே தெருவை) போடுங்கள். இந்த அழகு நீடிக்கின்றதா என்று பார்ப்போம். (நீடிக்க வேண்டும் என்று ஒரு ஆசைதான்)

    பெரியத் தெரு பணிகள் எந்த அளவு முடிந்துள்ளது? அதுபற்றி ஒரு போட்டோ போடுங்களேன்.

    பதிலளிநீக்கு
  2. கச்சேரி(தெரு)ன்னா மேடை இல்லாமலா:-)ம்ம்ம் களை கட்டி நீடிக்கட்டும்.

    பதிலளிநீக்கு
  3. The place actually looks great. Maybe inshallah porto nova might improve in years to come. Lets hope it is for the better...

    பதிலளிநீக்கு
  4. கண்ணனுக்கு குளிர்ச்சியாக இருக்கிறது, நீடிக்கனும்.

    சின்னகடையின் நிலைமை எவ்வாறு இருக்கிறது என்று அறியதருங்களேன்.

    பதிலளிநீக்கு
  5. இப்போ பாக்குறதுக்கு நல்லா தான் இருக்கு.. புதுசில அப்படிதான் இருக்கும்..

    இன்னும் கொஞ்ச நாள்ள PLATFORM வியாபரிகள் நடைமேடைய அலங்கரிப்பாங்க...

    அப்ரம் மாடு ஏன் கொட்டகையில தூங்கனும்... அதான் அரசே நடைமேடை போட்டிருக்கேனு எல்லாம் அங்கே வந்துடும்..

    ரோடும் நடைமேடையும் சமமாகி வாகனங்கள் நிற்க சரியான இடமாகிடும்..

    ஒரு 6 மாசம கழிச்சு photo எடுத்து போடுங்க... பார்த்துட்டு சொல்ரோம்..

    பதிலளிநீக்கு

வெளிச்சமூட்டிய வெளக்குகள்

இன்று நினைத்து பார்க்க முடியாத அளவில் விஞ்ஞானம் வளர்ந்து விட்டது. அன்று தாமஸ் ஆல்வா எடிசன் என்கிற ஒரு விஞ்ஞானி கண்டுபிடித்த ஒரு 'டங்ஸ்டன...